Ads

ads header

Ad Code

Google adsense

Wednesday, July 3, 2019

லிங்கத் திருமேனி

சிவன், பிரம்மா, விஷ்ணு என்ற மும்மூர்த்திகள் யாரென்றே தெரியாமல் கதையளக்கும் அறிவிலிகளுக்கு இதோ திருமூலரின் விளக்கம்.

மும்மூர்த்திகளின் வடிவமாக கருதி வணங்கப்படும் சிவலிங்கம் அதற்கான விளக்கத்தை கொடுக்கிறது.

சிவலிங்கம் என்பது அணு அமைப்பை விளக்கும் உருவகம். இவ்வுலகில் எல்லாமும் அணுக்களால் ஆனவையே.

ஒரு அணு என்பது நடுவில் புரோட்டான்கள்+ நியூட்ரான்களால் ஆன ஒரு உட்கரு மற்றும் அந்த கருவை வட்டப் பாதையில் சுற்றி வரும் எலெக்ட்ரான்கள்.

புரோட்டான்கள் - நேர் மின் சக்தி கொண்டவை
எலெக்ட்ரான்கள் - எதிர் மின் சக்தி கொண்டவை
நியூட்ரான்கள் -  சமநிலை கொண்டவை.

நியூட்ரான்களின் வேலை: நேர் மின் சக்தி கொண்ட புரோட்டான்கள் ஒன்றை ஒன்று விலக்கிக்கொள்ளாமல் அவற்றின் இடையில் நின்று நடுநிலை வகித்து
அணு கருவை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது.

புரோட்டான்களின் வேலை: எதிர் மின் சக்தி கொண்ட எலெக்ட்ரான்கள் சிதறி ஓடாமல் அவற்றை தன் நேர் மின் சக்தியால் இழுத்து வைத்திருப்பது.

மைய விலக்கு விசை: எதிர் எதிர் மின் சக்தி கொண்ட புரோட்டான்களும், எலெக்ட்ரான்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து விடாமல் தடுப்பதற்காக எலெக்ட்ரான்களை வட்டப் பாதையில் வேகமாக சுற்ற வைப்பது.

எலெக்ட்ரான்களை ஏன் இப்படி தனித்து சுற்ற வைக்க வேண்டும்?
ஏனெனில் எலெக்ட்ரான்கள் தான் இரண்டு அணுக்களை இணைத்து ஒரு மூலக்கூறை உருவாக்குகின்றன.

இந்த விளக்கம் இக்காலத்து விஞ்ஞானிகள் விளக்கம். வேதகாலத்தில் இது எவ்வாறு விளக்கப்பட்டுள்ளது?

நியூட்ரான்கள்(Neutrons) = மகேஸ்வரன்
புரோட்டான்கள்(Protons) = விஷ்ணு
எலெக்ட்ரான்கள்(Electrons) = பிரம்மா
மைய விலக்கு விசை(Centrifugal force) = சக்தி

மகேஸ்வரன் அல்லது சிவன்(Neutron): அணுவின் மையத்தில் நடுநிலை வகித்து அதை கட்டுகோப்பாக வைப்பதால், சிவன் தவக் கோலத்தில் இருப்பதாக கூறுகிறோம்.

விஷ்ணு(Proton): எதிர் மின் சக்தியை சிதறவிடாமல் 'காக்கும்' நேர் மின் சக்தி அதனால் விஷ்ணு 'காக்கும்' கடவுள் என்கிறோம்.

பிரம்மா(Electron): அணுக்களை இணைத்து மூலக்கூறுகளை  'படைப்பவர்'. அதனால் பிரம்மாவை 'படைப்புக்' கடவுள் என்கிறோம்.

சக்தி (Centrifugal force): அணுக்ளை இயக்கி மூலக்கூறுகளை உருவாக்கும் போது அந்த சக்தியை 'ரேணுகா' என்று அழைக்கிறோம். 'ரேணு' என்றால் மூலக்கூறு.

அணுசக்தி: ஒரு அணுவின் உட்கருவில் உள்ள நியூட்ரான்கள் தாக்கப்படும் போது சக்தி பலமடங்கு பெருகி அணுசக்தியாக(Nuclear power) மாறும். அது பேரழிவை உண்டாகும். அந்த அணு சக்தியே 'காளி' என்றழைக்கப்படும். சிவனை 'அழிக்கும்' கடவுள் என்கிறோம். இதையே நாம் சிவனுடைய யோக நிலை கலைந்தால் அவர் ருத்ர தாண்டவம் புரிவதாகக் கூறுகிறோம். இதையேதான் சிவனுடைய தவம் கலையும் போது அவருடைய நெற்றிக்கண் தீப்பொறியை உமிழ்ந்து அழிப்பதாகக் கூறுகிறோம்.

நியூட்ரான்கள் அதாவது சிவன் அமைதியாக இருக்கும் போது அணுவை இயக்கி மூலக்கூறுகளை உருவாக்கும் போது ரேணுகாவாகவும், சிவன் தாக்குதலுக்கு உள்ளாகும்போது அணு சக்தியாக உருவெடுத்து காளியாக மாறுவதாலும் சக்தியை சிவனில் பாதி என்று பொருள் படும்படி சக்தி சிவனுக்கு 'மனைவி' என்கிறோம்.

சிவலிங்கம் = அணு(Atom)
முட்டை வடிவ ஆவுடையார் = அணு உட்கரு( சிவனும் விஷ்ணுவும்)(Nucleus={Protons + Neutrons})
வட்ட வடிவ பீடம் = பிரம்மா (Electrons)
அந்த பீடத்தில் உள்ள மூன்று வட்ட வடிவ கோடுகள் = சக்தி(Centrifugal force)

                  ஓம் நமச்சிவாய!

1 comment:

  1. Thesе are genuіneⅼy great iԁeas in aƅout blogging.
    Yoоu have toched some goߋd things here.
    Аny way keep up wrinting.

    ReplyDelete

Powered by Blogger.

Ad

Ad Code

Google Ad