பஞ்சபட்சி - 2 வளர் பிறை தேய்பிறை பட்சிகள்


வளர்பிறை + தேய்பறை நட்சத்திரம் பஞ்சபட்சி

அஸ்வினி, பரணி. கார்த்திகை. ரோகிணி, மிருகசீரிஷம் இந்த நட்சத்திரங்களுக்கு  வளர்பிறையில்-வல்லூறு- (அகரம்) பட்சியாகவும், தேய்பிறை (அகரம்) –மயில் பட்சியாகவும் வரும்.

திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வளர்பிறை யில் (இகரம்) -ஆந்தை- தேய்பிறையில் -கோழிபட்சியாகவும் வரும்.

உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வளர்பிறை-(உகரம்) யில் பிறந்தவர்களுக்கு -காகம் பட்சியாகவும், தேய்பிறையில் பிறந்தவர்களுக்கு  -காகம் பட்சியாகவும் வரும்.

அனுசம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் இந்த நட்சத்திரங்களில்  வளர்பிறை-(எகரம்) யில் பிறந்தவர்களுக்கு கோழி பட்சியாகவும், தேய்பிறையில் பிறந்தவர்களுக்கு -ஆந்தை பட்சியாகவும் வரும்.

திருவோணம், அவிட்டம், யம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி இந்த நட்சத்திரத்தில் வளர்பிறை –(ஒகரம்) யில் பிறந்தவர்களுக்கு –மயில் பட்சியாக வரும்.. தேய்பிறையில் பிறந்தவர்களுக்கு –வல்லூறு பட்சியாக வரும்.

- பாலமுருகன், ஜோதிடர்

Post a Comment

0 Comments