பஞ்சபட்சி - 1


காலையில் எழுமுன் சுவாசத்தை நமது புறக்கையை நாசியில் கை வைத்து பார்க்கும் போது சுவாசம் எந்தப்பக்கம் வருகிறது என்று தெரியும் அன்று எந்த பக்கம் சுவாசம் வரவேண்டுமோ அதற்கு எதிர்பக்கம் கையை மடித்து தலைக்கடியில் வைத்து ஒருக்களித்து படுத்தால்  நீங்கள் விரும்பும் பக்கம்  சுவாசம் வரும்.
படுக்கை விட்டு எழுமுன் செய்ய வேண்டும். இது எளிய முறை.

சரகலை என்ற சுவாசம் பற்றிய தெளிவே பஞ்சபட்சி சாஸ்திரம்

உங்கள் சுவாச இயக்கம் உங்கள் கர்மா படி.
கர்மாபடியே உங்கள் சுவாசம்.

ராட்சசம், தாமசம்சாத்வீகம்
என்ற முக்குணங்களின் வழியாக சுவாசம் கர்மாவை செயல் படுத்தும்.
உங்கள் உடல்கூறுபடி சுவாசம் அட்டவணை உண்டு
நீங்கள் இப்போது அறிந்த அல்லது படித்த பஞ்சபட்சி அட்டவணை அண்டத்துக்கானது இது பஞ்சாங்கம் போன்றது
உங்கள் கர்மாவின்படி சுவாச அட்டவணை உங்கள் சுய ஜாதகம் போன்றது.
பஞ்ச பட்சிகள் ஐந்து.
வல்லூறு, ஆந்தை, காகம், கோழி மற்றும் மயில்.
இவை பஞ்ச பூத இயக்கங்களோடு ஒத்திட்டிருக்கும்.

- பாலமுருகன், ஜோதிடர்.

Post a Comment

0 Comments