வறுத்த உப்பின் பயன்கள்

கல் உப்பை வறுத்து வைத்துக் கொண்டு, அதன்பின்னர் தான் சமையலில், உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்...

கல் உப்பை வறுப்பதா...??? ஏன்...???

அவசியம் படியுங்கள்...!

சிறுநீரக  பாதிப்புக்கு முக்கிய காரணம் நம்முடைய அஜாக்கிரதைதான். 
மேலும் சிறு நீரை அடக்குவதால் வரும் விளைவு.

ஒரு தாய் பத்து மாதம் குழந்தையை பெற்றெடுத்த பின் தாயின் அடி வயிறை பார்த்தால் வயிறு மடிப்பாக இருக்கும். 
அதே போல் சிறுநீர் பை நிறைந்து பெரியதாக இருக்கும். சிறுநீர் கழித்த பின் சிறுநீர் பை சுருங்கி மடிப்பு ஏற்படும். 
அந்த மடிப்பில் உப்பு தங்கி விடும்.

இப்படி தேங்கும் உப்பு தான் சிறுநீரக கோளாறை உண்டாக்குகிறது.

அதே போல் கடற்கரை ஓரத்தில் ஒரு இரும்பு கம்பியை நட்டு வைத்து விட்டு ஒரு வருடம் கழித்துப் பார்த்தால், கடல் உப்புக் காற்று அந்த இரும்பைத் தின்று விடும். அந்த கம்பியைத் தட்டினால் அது கீழே விழுந்து விடும். 

அது மட்டுமல்ல,  ஒரு சிறுநீர் கழிப்பிடத்தை கட்டி ஆறு மாதம் கழித்துப் பார்த்தால் அங்கு மஞ்சள் நிறத்தில் தக்கை தக்கையாக கட்டி கட்டியாக உப்பு இருக்கும்.

சமையலுக்கு பயன் படுத்தும் உப்பை அப்படியே பயன் படுத்தக் கூடாது. ஒரு இரும்புச் சட்டியில் போட்டு உப்பை நன்கு வறுக்க வேண்டும். அப்போது உப்பானது பட படவென்று வெடிக்கும். உப்பு இவ்வாறு வெடித்தால் அதில் கலந்துள்ள விஷத்தன்மை நீங்குகிறது என்று அர்த்தம்.

இப்படி வறுக்கப்பட்ட உப்பைத்தான் உணவுகளில் சேர்க்க வேண்டும். 

உதாரணமாக இரண்டு புதிய இரும்பு சட்டிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு சட்டியில் வறுத்த உப்பையும், மற்றொரு சட்டியில் வறுக்காத உப்பையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆறு மாதங்கள் இரு சட்டிகளையும் அசையாமல் அப்படியே வைக்க வேண்டும். பிறகு இரண்டு சட்டிகளிலும் உள்ள உப்பை கீழே கொட்டி பார்த்தால் வறுத்த உப்பு இருந்த சட்டி புதிது போல் அப்படியே இருக்கும். ஆனால் வறுக்காமல் போட்ட உப்பு இருந்த சட்டியின் அடியில் துருப்பிடித்து ஓட்டையாக இருக்கும். ஆடாமல் அசையாமல் அப்படியே இருக்கக் கூடிய இரும்பு சட்டியே துருப்பிடித்து ஒட்டையாக போய் விடுகிறது.

நம் சிறுநீரகத்தில் ஏற்படும் விளைவுகளும் அதுவே.

இந்த உண்மை தகவலை பார்த்தாவது அனைவரும் உப்பை வறுத்து சமையலில் பயன் படுத்தி கிட்னி பாதிப்பில்லாமல் வாழ, முழு முயற்சி செய்வோம்...

Post a Comment

4 Comments

 1. நல்லதொரு பயனுள்ள தகவல்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அய்யா!

   Delete
 2. மிக்க நன்றி பயனுள்ள தகவல்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோதரி!

   Delete