நிம்மதி

நிம்மதி

எதை தேடுகிறாய்
எங்கே தேடுகிறாய்
நீ தேடுவது உன்னிடத்தில்
உள்ளதே.....நிம்மதி

பணத்தின் பின்னால் ஓடி
வாழவே மறந்து....பாசத்தை மறந்து....வேதனையை சுமந்து....ஓடுகிறான் உறவின் பின்னே.....அதில் மிஞ்சியது துரோகம் மட்டுமே!

வாழ்க்கையில் நிம்மதியை கடைசி வரை தேடுகிறான்!

நிம்மதியில் மதியிருந்தும்
பலரும் மதிக்காமலே இருக்கின்றனர் நிம்மதியை!

தேடிக்கொண்டே இருக்கின்றனர்...நிம்மதியை
அனைவருக்கும் நிம்மதி
கிடைத்தால் நிம்மதியே!

உண்மையில் நிம்மதி எங்கும்
காணாமல் போகும் பொருள்
இல்லை. அது நம்முள்ளே
மறைந்துள்ளது.

வாழ்க்கையை அணு அணுவாக ரசித்து வாழ்ந்தாலே...கஷ்டங்களும்
நிம்மதியாய் கடந்தே செல்லும்!

அன்பில்,பாசத்தில்,உதவி
செய்வதில்,சோகத்திலும்,
மகிழ்ச்சியிலும்.....இப்படி
அனைத்திலும் கிடைக்கின்றது
நிம்மதி!

இனி நிம்மதியான வாழ்க்கையை...நிம்மதியாய்
வாழ்ந்துக் காட்டுவோம்!
நன்றி

சகோதரி உமாமகேஸ்வரி
இயற்கை மருத்துவ ஆலோசகர்

Post a Comment

0 Comments