ஆன்மாவின் குடும்பம்

*ஆன்மாவின் குடும்பம் !*

ஆன்மாவிற்கு மனைவிமார்கள்   மூன்று பேர்
அவர்களின் பெயர் ஆணவம் ,மாயை ,
கன்மம். . . . . .

இந்த மூவறைத்தான் மூன்று மலங்கள் என்று சமயங்களில் சொல்லப்படுகின்றது.

வள்ளலார் ஐந்து மலங்கள் என்று சொல்லுகின்றார்.அவை.ஆணவம் மாயை.மாமாயை.பெருமாயை.கன்மம்.
என்பதாகும்.

வள்ளலார் சொல்லும் விபரம் வருமாறு !

ஆன்மாவின் முதல் மனைவி ஆணவம் என்பதாகும்.

ஆணவத்திற்கு பிறந்தது ஒரு குழந்தை அதன் பெயர் அஞ்ஞானம் என்றும் ,   ஜீவன் என்றும் உயிர் .என்றும் பெயராகும். .

இரண்டாவது மனைவி மாயை ! மாயையைக்குப்  பிறந்த குழந்தைகள் நான்கு பேர், அவர்கள் பெயர்  ,

மனம் புத்தி, சித்தம் ,அகங்காரம் என்பவர்களாகும்

மூன்றாவது மனைவி காமியம் என்றும் கன்மம் என்று பெயர்.!

கன்மத்திற்குப் பிறந்த குழந்தைகள் சத்துவம் ,ராஜசம் ,,தாமசம் என்னும் மூன்று குழந்தைகள் அவைதான் மூன்று குணங்கள் .என்பதாகும் ,

குடும்ப உறுப்பினர்கள் ஆன்மாவை சேர்த்து 12, பண்ணிரெண்டு நபர்கள் .

ஆன்மா இந்த பஞ்ச பூத உலகத்தில் வாழ்வதற்கு மாயையினால் தான் உடம்பு என்னும் வாடகை வீடு கட்டிக் கொடுக்கப் படுகிறது

உடம்பு வாடகை வீடு !

இந்த உலகத்தில் ஆன்மாவின் குடும்பம் வாழவதற்கு வீடு வேண்டும் .வீடுதான் பஞ்ச பூத அணுக்களால் கட்டிக் கொடுக்கப்பட்ட உடம்பாகும்.அதற்கு வாடகை வீடு(குடிக்கூலிவீடு) என்று பெயர் ,இந்த வீட்டின் தலைவர்கள் மூன்று பேர் ,

அவர்களின் பெயர் ,வாதம் பித்தம் சிலேஷ்மம் என்பதாகும் ,

ஆன்மா வாடகை உடம்பு என்னும் வீட்டில் குடித்தனம் நடத்த தினமும் மூன்று வேலையும் உணவு என்னும்  பொருள் வாடகையாக கொடுக்க வேண்டும் .

வாடகை வசூல் செய்பவர்கள் மூன்று பேர் ,அவர்கள் தான் வாதம் பித்தம் சிலேஷ்மங்கள் என்னும் தயவே இல்லாமல் தினமும் வசூல் செய்பவர்கள்

வாடகை என்பது தான் உணவு.

பிண்டம் என்னும் பெரும் கூலி வாங்குபவர்கள் .

இவர்கள் செய்யும் கொடுமைகள் அளவில் அடங்காதது ,இவர்களுக்காக உழைத்து உழைத்து வாழ்நாள் எல்லாம் வருந்தி வருந்தி ,அலைந்து அலைந்து ,திரிந்து திரிந்து ,வயது முதிர்ந்து நோய் வாய்பட்டு இறுதியில்.உணவு என்னும் வாடகை கொடுக்க முடியாமல் மரணம் வந்து விடுகின்றது.

வீட்டை விட்டு ஆன்மா வெளியேறி வேறு வாடகை வீட்டிற்கு செல்வதுதான் மறுபிறப்பு என்பதாகும்.

மேலும் வழி தெரியாமல் பிறந்து பிறந்து ,இறந்து இறந்து வாழந்து வாழ்ந்து.பிறவி எடுத்துக்  கொண்டே இருக்கின்றோம். .

உணவு என்னும் வாடகை கொடுக்காமல்.

அருளைப்பெற்று சொந்த வீடாக மாற்ற வழியைச் சொல்லிக் கொடுப்பதுதான் .வள்ளலார் கற்றுக் கொடுக்கும் சாகாக்கல்வி என்பதாகும்.

சாகாக்கல்வி கற்று தேர்ச்சி பெற்றால் தான் அருள் என்னும் உணவு கிடைக்கும்.அருள் உணவு கிடைக்கும் வரை பொருள் உணவு அவசியம் தேவை.்

உணவு கொடுத்துக் கொண்டே இருந்தாலும் மரணம் வந்துவிடும்.கொடுக்காமல் இருந்தாலும் மரணம் வந்துவிடும்.

இவ்வுலகில் வாழ்வதற்கு பொருள் உணவு வேண்டும். இறைவன் உலகத்திற்கு செல்ல அருள் உணவு வேண்டும்.

அருள் உணவு உட்கொண்டால் மட்டுமே மரணத்தை வென்று.என்றும் அழியாத பேரின்ப சித்திப்  பெருவாழ்வில் வாழ முடியும்..

இந்த வாழ்வு வாழும் வகை தெரியாமல்.சமய  மதவாதிகள் வந்து மக்களைக் குழப்பி விட்டார்கள்.மக்களும் உண்மைத் தெரியாமல் இன்றுவரை பைத்தியம் பிடித்தவர்கள் போல் அலைந்து கொண்டு உள்ளார்கள்.

வள்ளலார் சொல்லுவதை கவனியுங்கள்....

மதவாதிகள் வருகை !

மற்போர்க்கு கருதி வந்தவர் போல

ஒதும் வேதாந்தம் உரைப்பவர் சிலபேர்

வாள் போருக்கு வந்தவர் போல
வயங்கு சித்தாந்தம் வழங்குவர் சிலபேர்

தண்டாயுதப் போர் தாங்குவர் போல
இதிகாசத்தை இசைப்பவர் சிலபேர்

உலக்கைப் போரை உற்றார் போல
இலக்கண நூலை இயம்புவர் சிலபேர்

கற்போர் விளக்கக் காட்டுவார் போலச்
சமய நூல்களைச் சாற்றுவர் சிலபேர்

வாய்ப் போருக்கு வந்தவர் போல
விவகாரங்கள் விளம்புவர் சிலபேர்

மடிபிடி போருக்கு வந்தவர் போல
மத தூஷணைகள் வழங்குவர் சிலபேர்

கட் குடியர் வந்து கலக்குதல் போலக்
காம நூலைக் கழற்றுவர் சிலபேர்

விழற்கு நீரை விடுவார் போல
வீண் கதை பேச விழைவார் சில பேர்

இவர்கள் முன்பு நான் என்ன செய்ய !

இவர்கள் முன்னே இவர்களுக்கு ஏற்ப குரல் கம்மிடவும் ,குறுநா உலரவும் ,அழலை எழவும் அவரவர் தம்பால்

சமயோதிதமாய்ச் சந்ததம் பேசி இயன்ற மட்டில் ஈடு தந்து அயர்வேன் .என்று வள்ளலார் "குடும்ப கோரம் "என்ற தலைப்பில் பதிவு செய்து உள்ளார் .

அடுத்து நித்திய கருமம் !

இந்த ஆன்மா என்ற குடும்பத்தில் நித்தியம் செய்ய வேண்டிய கருமங்கள் உள்ளன .

தினமும் மனையின் பின் புறத்தே ஏகிக் கலக்கும் மலத்தைத் கடிதே கழித்துக்

கல்லில் அழுக்கைக் கழற்றுதல் போன்று பல்லில் அழுக்கைப் பண்பின் மாற்றிச்

சோமனைப் போல ,வெண் சோமனைத் துவைத்து ,நன்னீர் ஆடி நறுமலர் கொய்து .தேவருக்கு ஏற்ற திரவியம் கூட்டிப்

பாவையை வைத்துப் பாடி ஆடும் சிறாரைப் போல செய்பணி யாற்றி ,

மண்ணின் சுவர்க்கு வண் சுதை தீட்டல் போல் வெண்ணீர் அதனை விளங்கப் பூசி ,புகழ் ருத்தராட்சி மாலையைப் உருட்டி உருட்டிக் குரண்டகம் போன்று குறித்த யோகம் செய்து

செய்த பின்னர் சிறிது நேரம் தூக்கம் வரும்போது பூசனை அமர்ந்து அங்கு ஆற்றி ,ஊன் பிண்டத்திற்கு உறு பிண்டம் ஈந்து ,குடிக்கூலிக் கடனை குறையறத் தீர்த்துப் பகல் வேடத்தால் பலரை விரட்டி

நித்திரைப் பரத்தையை நேர்ந்து கூடவும் பொழுதும் சரியாய்ப் போகின்றது. இதுவே மனித வாழ்க்கை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

இதுதான் இன்று உள்ள உலகியல் வாழ்க்கை ,

இந்த உலகியல் வாழ்க்கையில் இருந்து
விடுபட்டு.உயர்ந்த அறிவுள்ள மனிதர்கள் என்றும் அழியாத பேரின்ப சித்தி பெரு வாழ்க்கை வாழ வேண்டும் எனபதற்காக இறைவனால் வருவிக்க உற்றவர்தான வள்ளலார் .

வள்ளலார்  காட்டிய பாதை தான் நேர் பாதையாகும் .அதுதான் " சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் "என்னும் திரு நெறியாகும். உண்மையான.தந்தையாகிய **அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை** அறிந்து அருளைப் பெற்று உயிரையும் உடம்பையும் அழியாமல் மாற்றிக் கொள்ளும் வழியாகும்.

இதுவே மரணத்தை வெல்லும் வழியாகும்.

ஜீவகாருண்ய ஒழுக்கமும் *சத்விசாரம்* என்னும் இறைவன் தொடர்பும் வேண்டும்.

இந்தப் பாதையில் சாதி் சமயம். மதம் இனம் மொழி் நாடு போன்ற பேதங்கள் இல்லாத பொது நெறியாகும்.புதிய பாதையாகும்.
ஒரே கடவுள் என்ற உண்மைக் கொள்கை உடையதாகும்..

***அந்த ஒரே கடவுள் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதாகும்*** .அவர் உருவம் அற்றவர் ,அருள் ஒளியாக அருள் பிரகாசமாக விளங்கிக் கொண்டு உள்ளவர் .

அவரதான் தாயாக தந்தையாக நம்மை ஆண்டு கொண்டு உள்ளவர் .இதுவரையில் நமக்கு தெரியாமல் இருந்தவர் .வள்ளலார் வந்து தான் அருள் தரும் உண்மைத் தந்தையை நமக்கு காட்டி உள்ளார் .

இனிமேல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு நாம் அனைவரும் அருளைப்பெற்று.வாடகை வீட்டை சொந்த வீடாக மாற்றி மகிழ்ச்சியுடன் வாழவோம் .

பூத உடம்பை சொந்த வீடான அருள் உடம்பாக மாற்ற சில பல உளவுகள் சொல்லி உள்ளார்.அந்த உளவுப்பற்றி திருஅருட்பாவில் பல இடங்களில் சொல்லி உள்ளார்..

அந்த உளவு என்ன என்று தெரியாமல் இருக்கும் வரை மரணம் வந்து கொண்டே இருக்கும்...

வள்ளலார் சொல்லுவதைப் பாருங்கள் !

*உளவினில்* அறிந்தால்  ஒழிய  மற்று அளக்கின் அளவினில் அளவு அருட்பெருஞ்ஜோதி !

மேலும்
உள்ளானைக் கதவு திறந்து உள்ளே காண *உளவு* எனக்கே உரைத்தானை
உணரார் பாட்டைக்

கொள்ளானை என்பாட்டைக் குறிக்கும் கொண்டானைக் கொல்லாமை விரதம் எனக் கொண்டார் தம்மைத்

தள்ளானைக் கொலை புலையைத் தள்ளா தாரைத் தழுவானை யான் புரிந்த தவறு நோக்கி

எள்ளானை யிடர் தவிர்த்து இங்கு என்னையாண்ட எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே !

என்றும் மேலும்..
சேர்ந்திடவே யொருப்படுமின் சமரச சன்மார்க்கம் திருநெறியே பெரு நெறியாஞ் சித்தி எலாம் பெறலாம்

ஓர்ந்திடுமின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர்
உலகம் எல்லாம் கண்டிடும் ஓர் *உளவை* அறிந்திலிரே

வாழ்ந்த கடல் உலகறிய மரணம் முண்டே யந்தோ மரணம் என்றாற் சடம் எனும்ஓர் திரணமுஞ் சம்மதியாது

சார்ந்திடும் அம் மரணமதைத் தடுத்திடலாங் கண்ணர்
தனித்திடு சிற்சபை நடத்தைத் தரிசனம் செய்வீரே !

என்று பல *உளவு* களைச் சொல்லி உள்ளார்.அந்த உளவை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்

மேலும் அகவலில்...

பிரம ரகசியம் பேசி என் உளத்தே
தரமுற விளங்கும் சாந்த சற்குருவே !

பரம ரகசியம் பகர்ந்து எனது உளத்தே
வரமுற வளர்த்து வயங்கு சற்குருவே !

சிவரகசியம் எலாம் தெரிவித்து எனக்கே நவநிலை காட்டிய ஞான சற்குருவே !

என்று உளவையும் ரகசியத்தையும் தெளிவுப் படுத்தி உள்ளார்..

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் அந்த உளவை அறிந்து கொண்டு அருளைப் பூரணமாகப் பெற்று வள்ளல் பெருமான் மரணத்தை வென்று ஒளி உடம்பாக தன் உடம்பை மாற்றிக் கொண்டார்.

நாமும் அந்த உளவைத் தெரிந்து கொண்டு அருள் பெற்று மரணத்தை வென்று என்றும் அழியாமல் வாழ்வாங்கு வாழ்வோம் .

*நாம் இதுவரையில் உளவு தெரியாமல் .மரணத்தை வெல்லத் தெரியாமல் வாழ்ந்து வருகின்றோம்*

இதுவே ஆன்மாவின் குடும்ப வரலாறாகும்...

Post a Comment

0 Comments