சோம்பல்

‘’ சோம்பல்…(Laziness).’’
...........................................

சோம்பல் என்றால் என்ன? எந்த ஒரு வேலையையும் செய்ய மனமில்லாமல் உடலுக்கு மட்டும் சுகம் கொடுக்கும் ஒரு அனுபவம்தான் சோம்பல்(Laziness).

சோம்பல்தான் வெற்றியடையத் துடிக்கும் உங்களுக்கு கடுமையான எதிரி இந்த. சோம்பல்தான்..
ஒருதரம் மனதிற்குள் நுழைந்துவிட்டால் பின்பு காலமெல்லாம் அதனுடைய சாம்ராஜ்யம்தான்.

காலந் தாழ்த்தாமை, மறதி இல்லாமை, சோம்பல் இன்மை, அதிக நேரம் உறங்கா இருத்தல் இந்த நான்கு பண்புகளைப் பழகிக் கொண்டால் வாழ்வில் வெற்றி பெறுவது உறுதி.

இந்த நான்கு குணங்களில் சோம்பல் இல்லாமல் இருப்பதுதான் மிகக் கடினம்.

சோம்பல் தோன்றும்போதே அதை வெறுத்து ஒதுக்கிச் செயல்படத் தொடங்க வேண்டும்.

வாழ்வில் வெற்றி பெற விரும்பும் எல்லோருமே சோம்பல் இல்லாமல் இருப்பதோடு செய்ய வேண்டிய செயல்களை அந்தந்தக் காலங்களில் செய்து விட வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

யார் அதிகச் சோம்பேறி என்று கண்டறிய ஒரு போட்டி வைத்தார்கள்.

அதில் முதல் பரிசு பெற்றான் ஒருவன். பரிசை வந்து பெற்றுக் கொள்ளுமாறு, பத்தடி தள்ளி அமர்ந்திருந்த அவனிடம் சொன்னார்கள்.

அவ்வளவு தூரம் யார் நடப்பதாம்? இங்கே வந்து என்னிடம் கொடுத்துவிட்டுப் போங்கள்,’ என்று சொல்லி எனக் கொட்டாவி விட்டானாம் அவன்!

ஆம்.,நண்பர்களே..,

‘’ சோர்வு’’ என்பதிலுள்ள முதல் எழுத்தை நீக்கினாலே நமக்கு பிறந்துவிடும் ‘’தீர்வு’’

சோம்பல்மிக்கவர்கள் வாழ்க்கையில் இழுப்பது எத்தனையோ! சுறுசுறுப்பானவர்கள் பெறுவது எவ்வளவோ.!!.

எனவே சோம்பலை விரட்டி வாழ்க்கையில் வெற்றிக்கொடி நாட்டுவோம்..................

Post a Comment

0 Comments