ஐந்தறிவு வரை ஐந்து உணர்வுகளையும் உணர்வதற்காக ஐந்து புலன்கள்
ஆறாவது அறிவுகென்று தனியாக புலன் எதுவும் இல்லை
எப்படி ஆறாவது அறிவை கண்டுகொள்வது....???
எது ஐந்து பூதங்களாக இருக்கிறதோ
அதை ஐந்து புலன்கள் மூலம் உணர்ந்து தெளிந்தால்
அல்லது கடந்து சென்றால்
ஆறாவது அறிவு முழுமை பெறும்
அப்போது மனம் மனமாக நிற்கும்
அலைந்தால் மனம்
நிலைத்தால் அறிவு
தெளிந்தால் ஞானம்
உணர்ந்தால் இறைவன்
எவ்வளவு சுலபாமாக அறியக்கூடியதாக இருக்கும் இறைவனை
சமுதாயத்தில் எவ்வளவு சிக்கலாக்கி வைத்திருக்கிறார்கள்...!?!
இது ஏன்...???
மனிதனின் அறியாமையும், அலட்சியமும் தானே தவிர
வேறு என்னவாக இருக்க முடியும்...