சித்த மருத்துவக் குறிப்புகள்

*உடல், அசதி உடல் வலி தீர...!*

முரங்கை ஈர்க்கு கஷாயம் சாப்பிட்டு வர உடல் அசதி உடல் வலி தீரும்.

*உடல் அசதி,கை கால் வலி குணமடைய*

முருங்கை ஈர்க்குவை ரசம் வைத்து சாப்பிட்டு வர உடல் அசதி,கை கால் வலி நிற்கும்...!

*உடல் ஆரோக்கியம் பெற கல்லீரல், மண்ணீரல் சம்பந்தமான நோய்கள் குறைய*

உடல் ஆரோக்கியம் விளாப்பழ மரத்தின் பட்டையைக் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல், மண்ணீரல் சம்பந்தமான நோய்கள் குறையும்.

*உடல் ஆரோக்கியம் பெற,குடல் சுத்தமாக*

உடல் ஆரோக்கியம் வில்வப்பழத்தின் சதைப்பகுதியைச் சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டால் குடல் சுத்தமாகும்.

*உடல் ஆரோக்கியம் அதிகரிக்க*

கரிசலாங்கண்ணி இலை மற்றும் பருப்புக்கீரை இரண்டையும் தனித்தனியாக அரைத்து சாறு எடுத்து பிறகு ஒன்றாக கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் சோர்வு குறைந்து நோய் வராமல் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

*உடல் ஆரோக்கியம் பெற*

பேரீச்சம் பழம் இரண்டை தினசரி சாப்பிட்டு பின்பு பால் குடித்து வந்தால் குளுக்கோஸ் நேரடியாக கிடைத்து உடல் ஆரோக்கியம் பெறும்.

*உடல் ஆரோக்கியமாக*

உலர்ந்த வல்லாரைக் இலைப்பொடியில் நல்லெண்ணெய் சேர்த்துச் சாதத்துடன் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாகும்.

*உடல் ஆரோக்கியம் பெற*

உடல் ஆரோக்கியம் பெற பனம் பழத்தை தொடர்ந்து சாப்பிட உடல் ஆரோக்கியம் பெறும். மிகவும் ஊட்டச்சத்து மிக்கது.

*உடல் உஷ்ணம்*

உடல் உஷ்ணம் தணிக்க தினமும் ஆட்டுப்பால் சாப்பிட்டு வர உடல் குளுர்ச்சி பெறும்.

*உடல் உஷ்ணம்*

உடல் உஷ்ணத்தை குறைக்க வெந்தயத்தை ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வர உடல் உஷ்ணம் குறைந்து விடும்.

*உடல் உஷ்ணம் குறைய*

புளிய மரத்தின் கொழுந்து இலைகளை எடுத்து துவரம் பருப்புடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.

*உடல் உஷ்ணம் குறைய*

தாமரை இலைகளை எடுத்து நன்கு அரைத்து,இதோடு சந்தனதைக் குழைத்து உடலில் தேய்த்து வந்தால் உடல் எரிச்சல் மற்றும் உடல் உஷ்ணம் குறையும்.

*உடல் சுறுசுறுப்புடன் இருக்க*

வல்லாரைப்பொடியை நெய்யில் கலந்து காலை,மாலை சாப்பிட்டு வர உடல் சுறுசுறுப்புடன் இருக்கும்.

*உடல் சுறுசுறுப்பு அடைய*

சுக்கு பொடியை மதிய வேளையில் சாப்பிட்டு வர உடல் சுறுசுறுப்பு அடையும்.

*உடல் சூடு*

தாமரை இதழ்களை காய்ச்சி, வடிகட்டி, சர்க்கரை அல்லது தேனை கலந்து உண்டு வர கண்கள் குளிர்ச்சியடையும். உடல் சூடு தணியும்.

*உடல் சோம்பல்*

துளசி இலைகளை செம்பு பாத்திரத்தில் இரவு ஊற வைத்து காலையில் அந்த நீரை பருகி வர புத்துணர்ச்சி ஏற்படும்.

*உடல் சோர்வு நீங்க*

தினசரி 2 பேரிச்சை பழம் சாப்பிட்டு பால் அருந்தி வர குளுக்கோஸ் உடலுக்கு கிடைக்கும்.

*உடல் நாற்றம் நீங்க*

உடல் நாற்றம் நீங்க பற்பாடகம் இலையை பாலில் அரைத்து பூசி குளிக்கலாம்.

No comments:

Post a Comment

சமீபத்திய பதிவுகள்

கும்பகோணம் டிகிரி காபி

கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா? பித்தளை அல்லது தாமிரத்தாலான சற்றே மெகா சைஸ் ஃபில்டர்கள், ‘டம்ளர் - டவரா செட்’கள் இவைதான் கும்பகோணம்...