இலவசமாக...

ரஜினிகாந்த் சொன்ன கதை! 

ஒரு ஹோட்டல்ல, 'நீங்க சாப்பிட்டதுக்கு உங்க பேரன் வந்து பணம் கொடுத்தாப்போதும்னு' ஒரு அறிவிப்பு இருந்தது! 
ஒரு இளைஞன் "எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல ! நான் சாப்பிடலாமா ? .என் பேரன்கிட்ட பணம் வாங்கிக்குவீங்களா? என்று கேட்டான்! 

அந்த ஓட்டல் நிர்வாகத்தினர், 'இங்க ரூல்சே அதான்; உங்க சாப்பாட்டுக்கு நீங்க பணம் கொடுக்க வேண்டாம், உங்க பேரன் வரும்போது பணம் கொடுத்தால் போதும் ' என்றனர்! 

'நல்ல ஏமாளி ஓட்டலா இருக்கிறதே' என்று நினைத்துக்கொண்டு இஷ்டத்துக்கு சாப்பிட்டான் அந்த இளைஞன்! 

எண்ணுத்தி முப்பத்தாறு ரூபாய்க்கு சாப்பிட்டுவிட்டு வெளியே வரும்போது அவனிடம் பில் கொடுக்கப்பட்டது! 

அதைக்கண்டு பதறியே விட்டான்...

பில்லில் பத்தாயிரத்துக்கு மேல் போட்டிருந்தது.!

'என்னப்பா இது அநியாயமா இருக்கு?  நான் சாப்பிட்டதுக்கு என்னிடம் பணம் கேக்கமாட்டோம்னு எழுதி போட்டுட்டு, இப்ப எல்லோரும் சாப்பிட்ட சாப்பாட்டுக்கும் என்னிடம் பணம் கேட்டா எப்படி என்றார்?'

அப்போது பேசினார் அந்த ஓட்டல் முதலாளி! 

'தம்பி...எங்க ஓட்டல் விதிமுறை அதுதான்! 
நீங்க உங்க சாப்பாட்டுக்கு பணம் தரத்தேவையில்லை.... உங்க தாத்தா சாப்பிட்டதுக்கு மட்டும் பத்தாயிரம் தந்துட்டுப்போங்க' என்றார்! 

தூக்கிவாரிப்போட்டது இளைஞனுக்கு!

இந்த இலவசம் கொடுக்க மட்டும் காசு எங்கிருந்து வருதோ.., 

அது யார் தலையில விழுதோன்னு அடிக்கடி எனக்கு மனதில் எழும் பகுத்தறிவு கேள்விக்கு இந்தக் கதையையே பதிலாய் கொள்ளலாம்.!


Post a Comment

1 Comments