இன்று ஏராளமானோர்
பார்வை பிரச்சனையால் கஷ்டப்படுகின்றனர்.
இதற்கு காரணம் ஸ்மார்ட்போன், லேப்டாப், கம்ப்யூட்டர் போன்றவைகள்
தான். எந்நேரமும் இவற்றில் உள்ள எழுத்துக்கள்
மற்றும் படங்களை
கூர்ந்து நோக்கிக் கொண்டிருப்பதால், கண்கள்
விரைவில் சோர்ந்து
நாளடைவில் பார்வை மங்கலாக ஆரம்பிக்கின்றன.
இந்த பிரச்சனைக்கு பலர் உடனே மருத்துவரிடமும்
செல்லமாட்டார்கள். அதே சமயம், கண்களின்
ஆரோக்கியத்தை
மேம்படுத்தும் உணவுகளையும் சாப்பிடமாட்டார்கள் மற்றும் கண்
பயிற்சிகளையும் செய்யமாட்டார்கள். இது இப்படியே நீடித்தால்,
பின் பார்வை குறைபாடு ஏற்பட்டு, கண்ணாடி
போடும் நிலைமை
வந்துவிடும். இருப்பதிலேயே மிகவும் மோசமானது, பார்க்க
கண்கள் இருந்தும் கண்ணாடி அணிந்தால் தான் எதுவும் தெரியும்
என்பது தான். எனவே இந்த நிலைமை வராமல் இருக்க,
ஆரம்பத்திலேயே
கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
உணவுகளை உட்கொண்டு, கண்
பார்வையை மேம்படுத்த செய்ய
வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகளை தெரிந்து
கொண்டு, அவற்றைப் பின்பற்றுங்கள்.
கண்களுக்கான ஊட்டம் செய்ய வேண்டியவை வைட்டமின் ஏ,
வைட்டமின் சி, லுடீன் மற்றும் பீட்டா கரோட்டீன் நிறைந்த
உணவுகள் கண்களை சரிசெய்ய உதவும். ஆகுவே காட் லிவர்
ஆயில், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, வெண்ணெய், பப்பாளி,
ப்ளூபெர்ரி, ஆப்ரிகாட் மற்றும் திராட்சை போன்றவற்றை அதிகம்
சாப்பிடுங்கள்.
செய்யக்கூடாதவை கீரையை எப்போதும் தவிர்க்கக்கூடாது.
ஆகவே பசலைக்கீரை, சிறு கீரை, அரைக்கீரை போன்றவற்றால்
வாரத்திற்கு 2-3 முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்
கண்
பாதுகாப்பு
பார்வைத்திறன்
முதல் நிலை: ஒவ்வொரு கண்ணின் பார்வை ஆற்றலும் 6/6 என்ற அளவில் இருத்தல் வேண்டும் (இத்தகுதி
இராணுவம்,
கப்பற்படை, காவல்துறை) ஆகியோருக்குப் பொருந்தும்.
இரண்டாம் நிலை: ஒவ்வொரு கண்ணின் பார்வைத்திறன் (+4.00 அல்லது -4.00) கண்ணாடி அணிந்தபின் 6/9,6/6 இருத்தல் வேண்டும்.
மூன்றாம் நிலை: கண்ணின் பார்வைத்திறன் +6.00 அல்லது -6.00 கண்ணாடி அணிந்தபின் 6/6
அல்லது 6/9 இருத்தல் வேண்டும் .
கருவிழி
|
பாப்பா
|
வெண்படலம்
|
கோராய்ட்
|
ஒளித்திரை
|
பார்வை நரம்பு
|
பார்வை நரம்பின்
இரத்தக் குழாய்கள் |
விழித்திரை
|
கண்முன் ரசம்
|
லென்ஸ்
|
விட்ரியஸ்
|
ஆப்பிக் கயாஸ்மா
(இரு பார்வை நரம்புகளும் சந்திக்கும் இடம்) |
பார்வைத் தடம்
– Optic Tract |
பார்வை பாதையின்
விரிசல்கள் – Optic Radiations |
மூளையின்
பின்பகுதியில் உள்ள பார்வை பதியும் இடம்
(Visual cortex in the occipital lobe) |
இரு கண்களும்
அசைவதற்கு ஒவ்வொரு கண்ணிலும் ஆறு தசைநார்கள் உள்ளன.
ஒளிக்கதிர்களானது கருவிழி, கண்ணின் முன்ரசம், பாப்பா, லென்ஸ் விட்ரியஸ் வழியாகச் சென்று ஒளித்திரையில் உள்ள மேகுலா (Macula) என்ற இடத்தில் உள்ள நுட்பமான போவியா Fovea என்ற புள்ளியில் குவிகிறது.
இந்தப் பகுதிதான்
பார்வையை மூளைக்கு எடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது
கோன்ஸ் & ராட்ஸ்
நமது பார்வைக்கு
அவசியமான கோன்ஸ்,
ராட்ஸ், மேகுலா என்ற இடத்தில்தான் அதிகம் உள்ளது.
கோன்ஸ் பகல் நேரப் பார்வைக்கும், நிறப்பார்வைக்கும் இரவு நேரங்களிலும் பார்க்க உதவுகிறது.
ரெட்டினா என்பதற்கு
வலை என்று பெயர். இதை ஒரு டிஷ் ஆன்டெனாவுடன் ஒப்பிடலாம். ஒவ்வொரு விழித்திரையிலும்
120
மில்லியன்
செல்கள் உள்ளன. இவற்றினால் ஒளிக்கதிர்கள் கவரப்பட்டு இரசாயன மாற்றத்தால் மின்
அலைகளாக மாற்றப்படுகிறது.
இங்குதான் தலைகீழான பிம்பம் மாற்றப்பட்டு மூளைக்கு
அனுப்பபடுகிறது. பார்வை நரம்பில் கோன்களும் நாட்களும் இல்லை. இதற்கு Blind Spot என்று பெயர். ஒரு கண்ணின் பார்வையின்
தோற்றத்தில் ஒரு இடத்தில் பார்வை இருக்காது. மனிதனின் விழித்திரையில் இந்த
ராட்சும் கோன் அணுக்களும் 1:18
என்ற
விகிதத்தில் அமைந்துள்ள நல்ல வெளிச்சத்தில் ரொடாக்சின் அதிக வேகமாக உடைந்து
பிரிக்கப்படுகிறது.
அதே சமயம் மறு உற்பத்தியின் வேகம் குறைவு மற்றும் வெளிச்சம்
குறையும் பொழுது இந்த ரோடாக்சின் மறுபடியும் உண்டாவதற்கு அதிக நேரம் ஆகின்றது.
போதுமான வெளிச்சம் இல்லாவிட்டால் இந்த கோன்ஸ் அணுக்கள் வேலை செய்யாமல் நின்று
விடுகிறது. ஆகையால் ஒரு குழந்தை வளர்ச்சியில் கண் பார்வைக்கு வைட்டமின் ‘A’ ஊட்டச் சத்தும் புரதமும் மிகவும்
அவசியமானதாகும்.
பார்வைக்களம்
என்பதின்
தமிழில் போர்க்களம் என பொருள்படும். இதை வைத்து Field Of Vision என்பதற்கு பார்வைக்களம் என்று அழைக்கலாம்.
இதுவரை கூறியவற்றில் பார்வைத்திறனையும் அசைவுகள் பற்றி அறிந்து கொண்டாலும் ஒரு
மனிதன் ஒவ்வொரு கண்ணிலும் ஒரு பொருளைப் பார்க்கும்பொழுது அதைச் சுற்றியுள்ள
தோற்றத்தின் பரப்பு எவ்வளவு என்பதுதான் பார்வைக்களம் (Field of Vision) என்று பெயர்.
கண்ணில் நீர் அழுத்தம்
சிலருக்கு சில
வண்ணங்களைப் பார்த்தறிய முடியாத நிறப்பார்வைக் குறைவு (Colour Blindness) இருக்கும். இக்குறைபாட்டை பின்வரும் மூன்று
சோதனைகள் மூலம் கண்டறியலாம்.
·
ஹோம்கிரீன் நிறக்கம்பளச் சோதனை (Holm green wool Test)
·
இஷிகாரா பல வண்ண எண் அட்டை சோதனை
·
எட்ரிட்ஜ் விளக்குச் சோதனை (எட்ரிட்ஜ் விளக்குச் சோதனை (Edridge lantem Test)
இராணுவம், கடற்படை, வான்படை,
காவல் துறை, போக்குவரத்துத் துறை ஆகிய துறைகளில் வேலை
வாய்ப்புகளை விரும்புவோர்க்கு நிறப்பார்வை குறைபாடு ஒரு தகுதிக் குறைவாகும்.
கண்ணாடி பராமரிப்பின் அவசியம்
கிட்டப்பார்வை உடையவர்களும் தூரப் பார்வை உடையவர்களும் கண் மருத்துவரிடம் கண்களை பரிசோதித்து
அவரது ஆலோசனைப்படி கண்ணாடி அணிதல் வேண்டும்.
கண்ணாடியைப் பயன்படுத்து முன்
நாள்தோறும் சுத்தமான மென்மையான துணியாலோ அல்லது ஈரத்துணியாலோ நன்கு சுத்தம் செய்து
அணியவேண்டும்.
கண்ணாடியில் கீறல் விழுந்துவிட்டால் உடன் கண்மருத்துவரிடம் கண்களை
பரிசோதித்து மாற்றுக்கண்ணாடி அணிவதே நன்று.
நிறப்பார்வை குறைபாடு உள்ளவர்கள்
அதற்குரிய வேலைக்குத்தான் செல்ல முடியும்.
·
கிட்டப்பார்வை
·
தூரப்பார்வை
ஒரு கோணப்பார்வை
ஆக இந்த குறைபாடு உள்ள அனைவரும் கண்ணாடி அணிவது அவசியம். வெள்ளெழுத்து
குறைபாடுள்ளவர்களும் 2
ஆண்டுகளுக்கொருமுறை
கண்பரிசோதனை செய்து மருத்துவரின் பரிந்துரைப்படி கண்ணாடி அணிய வேண்டும்.
இவர்களுக்கு Bi-Focal
lens மேலே உள்ள
கண்ணாடி தூரப் பார்வைக்கும்,
கீழே உள்ள கண்ணாடி படிப்பதற்கும் பயன்படும். அனைவருக்குமே இரு பாப்பாவிற்கும்
உள்ள தூரத்தின் அளவு I.P.D.
தேவை (Inter pupilary Distance)
Bifocal Lens: இதில் நமது வசதிக்கேற்ப பல வகைகள் உள்ளது.
·
Kryptok
(கிரிப்டோக்)
·
D/bifocal(டி/பைபோக்கல்)
·
Executive(எக்சிகியூட்டிவ்)
·
Tri-Focal(டிரை போக்கல்)
அணியும்
கண்ணாடியின் தடிமனைக் குறைக்க M.M.T.
High Intex ம் எடையின் அளவைக் குறைக்க பிளாஷ்டிக் Resilens ம்,
வெளிச்சத்தினால் கண் கூசாமல் இருக்க, Anti- glare & Resistant Lens, CR 39,
Photo sun Lens, Photo chrome, உடையாமல் இருக்க Toughened
கண்ணாடிகள்
நடைமுறையில் உள்ளது
கண்களின் முக்கிய பாகங்கள் / அமைப்பு
நாம் நமது
கண்களை ஒரு காமிராவோடு ஒப்பிடலாம் . காமிரா எப்படி ஒரு பொருளின் நிழலைத் தன்னிடம்
பதியச் செய்து உருவமாக கொடுக்கிறதோ அவ்வாறே கண்களும் அதே வேலையைச் செய்கின்றன.
ஒளிக்கதிர்கள்
கருவிழி மூலம் கண்ணுக்குள் சென்று கருமணியில் பட்டு வளைந்து ஒளித் திரையில் ஒரு
குறிப்பிட்ட இடத்தில் பதிவாகிறது. அங்கு தலைகீழாக பதிவாகிறது. அங்கு ஏற்படும்
பார்வை நரம்புகளின் உதவியால் மூளையின் பின்பகுதியை அடைகிறது. அங்கு உருவம் நேராகப்
படுகிறது. இதைத்தான் நாம் பார்வை என்கிறோம்.
கண்ணில்
கீழ்கண்ட உறுப்புகள் முக்கிய பணியாற்றுகிறது.
·
பார்வை நரம்பு
·
சிலியா தசை நார்
·
ஒளிகதிர்கள் மேகுலா இடத்தில் குவிதல்
·
கண் ஆடி
·
கருவிழி
·
விழித்திரை
பரம்பரை நோய்கள் – உறவு முறை திருமணம்
நெருங்கிய உறவு
முறை திருமணங்களில் சில
நோய்கள் பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளுக்கு ஏற்பட
காரணமாகிறது.
உதராணமாக கிட்டப்பார்வை , மாலைக்கண் நோய் கிரந்தி ஆகிய நோய்கள் குழந்தைகட்கு பெற்றோர்கள் மூலம்
வருகின்றன
எனவே நமது குழந்தைகளுக்கு வரும் சில பரம்பரை நோய்களை தடுத்திட உறவு முறை
திருமணத்தை தவிர்த்திடுதல் நல்லது.
சிலருக்கு
அதிகமான வேலைப்பளு காரணமாக மூளைப்பளு ஏற்படுகிறது.
மூளை அளவுக்கு அதிகமாக
செயல்படும் பொழுது அதனால் ஏற்படும் சோர்வு கண்ணுக்கும் அதன் தசைகளுக்கும்
ஏற்படுகிறது.
இதனால் தசைகளும் வலுவிழக்கினறன. கவலை, அதிக அச்சம்,
அதிக துயரம்
மனிதனைத் தாக்கும் பொழுது அதனால் ஏற்படும் அதிர்ச்சிகள் கூட பார்வைக் குறைவை
ஏற்படுத்துகிறது.
பார்வைக் குறைவுக்கு வேறு பல காரணங்களும் உள்ளன.
மூளைக்கு
ஏற்படும் அதிகப்பளு மட்டும் கண்ணில் பார்வைக் குறைவை ஏற்படுத்தவில்லை.
மூளைக்கும்
கண்ணுக்கும் மட்டும் தொடர்பு இல்லை, கண்ணுடன் மற்ற உறுப்புகளுக்கும் தொடர்பு இருக்கிறது. மூளையைப் போலவே மற்ற
உறுப்புகளின் பாதிப்பும் கண்பார்வையை பாதிக்கும் வாய்ப்பு உளாது.
போதிய சத்து
குறையாடும் பார்வைக் குறைவுக்கு வாய்ப்பாக அமைகிறது.
நமது இரு
கண்களும் ஆர்பிட் என்ற ஏழு சிறு எலும்புகளால் குழிபோன்ற இடத்தில் மிகவும் பாதுகாப்பாக
அமைந்துள்ளது. ஒவ்வொரு கண்ணும் மேல் கீழ் என்ற இரு இழைகளாலும், இமைகளின் மீது அமைந்துள்ள நூற்றுகணக்கான
மெல்லிய ரோமங்களால் கண்ணின் வெளிப்புறம் பாதுகாப்பாக அமைந்துள்ளது.
கண்ணின் கண்ணாடி
போன்ற கருவிழி வழியாக ஒளிக்கதிர்கள் ஊடுருவி கண்ணின் ஒளித்திரைக்கு செல்வதால்
அதற்கு எப்பொழுதும் ஈரப்பதம் தேவைப்படுகிறது.
எனவே இயற்கையாகவே நீரையும் மற்ற
சுரப்பிகளையும் சுரக்கச் செய்கிறது. இதுதான் கண்ணீர் ஆகும்.
கண்ணின்
நீர்சுரப்பிகள் கண்ணின் மேற்பகுதியில் வெளிப்பாகத்தில் அமைந்திருப்பதால் கண்ணீரை
வெளியில் கொண்டுவர வசதியாக இருப்பதே கண்ணின் இமைகள்தான்,
1 நிமிடத்திற்கு 18 முறை மூடித் திறப்பதால் இந்த செயல் எளிதாக
நடைபெறுகிறது.
ஒரு
கட்டிடத்தில் நுழைய வாயிற்படிபோல் கண்ணின் வெளிப்புற பகுதியாகிய கருவிழி என்ற
கார்னியா மூலமாக ஒளிக்கதிர்கள் உட்பக்கம் வளைந்து கேமராவில் உள்ள ஒளிநாடாவில் பதிவதுபோல்
கண்ணின் ஒளித்திரையில் (ரெட்டினா) ஒரு குறிப்பிட்ட பகுதியில் குவிகிறது. இரண்டு
கண்களின் ஒளிதிரையிலும் இந்த மேக்குலா என்ற ஒரு இடத்தில் பார்க்கும் பொருளின்
பிம்பம் தலைகீழாக விழுகிறது.
இந்த மேக்குலாவிலிருந்து ஒளிக்கதிர்கள் மின் ஆற்றலாக
மாறி கண் நரம்பு வழியாக ஆப்டிக்க்யாஸ்மா என்ற இடத்தில் ஒரு பகுதி மட்டும் இடம்
மாறிச் சென்று மற்றொறு பகுதி அதே கோணத்தில் சென்று ஆப்ப்டிக்பாத் வழியாக மூளையின்
பின் பகுதியாகிய ஆக்சிபிடல் லோப் என்ற பகுதியின் உட்புறத்தில் நேராக விழுகின்றது.
இது ஒரு கேமராவில் வெளிச்ச்த்திற்கு தகுந்த மாதிரி செயல்பட்டு காட்சி பதிவாகிறதோ
அது போலவே கண்ணில் உள்ள பாப்பா வெளிச்சத்திற்கு தகுந்தாற்போல் சுருங்கியோ (அ)
விரிவடைந்தோ ஒரு பொருளின் பிம்பத்தை பதியச் செய்கிறது.
மாறுகண்
நமது கண்களில்
ஒவ்வொரு கண்ணிலும் 6
தசைநார்கள்
உள்ளன. இவைகளின் உதவியால் இரு கண்களும் ஒரே சீராக ஒரே கோணத்தில் அசைகின்றன. நமது
இரண்டு கண்களும் கீழ் நோக்கியோ, வலது புறமாகவோ,
இடது புறமாகவோ, ஒன்று போல் அசைவதால் இரு கண்களின் பார்வையும்
ஒன்றுபோல் அமைந்து,
கண்ணால்
பார்க்கப்படும் பொருளின் நீளம், அகலம் ,
உயரம் ஆகியவை
பற்றி விவரமாக தெரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு இரு கண்களின்) பார்வையும் கண்ணாடி
அணிந்தோ,
அணியாமலோ ஓரே
சீராக அமைந்திடல் வேண்டும். அப்போழுதுதான் இரு கண்களிலும் விழக்கூடிய பொருளின்
பிம்பம் ஓரே சீராக பார்க்கப்பட்டு எடுத்துச்செல்லப்பட்டு மூளையின் பின்பகுதியில்
உள்ள கார்டெக்ஸ் என்ற இடத்தில் பதிவு செய்யப்பட முடியும் இந்தச் செயல் சீராக
அமையவிட்டால் மாறுகண் ஏற்படுகிறது. மாறுகண் உள்ளவர்கள் பார்வை எங்கு விழுகிறது
என்பதை சரியாக கூற முடியாது, பார்வை கண்ணுக்கு கண் மாறி இருப்பதால் இதனை மாறுகண் என்று கூறுகிறோம்.
கிட்டப்பார்வை, தூரப்பார்வை
உடலில் ஒரு நோய்
ஏற்பட்டால் அது எப்படி கண்ணைப் பாதிக்கிறதோ அவ்வாறே கண்ணில் ஒரு நோய் தொற்றினால்
அது உடலையும் பாதிக்கிறது. கண்ணில் ஏற்படும் எரிச்சல் போன்றவை சாதாரணமாக
ஏற்படுவதில்லை. உடலில் ஸ்டார்ச், புரோட்டீன்,
சர்க்கரை
ஆகியவைகளின் அளவு கூடும்பொழுது கண் எரிச்சல் போன்ற நோய் ஏற்படுகிறது. மேலும்
அதிகரிக்கும்பொழுது கண்ணில் நீர் வழிதல், புரை வளர்தல்,
போன்றவை
ஏற்படும் அதன் முற்றிய நிலையில் கண் குருடாகி விடும். சரியான அளவில் சத்தான உணவு
அமையாவிடில் கண் சம்மந்தமான கோளாறுகளும் ஏற்படுகின்றன. கண்ணின் அமைப்பையும் வேலை
முறையையும் பாதிக்கும். சரியான முறையில் ஒழுங்குபடுத்தப்படாத உணவு இரத்த
ஓட்டத்தின் தடையை ஏற்படுத்தி இரத்த நாளங்களையும் பாதிக்கிறது. எனவே உணவு சரியான
விகிதத்தில் அமையாவிடின் அது வயிற்றை மட்டும்தான் பாதிக்கும், வயிற்றுக் கோளாறுகள் மட்டுமே ஏற்படும் என்பது
தவறு,
உணவு முறை சரியில்லாவிடில்
உடல் முழுவதையும் பாதிக்கும், உடல் பாதிக்கப்படும் பொழுது உடலில் ஓர் உறுப்பான கண் பார்வையும்
பாதிக்கப்படும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
இரத்த
நாளங்களும் ,
தசைகளும்
பழுதடைந்தால் இரத்த ஓட்டம் சரியாக நடைபெறாது, மென்மையாக இருக்க வேண்டிய தசைகள் இறுகிக் கடினத் தன்மையை பாதித்துவிடும்.
கண்ணின் பார்வைத் தன்மையைப் பாதித்துவிடும். கண்ணின் உருவத்தில் மாறுதல்
ஏற்பட்டால் அது பார்வைக் குறைவை ஏற்படுத்திவிடும். தூரப்பார்வை, கிட்டப்பார்வை ஆகியவை உணவு முறையில் ஏற்பட்ட
முரண்பாடுகளால்தான் ஏற்படுகிறது. முதுமைப் பருவத்தில் ஏற்படும். பார்வைக்
குறைபாடும் இதே காரணத்தால் தான் ஏற்படும்.
மனிதர்கள்
முதுமை காலத்தில் வயது முதிர்வதால் இயற்கையிலேயே உருவத்தில் மாறுதல் அடைகின்றன.
அதனால் தான் தூரப்பார்வை,
கிட்டப்பார்வை
ஆகியவை ஏற்படுகிறது. என்ற கருத்து பொதுவாக மக்களிடத்தில் உள்ளது. சுமார் 40 வயதிற்குப்பின் உடலில் முதிர்ச்சி ஏற்பட்டு
தோல் சுருக்கம் ஏற்படுகிறது. கண்ணிலேயும் சுருக்கம் ஏற்படவே செய்யும் இது
அருகிலுள்ள பொருள்களைக் கூட சரியாக பார்க்க முடியாது, எனவே கண்ணாடி தவிர வேறு வழியில்லை என்று
மக்கள் முடிவெடுத்து விடுகிறார்கள். கடந்த 50 ஆண்டுகளாக நாம் நமது உணவு முறையை ஒழுங்குபடுத்தி கொள்ள தவறிவிட்டோம். இதனாலேயே
பார்வைக் குறைவு ஏற்பட்டது. என்பதை புரிந்துகொள்ள தவறிவிட்டோம், உணவு முறையில் ஏற்பட்ட மாற்றம், நஞ்சாகிப்போன உணவு, ஸ்டார்ச், குளுக்கோஸ் ஆகியவைகள் அதிகரித்த உணவு காரணமே இன்று 40 வயதைக் கடந்தவர்களுகளுக்கு பெரும்பாலும்
ஏற்பட்டுள்ள தூரப்பார்வை குறைபாடு ஆகும். இவர்கள் தங்கள் உணவு முறையை சரிசெய்து
கொண்டு எளிமையன சில பயிற்சிகளை மேற்கொண்டால் பார்வைக் குறைவை சரிப்படுத்திக் கொள்ள
முடியும்.
0 Comments