மூச்சு தொடங்கியவுடன் பிறப்பு தொடங்குகிறது.. மூச்சு நின்றவுடன் இறப்பு
வருகிறது.. நொடி பொழுதேனும் மூச்சு இன்றேல் மனிதன் நிலை தடுமாறி போய் விடுகிறான்..
ஏதோ உற்ற துணையாய் உயிர் துணையாய்,நொடிக்கு நொடி நம்மை அறியாமல் நம்மை காத்துக்
கொண்டு இருக்கிறது,
அந்த காத்து
என்ற காற்று..
காத்து,
காத்து
கொண்டிருக்கும் அந்த காற்றின் தன்மை அறியா நிலையில் உள்ளது.. இந்த அறியா நிலைதான்
நம் அனைத்து துன்பங்களுக்கும் காரணம்.. இந்த அறியா நிலையை அறியும் நிலைக்கு வர
வேண்டிய பயிற்சி தான் இந்த வாசி யோகம்..
எல்லாம் அறியும் நிலைக்கு வந்து விட்டது.. போதுமா ?
அறிவது வாசி யோகத்தின் ஆரம்ப நிலை.. பின் காக்கும் உயிர் சக்தியை கையாளும்
திறமை வளர்த்து கொள்வது.. பின் வேறு ஒரு தேக சக்தியை கையாளுவது.. இப்படி நீண்டு
கொண்டே போன வாசியோகம் மனிதனின் அளவற்ற ஆசைக்கு அப்பால் செயல் பட தொடங்கி முடிவில்
அடிபடை இல்லாத அதாவது அஸ்திவாரமே இல்லாமல் வீடு கட்டிய கதை போல் ஆகி விடுகிறது..
பல ஆண்டுகள் பயின்றும் மூச்சு ஏன் என்ற அறியா நிலையில் இருந்து, அறியும் நிலைக்கு வந்தவர்கள் மிக மிக
குறைவு.. மூச்சை அறியும் நுணுக்களையும் அதற்கான பயிற்சியையும் பார்க்கலாம்..
முன்பு கற்றுக் கொண்டதோடு ஒப்பிட்டால் புரிவது சற்று சிரமம் தான்.. உற்று
படிக்குமாறு வேண்டுகின்றேன்..
ஆகாயம் என்ற பிரபஞ்சத்தில் பேரறிவு இருக்கிறது.. அறிவு ஒன்று இருந்தால் அது
ஒன்றை செய்ய தூண்டி கொண்டே இருக்கும்.. அதைதான் ஆதி சக்தியின் தூண்டல் மையம்..
இந்த தூண்டல் மையம் தான் ஆன்மா என்ற செயல் மையமாக தோன்றுகிறது..
ஆன்மா உயிரை படைக்கிறது.. உயிர் ஆன்மாவுக்கு இசைந்து இயங்கும் வரை ஆதி
சக்தியான மூலசக்தி உயிரோடு தொடர்பு கொண்டு இருக்கும்.. உயிர் இயங்க மறுத்தால்
மூலசக்தி ஆற்றல் துண்டிக்கப்பட்டு உயிர் அது குடிகொண்டுள்ள தேகத்தை விட்டு நீங்க
நேரிடும்..
எப்படி சூரிய வெளிச்சம் ஏழு வண்ணங்களாக ஒரு பிரிசத்தின் மூலம் ஏழு வண்ணங்களாக
பிரிகிறதோ அப்படியே உயிர் ஆன்மாவின் மூலம் ஐம் பூத கணங்களாக பிரிந்து தேக வடிவம்
எடுக்கிறது.. இங்குதான் பிரச்சனை ஆரம்பம்..
ஐந்து
பூதங்கள் தங்கள் வரையறைக்கு உட்படாமல் வேலை செய்தால் ஒரு பூதம் மடிந்தால் கூட மற்ற
பூதங்களும் மடிந்து உயிர் பிரிந்து தன் மூலமான ஆன்மாவில் ஏக சக்தியாக
கலந்து விடும்..
ஆன்மாவில் ஏகமாகவும் தேகத்தில் பஞ்ச அதாவது ஐம்பூதங்களாக உயிர் இயங்குகிறது..
ஐந்து பூதங்களில் காற்று என்ற பூதம் தான் எதை புத்தியோடு செய்ய வேண்டும் என
தீர்மானிக்கிறது.
ஐந்து பூதங்களில் முதலில் காற்றுதான் செயல் பாட்டிற்கு வருகிறது.. காற்று
முதல் சுவாசமாக இயங்கி தேகத்திற்கு உயிரை ஊன்ற வைக்கிறது.. நெரிசல் நிறைந்த
சாலையில் வண்டி சராசரி வேகத்தில் ஓட்டி செல்லுகிறீர்கள்.. பின் அமர்கையில் உள்ளவர்
திடீரென உங்கள் கண்களை மூடினால் என்ன நடக்கும்.. கண்கள் இருண்ட சூழ் நிலையில்
புத்தி வேலை செய்ய முடியாததால் என்ன நடக்கும் என்பது யூகிக்க முடிந்ததே..
அதே போல் புத்தியில் இயங்கும் காற்று, மூச்சில் தடைபட்டால் நொடியில் நிலை குலைந்து போவான் மனிதன்.. ஆகாயம் என்ற பேரறிவு
ஒரு உள்ளார்ந்த சக்தியாக ( static energy) இருக்க காற்று பேரறிவின் இயக்க சக்தியாக (dynamic energy) செயல் பாட்டிற்கு வருகிறது.. அதனால் தான்
மூச்சு சில விநாடிகளில் நின்றால் தேக இயக்கம் நிற்கிறது.. புத்தியோடு இருப்பது
தான் வாசி யோகத்தின் ஆரம்ப நிலை.. அறியா நிலையாகிய புத்தி இன்மையிலிருந்து அறியும்
நிலையாகிய புத்தி உடைமை நிலைக்கு வருவது..
இப்பொழுது அமைதியாக உட்காருங்கள்.. மூச்சின் மேல் கவனம் வையுங்கள்.. மூச்சை
சற்று நிறுத்துங்கள்.. ஏதோ ஒரு இயக்க சக்தி உங்கள் மேல் பாய்ந்து மூச்சை
உள்வாங்கும்.. மூச்சை உள்வாங்கியவுடன் அதை வெளிவிடாது சிறு முயற்சி செய்யவும்..
மறுபடியும் ஒரு இயக்க சக்தி பாய்ந்து மூச்சை வெளிவிட தொடங்கும்..
புத்த மதத்தில் மூச்சை உள்வாங்கும் போதும் வெளிவிடும் போதும் ஏற்படும் கீழும்
மேலுமான திருப்பு முனையில் உங்கள் கவனத்தை வைக்க வேண்டும் என அவர்களின் விபசன்னா
தியானத்தில் சொல்லுவார்கள்.. இங்கே நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உள் வாங்கவும்
வெளி விடவும் முயலும் அந்த இயக்க சக்தியோடு இணைந்து இருக்க முயலுவதே.. அவர்கள்
திரும்பும் முனையில் கவனம் வைத்து விழிப்பு நிலையை பெருக்கிக் கொள்வார்கள்.. ஆனால்
நம் வாசி யோகத்தில் உள்ளே வெளியே செல்லும் இயக்க சக்தியில் இணையும் முயற்சி
செய்வார்கள்.. இரண்டும் ஒன்றுக்கு ஒன்று எதிர் துருவம்..
துரித செயல் ஆற்றும் திறன் இன்றி வரட்டு விழிப்பு நிலையில் எல்லாம் அவன் செயல்
என்று சாட்சி நிலையில் வேடிக்கை பார்க்க வேண்டியது தான் புத்த நிலை சமாச்சாரம்..
ஆனால் வாசி யோகத்தில் அந்த சிறு நுணுக்கம் இரகசியம் நொடியில் செயலாற்றும்
திறனுக்கு வழிகாட்டலாக உள்ளது.. அந்த இயக்க சக்தி ஆன்மாவின் இயக்க சக்தி.. அதனுடன்
இணைப்பு ஆன்மாவுடன் இணைப்பு ஆகும்..
அந்த புத்தி திறனே புத்தி.. பேரறிவு என்ற விழிப்பு நிலை இருந்தால் நன்று..
ஆனால் அது செயல் பட புத்தி இல்லை என்றால் என்ன பலன்.. பேரறிவு பெற்ற அறிவாளர்கள்
அவசர நிலை வரும் போது காணாமல் போய் விடுவார்கள்..
புத்தி உள்ளவர்களே உடன் செயலுக்கு வருவார்கள்.. அறிவுடனும் செய்வார்கள்..
காரணம் புத்தியும் அறிவும் எப்பொழுதும் இணைந்தே செயல் படும்.
நன்றி: மர்மயோகி
நன்றி: மர்மயோகி
3 Comments
அருமையாக சொன்னீர்கள்...
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அய்யா!
Deleteமிக்க நன்றி. அற்புதமாக சொல்லி இருக்கிறீர்கள்
ReplyDelete