குணத்தை சொல்லும் நட்சத்திரங்கள்



ஒவ்வொருவர் நட்சத்திரங்கள் அடிப்படையில் அவரவர் குணநலன்கள் அமைந்துள்ளது.
இதோ 27 நட்சத்திரக்காரர்களின் குண நலன்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
*1. அசுவினி* : செல்வந்தர், புத்திசாலி, விவாதம் செய்பவர், ஆடம்பர பிரியர், பக்திமான், கல்விமான், பிறருக்கு அறிவுரை சொல்பவர்.
*2. பரணி* : நன்றி மிக்கவர், திறமைசாலி, தர்மவான், எதிரிகளை வெல்பவர், அதிர்ஷ்டசாலி, சாதிப்பதில் வல்லவர், வசதியாக வாழ்பவர்.
*3. கார்த்திகை* : பக்திமான், மென்மையானவர், செல்வந்தர், கல்வி சுமார், வாழ்க்கைத்தகுதி அதிகம், பழகுவதில் பண்பாளர்.
*4. ரோகிணி* : கம்பீரவான், உல்லாசப்பிரியர், கலாரசிகர், ஊர் சுற்றுபவர், செல்வாக்கு மிக்கவர், வசீகரமானவர்.
*5. மிருகசீரிடம்* : தைரியசாலி, முன்கோபி, தர்மவான், புத்திசாலி, திறமை மிக்கவர், செல்வம் சேர்ப்பதில் ஆர்வம்.
*6. திருவாதிரை* : எளிமை, சாமர்த்தியசாலி, திட்டமிட்டுப்பணி செய்பவர், விவாதத்தில் வல்லவர், சுபநிகழ்ச்சிக்கு தலைமையேற்பவர்.
*7. புனர்பூசம்* : கல்விமான், சாதுர்யப் பேச்சு, ஊர்சுற்றுவதில் ஆர்வம், நன்றிமிக்கவர், ஆடம்பரத்தில் நாட்டம்.
*8. பூசம்* : பிறரை மதிப்பவர், பக்தியில் நாட்டம், வைராக்கியம் மிக்கவர், நண்பர்களை நேசிப்பவர், புகழ்மிக்கவர், மென்மையானவர்.
*9. ஆயில்யம்* : செல்வந்தர், தர்மவான், செலவாளி, ஆடம்பரப்பிரியர், சத்தியவான், நேர்மை மிக்கவர்.
*10. மகம்* : ஆராய்ச்சி மனப்பான்மை, கல்வியில் ஆர்வம், தர்மவான், பழக இனிமையானவர், நேர்மையாக நடக்க விரும்புபவர்.
*11. பூரம்* : ஒழுக்கமானவர், புத்திசாலி, விவசாயம், வியாபாரத்தில் ஆர்வம், உண்மையானவர், செல்வாக்கு, பேச்சுத்திறன் மிக்கவர்.
*12. உத்திரம்* : நாணயமானவர், பக்திமான், நட்புடன் பழகுபவர், நன்றி மறவாதவர், சுகபோகி, உறவினர்களை நேசிப்பவர்.
*13. அஸ்தம்* : ஆடை, ஆபரண பிரியர், கல்வியில் ஆர்வம், கலாரசிகர், நகைச்சுவையாகப் பேசுபவர், தாய்மீது பாசம் கொண்டவர், பழக இனியவர்.
*14. சித்திரை* : ஊர் சுற்றுவதில் ஆர்வம், கல்விமான், தைரியசாலி, எதிரிமீதும் இரக்கம், சாதிப்பதில் வல்லவர், பரந்த உள்ளம் கொண்டவர்.
*15. சுவாதி* : புத்திகூர்மையானவர், யோசித்து செயல்படுபவர், சுகபோகி, பழக இனியவர், நம்பகமானவர், யோகம் மிக்கவர்.
*16. விசாகம்* : வியாபார ஆர்வம், சாமர்த்தியசாலி,கலா ரசிகர், தர்மவான், சுறுசுறுப்பானவர், தற்பெருமை கொண்டவர்.
*17. அனுஷம்* : நேர்மையானவர், அந்தஸ்து மிக்கவர், அமைதியானவர், ஊர் சுற்றுவதில் ஆர்வம், அரசால் பாராட்டு பெறுபவர்.
*18. கேட்டை* : கல்வியில் ஆர்வம், துணிச்சலானவர், குறும்பு செய்வதில் வல்லவர், முன்கோபி, சாமர்த்தியசாலி,புகழ் மிக்கவர்.
*19. மூலம்* : சுறுசுறுப்பானவர், கல்வியாளர், உடல்பலம்மிக்கவர், நீதிமான், புகழ்விரும்பி, அடக்கமிக்கவர்.
*20. பூராடம்* : சுகபோகி, செல்வாக்குமிக்கவர், பிடிவாதக்காரர்,வாக்குவாதத்தில்வல்லவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.
*21. உத்திராடம்* : தைரியசாலி, கலையில் ஆர்வம், பொறுமைசாலி, நினைத்ததை சாதிப்பவர், சாதுர்யமாகப் பேசுபவர்.
*22. திருவோணம்* : பக்திமான், சமூகசேவகர், சொத்துசுகம் கொண்டவர், பிறரை மதிப்பவர், உதவுவதில் வல்லவர்.
*23. அவிட்டம்* : கம்பீரமானவர், செல்வாக்கு மிக்கவர், தைரியசாலி, முன்கோபி, மனைவியை நேசிப்பவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.
*24. சதயம்* : வசீகரமானவர், செல்வந்தர், பொறுமைசாலி, முன்யோசனை கொண்டவர், திறமையாக செயல்படுபவர், ஒழுக்கமானவர்.
*25. பூரட்டாதி* : மன திடமானவர், பலசாலி, சுகபோகி, பழக இனியவர், தொழிலில் ஆர்வம் மிக்கவர், குடும்பத்தை நேசிப்பவர்.
*26. உத்திரட்டாதி* : கல்வியாளர், சாதுர்யமாகப் பேசுபவர், ஆபரணபிரியர், பக்திமான், கடமையில் ஆர்வம் மிக்கவர்.
*27. ரேவதி* : தைரியசாலி, நேர்மையானவர், எதிரியை வெல்பவர், சுகபோகத்தில் நாட்டம், தற்புகழ்ச்சி விரும்புபவர், பழக இனியவர்.
நட்சத்திர குண நலன்களுடன் நமது குணங்களைப்பொருத்திப் பார்ப்போம். ஏதேனும் நல்ல குணங்கள் குறைந்திருந்தால் அதை நிறைவு செய்து மேம்படுவோம்
Thanks to Avitam V Srinivasan


காற்று

காற்றுக்கு பெயர்......
தெற்கிலிருந்து வீசினால் --தென்றல்
வடக்கிலிருந்து வீசினால் --வாடை
கிழக்கிலிருந்து வீசினால் ---கொண்டல்
மேற்கிலிருந்து வந்தால் ---மேலை
உலகில் எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு ! இந்த உலகம் உள்ளவரை நம் தமிழ் வாழவேண்டும் !
(அ) திசை பொருத்து காற்றின் பெயர்கள்:
(௧) தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று
(௨) வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று
(௩) கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல்க் காற்று
(௪) மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று
(ஆ) காற்று வீசும் வேகம் பொருத்து பெயர்கள்:
(௧) 6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "மென்காற்று"
(௨) 6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "இளந்தென்றல்"
(௩) 12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "தென்றல்"
(௪) 20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புழுதிக்காற்று"
(௫) 30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "ஆடிக்காற்று"
(௬) 100கி.மீ வேகத்தில் வீசும் காற்று "கடுங்காற்று"
(௭) 101 -120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புயற்காற்று"
(௮) 120 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்று "சூறாவளிக் காற்று"

பஞ்சபூத இயக்க விதிகள் - 3

அடுத்ததாக நாம் பஞ்சபூதங்களின் குணங்கள் பற்றி அறிந்து கொள்வோம்.
ஒவ்வொரு பூதத்திற்கும் மூன்று வேறுபட்ட குணங்கள் இருக்கின்றன. அவை சாத்வீக அல்லது சத்வ குணம், 
ராட்சஷ அல்லது ரஜஸ் குணம், 
தாமச அல்லது தமஸ் குணம் என்று பெயரிடப்பட்டுள்ளன.

இந்த முக்குணங்களின் விளைவாக ஞானேந்திரியங்கள் கர்மேந்திரியங்கள் தொழில்களை  உருவாகின்றன. சாந்தமாக செயலாற்றினால் சாத்வீகமாகவும் , விரைந்து செயல்பட வேண்டியிருப்பின் ராட்சச குணமாகவும், மிகவும் மந்தமாக செயல் படுவதை தாமச குணமாகவும் கருதப் படுகிறது.

ராட்சச அம்சத்தில் இருந்து, காற்று -  நிற்றல், நடத்தல் என தொழில்களை கால்களின் மூலமாகவும்,  நெருப்பின் வாயிலாக எடுத்தல், கொடுத்தல், வாங்குதல் என்கிற தொழில்களை கைகளின் மூலமாகவும், நீரின் மூலமாக உடலின் கழிவுகளை வெளியேற்றும் தொழில்களை கருவாயும் சிறு நீர்த் தாரையும் கொண்டு செய்கின்றன.

பிராணன் என்கின்ற காற்று நம் உடலின் ஒவ்வொரு அவயத்திலும் உள்ளது.
அவை உள்ளே செல்வதும் வெளியேறுவதுமாக இருப்பதினால் தான் உடலே இயங்குகிறது. உடலில் இருந்து காற்று தத்துவம் முழுமையாக நீங்கினால் இந்த உடல் செயலற்று இயங்காமல் போய்விடுகிறது.

 நாசியால் உள்ளிழுக்கப் படும் காற்றை பிராணன் என்றும் வெளியேறும் காற்றை அபானன் என்று நாம் பெயரிட்டு அழைக்கின்றோம்.

உள்ளிழுக்கப் படும் காற்றின் உதவியால், உடலினுள் இரத்த ஓட்டம் உடலெங்கும் சீராகவும் வேகமாகவும் மெதுவாகவும் என நிலைமைக்குத் தகுந்தவாறு பரவச் செய்கின்றன. 
வெளியேறும் காற்றின் உதவியால் கழிவுகளை வாந்தி எடுத்தல், ஏப்பம், கண்ணீர் சிந்துதல் போன்ற செயல்களும் நடைபெறுகின்றன. உடலில் இருந்து உயிர் வெளியேற்றவும் உதவுகின்றன.

உடலின் வளர்ச்சிக்காக உண்ணப்படும் உணவை ஜீரணிக்கவும் உதவுகின்றன. ஜீரணிக்கப் பட்ட உணவின் ரசத்திலிருந்து கிடைக்கும் சத்துக்களையும் இரத்த ஓட்டத்தில் கலந்து அவையங்களுக்கு அனுப்பவும் காற்று உதவுகின்றது. 

உள்மூச்சு, வெளி மூச்சு, கொட்டாவி, தும்மல் போன்ற இயக்கங்களும் காற்றே செயல் பட காரணமாகும். பசி, தாகம் ஏற்படவும் காற்றே காரணமாகும். 

இவ்வாறு தொழில் புரியும் காற்றை தச வாயுக்கள் என அழைக்கப்படுகின்றன.

மேலும், மனம் வாயு(காற்று) வின் அம்சமாகும். நினைவும் மறதியும் எங்கின்ற செயல்களைக் கொண்டு காற்றைப் போல இங்கும் அங்குமாக அலைந்து திரியும்.

ஆகாயத்தின் குணமாவது வெகுளி, மதம், மானம், அகங்காரம், உலோபம் எனும் ஐந்தாகும். இவைகள் ஐந்தைந்தாக பிரிந்து இருபத்தைந்து தத்துவங்களாக உருப்பெறும்.

புத்தி நெருப்பின் குணமானதால், பொருள்களின் சுய உருக்களை நிச்சயித்து அதன் விருத்திகளை அறிவது புத்தியாகும். நன்மை தீமைகளை ஆராய்ந்தறிய புத்தி உதவுகிறது. 

சித்தம் நீரின் குணமாகும். பொருள்களின் மீதான நினைப்பே சித்தமாகும். பொறி புலன்களுக்கு சலனத்தை விளைவித்து அதன் வழியே விஷயங்களுக்கு இழுத்துச் செல்லும்.

சித்தம் என்பது விரும்பியதைப் பெற நினைக்கும் உணர்வு. சித்தமும் மனமும் ஒரே வகையானது. 

அகங்காரம் மண்ணின் அம்சம். ஊனுடலை நான் என்று தீர்மானிக்கும் வடிவ விருத்தியே அகங்காரமாகும்.

செயல்களின் காரண காரியத்தின் அவசியத்தை ஆழ்ந்து ஆராயாமல் ஆலோசிக்காமல் நான் எனது என்கிற தீர்மானத்தில் முனைந்து கொண்டு பாவ புண்ணியங்களை செய்து கொண்டிருக்கும்.

தொடரும்....


பஞ்சபூத இயக்க விதிகள் - 2

பஞ்சபூதக் கருத்துக்களை மையமாக அமைத்து உண்டாகும் கருத்துக்கள் அழிவற்றவை. உண்மையானவை. இவற்றின் சூட்சுமத்தை உணரத்தான் யாருமில்லை. உணர்ந்து கூறிய கருத்துக்களை , மூடக் கருத்துக்கள் என்று கூறினாலும், பின்னாளில் விஞ்ஞானம் அதனை மெய்ப்பித்து காட்டி வருகிறது. அவை மூடக் கருத்துக்கள் அல்ல. அதை உணராத மெய்யறிவாளர் எனக் கூறிக் கொண்டிருக்கும் நாம் தான் மூடர்கள் என்பதனை பின்னாளில் உணர்கிறோம். 

உலகத்துப் பொருட்கள் அனைத்தையும் 5 ( ஐந்து ) பிரிவாகப் பிரித்து பஞ்சபூதத்திற்குள் அடக்கிவிடலாம். 

ஐந்தின் செயலை நாம் உணர்ந்திருந்தால் தான் இவற்றை பகுத்து பிரிக்கும் நுண்ணறிவும் இருக்கும். 

சுவை ஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகை தெரிவான் கட்டே உலகு 

என்பார் திருவள்ளுவர். 

பஞ்சபூதங்களே உயிரற்ற ஜடப் பொருள்களையும், உயிர்ப்பொருள்களையும், ஜீவ பிராணப் பொருள்களையும் இயக்குகின்றன.

விண்ணில் உள்ள நட்சத்திரங்கள், சுற்றிவரும் கோள்கள் என அனைத்தும் இவ்வைந்திற்குள்ளே அடக்கம்.

நம் தமிழ் மொழி எழுத்துக்களும் அடக்கம். 

பிருதிவி - மண்
அப்பு -  நீர்
தேயு - நெருப்பு
வாயு - காற்று
ஆகாசம் - வெளி.
இந்த பஞ்சபூதத்தின் கலப்பு இல்லாத பொருள்களே இல்லை.

பஞ்சபூதங்களை (1) சூட்சும கண்களால் பார்க்க இயலாதவை (2) கண்ணால் பார்த்து இயக்(ங்)கும் பொருள்கள் என இரு பிரிவாக பிரிக்கலாம்.

வேதங்கள் வியக்தம் அவ்வியக்தம் என கூறுகின்றன.

கண்ணிற்கு புலப்படாத சூட்சும பஞ்சபூதங்களே சுத்த சைதன்யமாகிய நித்ய வஸ்து அல்லது சச்சிதானந்த சொரூபமாகிய பிரம்மம். இந்த பிரம்மத்திலிருந்து மூலப் பிரகிருதி தோன்றுகிறது.

இதிலிருந்து முக்குணங்கள் தோன்றி உலகத்தை படைக்கின்றன.

சூட்சும ஐம்பூதங்களிலிருந்து ஸ்தூல ஐம்பூதங்கள் தோன்றுகின்றன.

இந்த ஸ்தூல ஐம்பூதங்களில் தோன்றும் முக்குணங்கள் தான் குணபேதம் அடைகின்றன.

ஒவ்வொரு பூதத்தையும் இரு பிரிவாக பிரித்து, ஒரு பாதியை அழிவில்லாமல் நிறுத்தியும், மறு பாதியை மற்ற நான்கு பூதங்களுக்கு சமமாகப் பிரித்துக் கொடுக்கப்படுகின்றன. 
உதாரணமாக, நெருப்பு பூதத்தில் பாதி அப்படியே நிறுத்தி, மற்ற அரை பாகத்தினை ஏனைய நான்கு பூதங்களிலும் சமமாக கலக்கும் போது ஸ்தூல பிரபஞ்சம் உருவாகிறது.

இப்படி ஸ்தூலமாகப் பிரிந்த பஞ்ச பூதங்களே தேகமாகவும், அதன் 96 தத்துவங்களுமாக மனிதனை இயக்குகின்றன.

இந்த ஐந்து பூதங்கள் தான் ஞானேந்திரியம். அதனை ஆதாரமாகக் கொண்டு இயங்குபவை கர்மேந்திரியங்கள்.

கர்மேந்திரியங்கள் ஐந்தாகவும், தன் மாத்திரைகள் ஐந்தாகவும், மனம், புத்தி, சித்தம் , அகங்காரம் என்ற கரணம் நான்காகவும் என இப்படி ஆன்ம தத்துவம் இருபத்தி ஐந்தாக மனிதனை வழி நடத்தும். 

மண்ணில் ஐந்து குணங்களும்,
 நீரில் நான்கு குணங்களும்,
 நெருப்பில் மூன்று குணங்களும்,
காற்றில் இரண்டு குணங்களும், 
ஆகாயத்திற்கு ஒரு குணமும் உண்டு.

பிருத்வி எனப்படும் மண்ணிற்கு ஐந்து குணம் இருப்பதால் இது மகா பஞ்சபூதமாகும். 
மண் தோற்றுவிக்க மற்ற தாது, தாவர சங்கமங்கள், தேவர், நரர், மக்கள் யாவரும் உற்பத்தியாகின்றனர்.

மனிதனில் இப்பஞ்ச பூதங்களை எப்படி அறிவது?

பஞ்சபூதங்கள் இத்தன்மை நீங்கின மண் உடலாகவும், நீர் வாயாகவும், தீ கண்ணாகவும், காற்று மூச்சாகவும், ஆகாயம் செவியாகவும் உணரப்படுகிறது.

இவ்வைந்தும் ஐம்பொறிகள் எனப்படும். உடம்பு ஊனாகவும், நீரால் வாய்ச் சுவையாகவும், தீ எனப்படும் நெருப்பு கண் ஒளியாகவும், காற்றால் மூக்கு நாற்றம் வாசனை உணரப்படுவதாகவும், ஆகாயத்தினால் செவி ஓசையாகவும் பொருந்தி நிற்கின்றன.

மண்ணின் பகுதி - நரம்பு, இறைச்சி, எலும்பு, மயிர், தோல் ஆகிய ஐந்தும்,
 நீரின் பகுதி - சிறு நீர், மூளை, நிண நீர், இரத்தம், சுக்கிலம், சுரோணிதம் ஆகவும்,
இவைகளின் கூட்டு அதாவது மண்ணும் நீரும் இணைந்து - பூமியிலிருந்து அன்னம் தோன்றி, அன்னத்திலிருந்து ரசம் தோன்றி, ரசத்திலிருந்து உதிரந்தோன்றி, உதிரத்திலிருந்து மாமிசம் எனப்படும் இறைச்சி தோன்றி, மாமிசமாகிய ஊனில் (கொழுப்பு) இருந்து அஸ்தியாகிய எலும்பு தோன்றி, எலும்பிலிருந்து மச்சையாகிற மூளை தோன்றி, இந்த மூளையில் இருந்தே சுக்கில சுரோணிதமும் தோன்றுகின்றன.

தொடரும்..... 



சமீபத்திய பதிவுகள்

கும்பகோணம் டிகிரி காபி

கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா? பித்தளை அல்லது தாமிரத்தாலான சற்றே மெகா சைஸ் ஃபில்டர்கள், ‘டம்ளர் - டவரா செட்’கள் இவைதான் கும்பகோணம்...