Skip to main content

Posts

Showing posts from July 3, 2019

மகிழ்ச்சியாக வாழ

1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது சிரித்த முகமாகச் செல்லுங்கள். 2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது, எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி அமருங்கள். 3. தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள். 4. எப்போதும் இரக்கம், உற்சாகம், ஊக்கம், கருணை ஆகிய குணங்கள் மனத்தில் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். 5. அதிக நேரம் ஏதாவது விளையாடுங்கள். 6.  அதிகமான ஆன்மீக மற்றும் விஞ்ஞான  புத்தகங்களை படியுங்கள். 7. உங்கள் தினசரி அலுவலில் தியானம், யோகம், வழிபாடு போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். இவை உங்கள்  வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும். 8. உங்கள் ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள். 9. அடிக்கடி நிறைய கனவு காணுங்கள், விழித்திருக்கும் போது! 10. மரங்களிலும்,செடி கொடிகளிலும் விளையும் உணவுப்பொருட்களை பச்சையாக அப்படியே  நிறைய உண்ணுங்கள். 11. தினசரி மூன்று நபர்களையாவது மகிழ்ச்சிப்படுத்துங்கள். 12. தினமும் நிறைய தண்ணீர் அருந்துங்கள். 13. உங்களுக்குள் உன்னதமான ஆற்றல் மறைமுகமாக இருப்பதை உணருங்

காயத்ரி மந்திரம்

காயத்ரி மந்திரம் உடலை இயக்கும் ஒரு உன்னதமான கருவி . காயத்ரி மந்திரத்தினைப் பற்றி சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் பொழுது., "மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம்" எனக் குறிப்பிட்டுள்ளார். ஜேபிஎஸ் ஹால்டேன் என்ற பிரபல விஞ்ஞானி (1892—1964) காயத்ரி மந்திரத்தினைப் பற்றி குறிப்பிடும் பொழுது காயத்ரி மந்திரம் ஒவ்வொரு இரசாயன கூடங்களின் வாயில் கதவிலும் காயத்ரி மந்திரம் பொறிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் "நதிகளில் நான் கங்கையாகவும., மலைகளில் நான் விந்திய மலையாகவும்., மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாகவும் இருக்கின்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார். சுவாமி இராமகிருஷ்ண பரமஹமஸர் கூறுகையில் "பெரிய பெரிய கடுந்தவ முயற்சிகளில் மனிதர்கள் ஈடுபடுவதனைக் காட்டிலும்., காயத்ரி மந்திரத்தினை ஜபிப்பது மிகப்பெரிய சாதனையாகும். இது மிக சிறிய மந்திரம்தான். ஆனால், மிக மிக சக்தி வாய்ந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார். பிரபல மேலை நாட்டு ஞானி ஆர்தர் கொயெஸ்ட்லர் "காயத்ரி மந்திரம் 1000 ஆட்டம் பாம்களுக்குச் (Atom Bomb) சமம்" எனக் குறிப் பிட்

நாகலிங்கப்பூ

*நாகலிங்க பூவின் அதிசயம்*🚩 🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀 சிவலிங்கத்தை ஒரு கோயிலில் பிரதிஷ்டை செய்யவேண்டும் என்றால், லிங்கத்திற்கு மேல்  ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கட்டவேண்டும்.  அந்த பாத்திரத்திலிருந்து சொட்டு சொட்டாக தண்ணீர் விழும். சோழமன்னர் ஒருமுறை ஒரு சிவாலயத்தை கட்டினார்;  அப்போது அவருக்கு ஒரு அச்சம்தோன்றியது. நம் காலத்திற்குப் பிறகு தண்ணீர் ஊற்றுவார்களோ இல்லையோ என்ற அச்சம்தான் அது. உடனே ஒரு யோசனைத் தோன்றியது, சந்திரகாந்த கற்கலால் கருவரையின் மேற்கூறையை அமைத்து மையத்தில் ஒரு கமலத்தை அமைத்தார். என்ன "அதிசயம்" 24 வினாடிக்கு ஒரு முறை காற்றின் ஈரத்தை . சந்திரகாந்தக்கல் உறிஞ்சி சிவலிங்கத்தில் தண்ணீராகச் சொட்டியது. கோயில் இருக்கும் ஊர் *திட்டை* அதுபோல் இந்த நாகலிங்க மலரின் மேற்கூறையில், சின்னச் சின்ன ஆட்டணா இருக்கும் அந்தத் தும்பித் தாரையில் இருந்து 24 வினாடுக்கு ஒருமுறை ஒரு பனித்துளி அளவு தண்ணீர் லிங்கத்தில் விழும் அதிசயம் நடைபெறும். 1."நாகம் குடை பிடிக்க உள்ளே லிங்கம்" இருக்கும் அதியற்புத வடிவில் நாகலிங்கப் புஷ்பம் பூக்கும் .பூவுலகின் மகத்தான .நாம் வாழும் கால

லிங்கத் திருமேனி

சிவன், பிரம்மா, விஷ்ணு என்ற மும்மூர்த்திகள் யாரென்றே தெரியாமல் கதையளக்கும் அறிவிலிகளுக்கு இதோ திருமூலரின் விளக்கம். மும்மூர்த்திகளின் வடிவமாக கருதி வணங்கப்படும் சிவலிங்கம் அதற்கான விளக்கத்தை கொடுக்கிறது. சிவலிங்கம் என்பது அணு அமைப்பை விளக்கும் உருவகம். இவ்வுலகில் எல்லாமும் அணுக்களால் ஆனவையே. ஒரு அணு என்பது நடுவில் புரோட்டான்கள்+ நியூட்ரான்களால் ஆன ஒரு உட்கரு மற்றும் அந்த கருவை வட்டப் பாதையில் சுற்றி வரும் எலெக்ட்ரான்கள். புரோட்டான்கள் - நேர் மின் சக்தி கொண்டவை எலெக்ட்ரான்கள் - எதிர் மின் சக்தி கொண்டவை நியூட்ரான்கள் -  சமநிலை கொண்டவை. நியூட்ரான்களின் வேலை: நேர் மின் சக்தி கொண்ட புரோட்டான்கள் ஒன்றை ஒன்று விலக்கிக்கொள்ளாமல் அவற்றின் இடையில் நின்று நடுநிலை வகித்து அணு கருவை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது. புரோட்டான்களின் வேலை: எதிர் மின் சக்தி கொண்ட எலெக்ட்ரான்கள் சிதறி ஓடாமல் அவற்றை தன் நேர் மின் சக்தியால் இழுத்து வைத்திருப்பது. மைய விலக்கு விசை: எதிர் எதிர் மின் சக்தி கொண்ட புரோட்டான்களும், எலெக்ட்ரான்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து விடாமல் தடுப்பதற்காக எலெக்ட்ரான்களை வட்டப் பாதையி