ஆடி

*ஆடி - நாற்பது*

⛱1. ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயன காலமாகும் !!

⛱2. இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் சிறப்பானதாகும் !!

⛱3. ஆடி மாதத்தைக் கணக் கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கம் ஏற்படுகிறது !!

⛱4. ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும் !!

⛱5. ஆடி மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் பன்னிரண்டு நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள் ,  மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது !!

⛱6. ஆறு, மக்களின் ஜீவ நாடியாதலால், அதில் ஆடி மாதம் புதுநீர் வருவதைக் கொண்டாடுவது பல நூற்றாண்டுகளாக தமிழர் மரபாக உள்ளது !!

⛱7. ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதி யின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம் !!

⛱8. தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தில் தான் அதிகபட்ச அளவுக்கு அம்மன் கோவில்களில் திருவிழா நடக்கிறது. எனவே ஆடி மாதத்துக்கு அம்மன் பக்தர்களிடம் தனி மரியாதை உண்டு !!

⛱9. கேரளாவில் ஆடி மாதத்தை கஷ்டமான மாத மாக அம்மாநில மக்கள் கருதுகிறார்கள் !!

⛱10. ஆடி அமாவாசை அன்று மறைந்த முன் னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த பலன் கிடைக்கும் !!

⛱11. ஆடி பவுர்ணமி தினத்தன்று தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது. எனவே ஆடி பவுர்ணமி தினத்தன்று வைணவ தலங்களில் சிறப்பு வழிபாட நடைபெறும் !!

⛱12. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அம்மனுக்கு பல வித காய்கறிகளால் ஆன கதம்ப சாதத்தை படைப்பது ஐதீகமாக உள்ளது !!

⛱13. ஆடி மாதம் சுக்ல தசமியில் திக் தேவதா விரதம் இருக்க வேண்டும். அன்று திக் தேவ தைகளை அந்தந்த திக்குகளில் வணங்கி பூஜித்தால் நினைத்தது நடக்கும் !!

⛱14. ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசி முதல் கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி வரை மாச உப வாசம் இருப்பது குடும்பத்தில் அமைதி ஏற்படுத்தும் !!

⛱15. ஆடி மாதம் கிராம தேவைதை கோவில்கள் உள்பட திறக்காத எல்லா கோவில்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது !!

⛱16. ஆடி செவ்வாய்க்கிழமைகளில் கோவிலில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஆனால் எலுமிச்சம் பழ விளக்குகளை ஒரு போதும் வீட்டில் ஏற்றக் கூடாது !!

⛱17. ஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசி நாள் வரை பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நடைபெறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும் !!

⛱18. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை என்ற ஊரில் முருகன் கோவில் உள்ளது. ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அங்குள்ள முருகனுக்கு கூடை, கூடையாக மலர்களை கொட்டி மலர் அபிஷேகம் செய்வார்கள். இதை அந்த பகுதி மக்கள் ஆடியில் மலர் முழுக்கு, அழகு வேல்முருகனுக்கு என்று சொல்வார்கள் !!

⛱19. ஆடிப்பெருக்கு திருவிழா ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் விமரிசையாக நடைபெறும். அப்போது பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருள்வார் !!

⛱20. ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காமாட்சியை வணங்கினால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும் !!

⛱21. ஆடி மாதம் முழுவதும் மீனாட்சியை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி ஏற்படும் !!

⛱22. ஆடி மாதம் முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும் !!

⛱23. ஆடி மாதம் சுக்ல துவாதசியில் மகா விஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால் செல்வம் பெருகும் !!

⛱24. ஆடி மாதம் சுக்ல பட்ச ஏகாதசி தினத்தன்று அன்னதானம் செய்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும் !!

⛱25. ஆடி மாதம் சுக்லபட்ச திரயோதசியில் பார்வதி தேவியை நினைத்து விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும் !!

⛱26. கஜேந்திரன் என்ற யானையை முதலை கவ்வியபோது அந்த யானை ஆதிமூலமே என்ற கதற உடனே திருமால் சக்ராயுதத்தை ஏவி யானையை காப்பாற்றினார். இதனை நினைவுப்படுத்தும் வகையில் ஆடி மாதம் எல்லா திருமால் தலங்களிலும் கஜேந்திர மோட்ச வைபவம் நடத்தப்படுகிறது !!

⛱27. ஆடி மாதம் ஏகாதசி, துவாதசி நாட்களில் அரச மரத்தை சுற்றி வந்து வழிப்டால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும் !!

⛱28. தஞ்சாவூரில் நிசும் சூதனி உக்கிர காளியம்மன் கோவில் உள்ளது. ஆடி பதினெட்டாம் பெருக்கு தினத்தன்று தஞ்சை மாவட்ட கிறிஸ்தவர்கள் அங்கு ரொட்டி, ஆட்டுக்கறி படையலிட்டு வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர் !!

⛱29. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும் !!

⛱30. ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும் !!

⛱31. ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும் !!

⛱32. ஆடி மாதம் அம்மனுக்கு பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும் !!

⛱33. அம்மனை வழிபடும் போது மறக்காமல் லலிதாசகஸ்ர நாமம் சொல்ல வேண்டும் !!

⛱34. ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, ரவிக்கை, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்க வேண்டும் !!

⛱35. ஆடிப்பூரத்தன்று ஆண்டாள் பிறந்தாள் என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் ஆடிப்பூரத்தன்று ஆண்டாளை நந்தவனத்துக்கு எழுந்தருள செய்வார்கள். அப்போது திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படும். இதனால் ஆண்டாள் மனம் குளிர்ந்து இருப்பாள். அந்த சமயத்தில் ஆண்டாளை வழிபட்டால், உங்களது எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும் !!

⛱36. ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல் களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சகல நலன்களையும், நீங்காத செல்வத்தை பெறலாம் என்பது ஐதீகம் !!

⛱37. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும் !!

⛱38. ஆடி மாதத்தை “பீடை மாதம்” என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், “பீட மாதம்” என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது !!

⛱39. ஆடி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணிமாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயாசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும் !!

⛱40. பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன !!

சர்வம் சக்தி மயம்.

தூபங்களும் அதன் பயன்களும்

சந்தனதத்தில்- தூபமிட தெய்வ கடாட்சம் உண்டு".

சாம்பிராணியில்-
   " தூபமிட கண் திருஷ்டி பொறாமை நீங்கி முன்னேற்றம் உண்டாகும்"

ஜவ்வாது -
   "தூபமிட திடீர் அதிர்ஷ்டம் கிட்டும்"

அகிலி -
    "தூபமிட குழந்தை பாக்கியம் உண்டாகும்".

துகிலி -
   "தூபமிட குழந்தைகளுக்கு நல்ஆயுள் அழகு
ஆரோக்கியத்தினை உண்டாகும்"

துளசி தூபமிட
    " காரியத்தடை திருமணத்தடை நீங்கி விரைவில் நடந்தேறும்".

தூதுவளை -
  "தூபமிட எந்நாளும் வீட்டில் தெய்வங்கள் அருள் புரியும்"

வலம்புரிக்காய் -
   "தூபமிட பன்னிரண்டு வகையான பூத கணங்களும் நீங்கும்"

வெள்ளை குங்கிலியம் -
  " தூபமிட துஷ்ட அவிகள்
இருந்த இடம் தெரியாது நீங்கி விடும்".

வெண்கடுகு -
    "தூபமிட பகைமை எதிர்ப்புகள் விலகும்"

நாய்கடுகு -
" தூபமிட துரோகிககள் நம்மை கண்டு  ஓடுவர்"

மருதாணி விதை -
" தூபமிட சூனிய கோளாறுகளை
நீக்கும்"

கரிசலாங்கன்னி -
  "தூபமிட மகான்கள் அருள்கிட்டும்"

வேப்பம்பட்டை -
"தூபமிட ஏவலும் பீடையும் நீங்கும்"

நன்னாரிவேர் -
    " தூபமிட இராஜவசியம் உண்டாக்கும்"

வெட்டிவேர் -
"தூபமிட சகல காரியங்களும்
சித்தியாகும்"

வேப்பஇலைதூள் -
"தூபமிட சகலவித நோய்
நிவாரணமாகும்"

மருதாணி இலைதூள் -
"தூபமிட இலட்சுமி கடாட்சம்
உண்டாகும்"

அருகம்புல்தூள் -
  "தூபமிட சகல தோஷமும்
நிவாரணமாகும்"

தினமும் வீடு,
    கடை,
        தொழிற்சாலை,
              பாடசாலை,
                   அலுவலகம் போன்ற இடங்களில்......... ,

"இறைவனை நினைத்து தூபமிட்டாலே ".....

அவ்விடத்தில் அமைதியும் நற்சூழலும் அமைந்து ,

அங்கு நடக்கும் நடைபெறும் "செயல்கள் யாவும்
இறையருளோடு......,

"சிறப்பாக அமையப்பெறும்"......!!!

"வாழ்க வளமுடன்".....!!
"வளர்க அருளுடன்".....!!

       

பஞ்சபூத இயக்க விதிகள் - 1

பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் அடுத்த பகுதிக்குள் செல்வதற்கு முன், பஞ்சபூத இயக்க விதிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். 

ஒரு வித்து (விதை) இத்தனை நாளில் தான் முளைக்க வேண்டும். முளைத்த விதையானது இத்தனை காலத்திற்குள் பூத்துப் பிஞ்சாகி, காய்த்து கனிந்து தானாக விழ வேண்டும். இவையெல்லாமே ஒரு ஒழுங்குமுறையான இயற்கை விதி.

இந்த விதி யாருடையது?

காலங்கள் பலவாகப் பிரிகிறது. இந்த காலத்தில் தான் இன்னது நடக்க வேண்டும் என்ற கால புருஷ தத்துவத்தை ஆராய்ந்து பாருங்கள்.

இளமை, முதிர்ச்சி, வீழ்ச்சி இவை மனிதனுக்கு மட்டுமல்ல படைக்கப் பட்ட ஜீவராசிகளான மரம் , செடி, கொடி, ஊர்வன, பறப்பன என அனைத்துமே ஒரே அழகான விதிக்குள் கட்டுப்பட்டே இயங்குகின்றன.

இந்த விதியை சரியானபடி அமைத்தது யார்?

மனிதன் எனும் போது இரண்டு கண், இரண்டு காது, இரண்டு கை, இரண்டு கால், ஒரு மூக்கு, ஒரு வாய், ஒவ்வொரு கை கால்களிலும் ஐந்து விரல்கள் என்பன பொதுவானவை.

இவை மனித இனத்தில் மாறுபடுவதில்லை.

ஐம்பொறி ஐம்புலன் அறிவு.
உடம்பில் ஒரே அளவான உஷ்ணம். 
வாத, பித்த, சிலேத்துமம் என்ற உடல் தாது.
எல்லோருக்கும் இன்பமாய் வாழ வேண்டுமென்ற ஆசை.
இதனால் படைப்பவன் ஒரே ஒரு தன்மையான இறைவன்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது திருமூலரின் திருவாக்கு.

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில் தான் இறைவன் பஞ்ச பூதத்தை வைத்து செய்கிறார்.

பஞ்ச பூதங்கள் - மண் ( நிலம் ), நீர்,  நெருப்பு, காற்று, ஆகாயம் (வெளி) .

எல்லா நட்சத்திரங்களும், எல்லா கிரகங்களும் இந்த பஞ்சபூதத் தன்மை பெற்றே அதன் கலப்பும் இயக்கமும் பெற்றிருக்கின்றன.

இதனை புரிந்து கொண்டால், மனித வாழ்வில் சுகம், துக்கம், பிணி, மூப்பு, வாழ்வு, சாவு, அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் இவைகளை உணரவும் அவற்றினை தமது ஆளுமையில் கொண்டு வர முடியும். புரிந்து கொள்ளாவிடில், தமது ஆளுமையில் கொண்டு வர முடியாமல் தோல்வியில் தான் முடியும்.

ஆகவே ஐந்து பிரிவான ஐம்பூதங்களில் அனைத்துமே அடங்கி இருக்கின்றது. 

ஆதியான அஞ்சிலும் அநாதியான நாலிலும்
சோதியான மூன்றிலும் சொரூபமற்றரண்டிலும்
 நீதியான தொன்றிலும் நிறைந்து நின்ற வத்துவை

என்ற இந்த பஞ்ச பூதக் கலப்பே இறைவனுடைய திருமேனி.
இந்த மேனியை அலங்கரிப்பவையே கிரகங்கள், நட்சத்திரங்கள்..
இந்த பஞ்ச பூதக் கலப்பே எல்லாவற்றிலும். 

சித்தர்கள் தத்துவப்படி, ஐம்பூதமே உலகத்தைப் படைத்து, காத்து அழித்து வருகிறது.
- தொடரும் -

குழந்தைகள் கண் நலம்இப்பரந்த பூமியில் பார்வையிழப்பு என்னும் பெரும் சுமையை மிக அதிகமான அளவில்  தாங்கிக் கொண்டிருக்கும் தேசம் நமது பாரத தேசம். 1.09 பில்லியன் மக்களைக்  கொண்ட நம் தேசத்தில் 15 மில்லியன் பேர் பார்வையிழந்தவர்கள். 

52 மில்லியன் பேர்  பார்வைக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள்.
இவர்களில் 3,20,000 பேர்  குழந்தைப்பருவத்திலேயே இந்த சுமையைத் தாங்கிக் கொண்டிருப்பவர்கள்.   

பார்வையிழப்பிற்க்கான மூல காரணங்களில் 66% குணப்படுத்தக்கூடிய அல்லது  தடுக்கக்கூடிய காரணங்களால் பார்வையிழந்தவர்கள்.  

ஒவ்வொருநாளும் கண் சார்ந்த  விபத்துகள், தொற்றுநோய்க் கிருமிகள், ஊட்டச் சத்துக்குறைவு, பிறவியிலேயோ,  பரம்பரையாகவோ அல்லது முறையற்ற கண் பராமரிப்பு, வேறு ஏதாவது நோய்க்கிருமிகள்  போன்ற பல்வேறு காரணங்களால் பார்வையிழப்பு என்னும் கொடுமைக்கு ஆளாகும்  குழந்தைகளும் ஏராளம்.

2.இதுதான் இயல்பான பார்வையா?

குழந்தைகள் தங்களுக்கு கண்ணில் குறைபாடு இருக்கிறது என்பதை அவர்களாகவே புரிந்து  கொள்ள முடியாது. கண்ணில் குறைபாடு உள்ள குழந்தைகள் அந்தக் குறைகளுடனேயே  தமது வேலைகளை, குறிப்பாக படிப்பது, விளையாடுவது, போன்ற வேலைகளை  ‘இதுதான் இயல்பான பார்வை’ என்ற எண்ணத்துடன் செய்கின்றனர்.

3.பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கடமை

குழந்தைகளின் கண் நலத்தில் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மிக  முக்கியமான பங்கு இருக்கிறது. இதனை பெற்றோர்களும் ஆசிரியர்களும் மட்டுமே  கவனித்து குழந்தைகளுக்கு தேவையான உதவியை செய்யலாம்.

4.வரும் முன் காப்போம்

Prevention is better than cure (ஒரு நோயை குணப்படுத்துவதைக்  காட்டிலும் அந்த நோய் வராமல் தடுப்பது எளிது), என்றும் Early detection can  be cured the Diseases (ஒரு நோயை ஆரம்பக்கட்ட நிலையிலேயே  கண்டுபிடித்துவிட்டால் குணப்படுத்துவது மிகவும் எளிது) என்றும் சொல்வார்கள். அது  குழந்தைகளின் கண் நலத்திற்க்கு மிக அதிகமாகவே பொருந்தும்.

5.கருவறையில் நம் குழந்தைகளின் கண் நலம்

 * நெருங்கிய உறவினருக்குள் - பரம்பரை கண் நோய் உள்ள குடும்பங்களுக்குள்  திருமண உறவை தவிர்த்தால் அதன் மூலம் பரம்பரைக் கண் பார்வைக்குறைபாடுடைய  ஒரு புதிய தலைமுறை உருவாவதைத் தடுக்கலாம். மேலும் நம் குழந்தைகள்  கருவிழிகளின் செயல்பாட்டை கருவறையிலேயே தொலைத்துவிட்டு பிறவியிலேயே  பார்வையற்றவராக பிறக்கும் நிலையை தவிர்க்கலாம்.

 * கருவுற்றிருக்கும் தாயின் தினசரி உணவில் பால், முட்டை, பச்சைக் காய்கறிகள்,  கீரை வகைகள் தேவையான அளவு இருக்க வேண்டும்.

 * மருத்துவர்களின் ஆலோசனையின்றி அடிக்கடி ஸ்கேன், எக்ஸ்ரே எடுத்துப்பார்ப்பது  நல்லதல்ல.

 * கருவுற்றிருக்கும் தாய்மார்கள் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் போன்றவற்றை  பார்ப்பதை தவிர்ப்பதும் நல்லது.

 * தகுதியுள்ள மகப்பேறு மருத்துவர் மூலமாகவே பிரசவம் நடைபெற வேண்டும்.  தகுதியற்றவற்றவர்கள் செய்யும் பிரசவத்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு கண் இமைகளை  திறக்க முடியாமை (Ptosis) போன்ற பிரச்சினைகள் வரலாம்.

 *கருவுற்றிருக்கும் காலத்தில் தாய்க்கு அம்மை அல்லது மஞ்சள் காமாலை  போன்ற  நோய் வந்திருந்தால் குழந்தை பிறந்தவுடன் குழந்தையை கண் மருத்துவரிடம் காண்பிப்பது  நல்லது.

* ஆக இந்த குறிப்புகளை மனதில் வைத்துக் கொண்டு தாய்மார்கள் கருவுற்றிருக்கும்  காலத்தில் மிகக் கவனமாக செயல்பட வேண்டும். “முத்துப்போல் குழந்தை பிறக்க  வேண்டும் மூன்று கிலோ எடை இருக்க வேண்டும்” என்பார்கள். அது மட்டுமல்ல்  “முத்துச்சுடரென ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் விழிகளுடனும் பிறக்க வேண்டும்”.

6.பிறந்த குழந்தைகளின் கண் நலம்

* குழந்தை குறைப்பிரசவத்தில் பிறந்திருந்தால், குழந்தைக்கு ‘குழந்தைகள் கண்  சிகிச்சை நிபுணரின்’ (Pediatric Ophthalmologist) ஆலோசனை மிகவும்  அவசியம்.  ஏனெனில் Retinopathy of Prematurity எனப்படும் “வளர்ச்சி  குறைந்த/முழு வளர்ச்சியடையாத விழித்திரை நோய்” ஏற்பட வாய்ப்பு உண்டு.  ஆரம்ப  நிலையில் இதனை குணப்படுத்த முடியும்.

* குழந்தை பிறந்த இரண்டு வாரங்களுக்கு கண்ணீர் சுரக்காது. மீறி கண்ணீர்  வருமேயானால் கண் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.

* கை வைத்தியம், பரம்பரை வைத்தியம் என்ற பெயரில் பக்கத்து வீட்டுப் பாட்டி  சொன்னார், கோடி வீட்டு மாமி சொன்னார் என்று தாய்ப்பால், எண்ணெய்  போன்றவற்றை குழந்தையின் கண்களில் விடுவது தவறு. இவற்றின் மூலம் கண்களில்  நோய்த் தொற்று பரவும் அபாயம் அதிகம்.

* குழந்தை மாறு கண் பிரச்சினையுடன் பிறந்திருந்தால்  “குழந்தை அதிர்ஷ்டத்தை  அள்ளிக் கொண்டு வந்திருக்கிறான்” என்று ஆனந்தக் கும்மியடிக்க வேண்டாம். மாறு  கண் அதிர்ஷ்டத்தின் அடையாளமல்ல. அதனை சரி செய்யாவிடில் பின்னாளில்  பிரச்சினைகள் வரலாம். அந்தக் குழந்தைக்கு உடனடித் தேவை கண் மருத்துவரின்  முறையான ஆலோசனை மற்றும் வழிகாட்டல். கவனிக்காவிட்டால் ஆம்ப்ளியோப்பியா  (Amblypia) எனப்படும்  சோம்பேறிக்கண் (Lazy Eye) நோய்க்கு ஆளாகலாம்.  பாதிக்கப்பட்ட கண் தன் முழு செயல்பாட்டையும் இழக்க நேரிடலாம்.

* குழந்தைகளுக்கு உரிய காலங்களில் போட வேண்டிய தடுப்பூசிகள், சொட்டு  மருந்துகள் போட வேண்டும். இதன் மூலம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி  அதிகரிப்பதுடன் கண் தொற்று நோய் உட்பட சில நோய்களின் க்டும் விளைவுகளிலிருந்து  குழந்தைகள் காப்பாற்றப்படுவதற்க்கும் வாய்ப்பு உண்டு.

* குழந்தைகளுக்கு தட்டம்மை, சின்னம்மை (Measles and Chicken Pox)  போன்றவை வந்தால் அவை குணமானவுடன் கண் மருத்துவரைக் கலந்தாலோசிப்பது  நல்லது. ஏனெனில் கிராமங்களில் “குழந்தை மேலே அம்மா வந்தா.  கண்ணைப்  பறிச்சுட்டு போய்ட்டா, தெய்வக் குத்தம் வந்துருச்சு” என்றெல்லாம் பேசுவதை  கவனித்திருப்பீர்கள். நோய்த்தொற்றின் காரணமாக கண் பார்வைக்குறைபாடு  ஏற்பட்டிருக்கலாம். நம் கவனக் குறைவுக்கு கடவுளை குறை சொல்ல வேண்டாம்.

* குழந்தைகளின் கருவிழிகளுக்கு முன்புறம் கார்னியாவில் பூ விழுந்தது ஏதேனும்  தோற்றமளித்தால் கண் மருத்துவரின் கவனிப்பு தேவை. அது புரை  (Cataract)  அல்லது புற்று நோயாக (Cancer) இருக்கலாம். ஆம் குழந்தைகளுக்கும்கூட  கேட்டராக்ட் வருவதுண்டு.

* நம் குழந்தைகளின் கண் பார்வை குறித்து நாமே ஒரு விளையாட்டின் மூலம் தெரிந்து  கொள்ளலாம். குழந்தை நிமிர்ந்து படுத்திருக்கும்போது அதன் தலைக்கு நேராக பல  நிறங்கள் கொண்ட ஒரு பந்து அல்லது பலூனை பிடித்துக் கொண்டு சொடுக்கு போட்டு  ஓலியெழுப்பலாம். குழந்தை அந்த பலூனைப் பிடிப்பதற்க்காக தனது கைகளையும்  கால்களையும் உயர்த்தி உதைக்கலாம். அந்த பலூனை / பந்தினை வலது புறமாகவும்,  இடது புறமாகவும் தொடர்ந்து ஒலியெழுப்பிக் கொண்டே அசைக்க வேண்டும். அவ்வாறு  செய்யும்போது குழந்தை தன் கண்களை வலது புறமாகவும் இடது புறமாகவும் அசைக்க  வேண்டும்.  அவ்வாறு அசைக்காமல் நிலைகுத்தினாற்போல் பார்த்தால் தொடர்ந்து அந்த  விளையாட்டை நடத்த வேண்டும்.  குழந்தையிடமிருந்து முறையான எதிர்நடவடிக்கை  ஏதும் இல்லை என்றால் குழந்தைக்குத் தேவை உடனடி கண் மருத்துவ சேவை.

7. குழந்தைகளின் உணவுப் பழக்கம்

பொதுவாகவே சத்துள்ள ஆகாரங்கள் நம் குழந்தைகளின் உடல் நலத்திற்கு தேவை.  சரியான உணவுப்பழக்கம் கண் நலத்துக்கு மிக மிக அவசியம். இது குழந்தைப்  பருவத்திலிருந்தே கவனிக்க வேண்டிய குறிப்பு. பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு  மிஞ்சிய வேறேதுமில்லை. மற்ற உணவுகள் கொடுக்க ஆரம்பித்தவுடன் கவனிக்க  வேண்டிய முக்கியமான குறிப்புகள்:

* வைட்டமின் ஏ : ஜெராஃப்தால்மியா எனப்படும் குழந்தைகளின் கண்கள் உலர்ந்து  போகச் செய்யும் பிரச்னைக்கும், மாலைக் கண் நோய்க்கும் முக்கியமான காரணம்  வைட்டமின் ஏ சத்துக்குறைபாடுதான்.

வைட்டமின் ஏ - பால், கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள்,பப்பாளி, முட்டை  மற்றும் கேரட் போன்றவற்றில் தேவையான அளவு இருக்கிறது.

* வைட்டமின் பி : பார்வை நரம்பின் செயல்பாட்டிற்க்கு காரணமாக இருப்பது  வைட்டமின் பி.

வைட்டமின் பி - அரிசி, கோதுமை, முளை கட்டிய தானியங்கள், பீன்ஸ் மற்றும்  முட்டை போன்றவற்றில் தேவையான அளவு இருக்கிறது.

* வைட்டமின் சி : - நமது கண்ணில் உள்ள ரத்தக்குழாய்களின் ஆரோக்கியத்திற்க்கு  வைட்டமின் சி மிகவும் அவசியம்.

வைட்டமின் சி ஆரஞ்சு, நெல்லி, முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, கொய்யா,  எலுமிச்சை மற்றும் தக்காளி போன்றவற்றில் தேவையான அளவு இருக்கிறது.

8. குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களும் கண் நலமும்

நம் குழந்தைகள் பொதுவாக விளையாடும்பொழுது ஏற்படும் விபத்துகளின் காரணமாக  பார்வையிழக்கும் வாய்ப்பும் அதிகமாகவே இருக்கிறது.

* குழந்தைகளுக்கு வழங்கப்படும் விளையாட்டுப் பொருட்கள் தேர்வில் கவனம் தேவை.

- வில் அம்பு விளையட்டு

- கில்லி தாண்டு

- பட்டம் விடுதல் போன்ற தடை செய்யப்பட்ட விளையாட்டுக்களை தக்க அறிவுரை கூறி  தடுப்பது நல்லது.

* மேலும் கூரான பொருள்களான பென்சில், பேனா, கூரான முனையுடைய ஸ்பூன்கள்,  கத்தி போன்றவற்றை வைத்து விளையாடுவதையும் தக்க அறிவுரை கூறி தடுப்பது  நல்லது.

9.பெற்றோர்களின் கனிவான கவனத்திற்க்கு

பெற்றோர்களே, உங்கள் குழந்தைகளுக்கு கீழ்க்காணும் பிரச்சினைகள் ஏதேனும் இருந்தால்  அவர்களது கண்மணிகளை பாதுகாக்க உங்கள் கண் மருத்துவர்களின் ஆலோசனையை  பெற வேண்டியது அவசியம்;

*உங்கள் குழந்தை குறை பிரசவத்தில் பிறந்திருந்தால்,

*உங்கள் குழந்தைகளுக்கு மாறுகண் குறைபாடு இருந்தால்,

*உங்கள் குழந்தையின் கண்களில் இருந்து அடிக்கடி கண்ணீர் வழிந்தால்,

*உங்கள் குழந்தையின் கண்கள் அளவுக்கு மீறி பெரியதாக இருந்தால்,

*உங்கள் குழந்தையின் கார்னியா (கண்ணுக்கு முன்புறம் உள்ள கருமையான பகுதியை  மூடியிருக்கும் மெல்லிய திசு) கலங்கலாகக் காணப்பட்டல்,

*உங்கள் குழந்தைக்கு அம்மை, மஞ்சள் காமாலை போன்ற நோய் வந்திருந்தால் அவை  குணமடைந்தபிறகு ஒரு முறை,

*உங்கள் குழந்தை வெளிச்சத்தைக் கண்டு பயந்தால், அதிகமான வெளிச்சத்தில்  தலையை கவிழ்ந்து கொண்டால் அல்லது கண்களை மூடிக் கொண்டால்,

*உங்கள் குழந்தை தலையை எப்போதும் ஒருசாய்த்தே பார்த்துக் கொண்டிருந்தால்,

*உங்கள் குழந்தை அடிக்கடி கண் வலி மற்றும் தலைவலி இருப்பதாகச் சொன்னால்,

*உங்கள் குழந்தை கண்களை சுழல முடியாமல் சிரமப்பட்டால்,

*உங்கள் குழந்தை பொருட்களை அல்லது புத்தகங்களை கண்ணுக்கு அருகே வைத்து  பார்த்தால் / படித்தால்,

*உங்கள் குழந்தைக்கு பார்க்கும் பொருட்களெல்லாம் இரண்டிரண்டாகத் தெரிந்தால்,

*உங்கள் குழந்தையினால் பள்ளியில் கரும்பலகையை பார்க்க முடியவில்லையென்றால்,

*உங்கள் குழந்தையின் கண்களில் காயம் பட்டால் (கண்களில் அடி பட்டால் கண்ணைக்  கசக்கக்கூடது),

*பொதுவாக கண்ணியலாளர்கள், குழந்தைகள் கண் மருத்துவ பரிசோதனை குறித்து சில  முக்கிய செய்திகளை குறிப்பிடுகிறர்கள். அவை பொதுவாக ஏற்றுக்  கொள்ளக்கூடியதுமாகும்.

*குழந்தை பிறந்த ஆறு மாத காலத்திற்குள் ஒரு முறை

*குழந்தைக்கு மூன்று வயது ஆகும்போது ஒரு முறை

*அதன் பின்னர் குழந்தைக்கு கண்ணில் ஏதும் பிரச்சினை இல்லை என்றாலும் இரண்டு  அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்ய வேண்டும்.

*ஒருவேளை உங்கள் குழந்தை கண்ணாடி அல்லது காண்டாக்ட் லென்ஸ் அணிந்திருந்தால்  கண்டிப்பாக வருடத்திற்கொரு முறை பரிசோதனை செய்ய வேண்டும்.

*கண்களில் ஏதேனும் தொற்று நோய்க் கிருமி பரவினால் மருத்துவர் ஆலோசனைப்படி  மட்டுமே மருந்துகளை உபயோகிக்காலாம்.

*ஒருவர் உபயோகப்படுத்திய சோப்பு, துண்டு மற்றும் சொட்டு மருந்துகளை மற்றவர்கள்  பயன்படுத்தக்கூடாது.

10.கண்கள் சிரமப்படுவதை தவிர்க்க...

*குழந்தைகள் படிக்கும்பொழுது நல்ல வெளிச்சம் இருக்கும் அறையில் படிக்க வேண்டும்.

*கண் கூசும் அளவிற்கு வெளிச்சம் இருக்கக்கூடாது.

*தொலைக்காட்சி பார்க்கும் பொழுதும், கம்ப்யூட்டரில் படிக்கும் பொழுதும்,  கம்ப்யூட்டரில் விளையாடும்பொழுதும் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை தூரத்தில்  உள்ள பொருட்களைப் பார்க்க வேண்டும்.  இவ்வாறு செய்வதால் கண் சோர்வு  அடைவதைத் தவிர்க்கலாம்.

*தினமும் சிறிது நேரம் குழந்தைகள் வெளியில் சென்று விளையாட வேண்டும்.

*குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் கூர்மையான குச்சி, பேனா போன்ற பொருட்களை  வைத்துக் கொண்டு விளையாடவோ, ஓடவோ கூடாது.

*கண்ணாடி அணிந்திருக்கும் சிறுவர்/சிறுமியர் “பிளாஸ்டிக் லென்ஸ்” அணிவது  நல்லது.

குழந்தைகளின் பொதுவான கண் பிரச்சினைகள்/நோய்கள்

குழந்தைகளுக்கு பொதுவாக பார்வைத்திறன் குறைபாடு (Refractive Error), மாறு  கண் (Squint), சோம்பல் விழிகள் (Amblyopia), குறைப்பிரசவத்தில் பிறந்த  குழந்தைகளுக்கு வளர்ச்சி குறைந்த விழித்திரை நோய் (Retinopathy of  Prematurity), மற்றும் விழித்திரை புற்று நோய் (Retinoblastoma) போன்ற  பிரச்சினைகள் அதிகமாக பாதிக்கின்றன.

குழந்தைகள் பாதுகாப்பு
* கர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனையின்றி கண்ட கண்ட மாத்திரைகள் சாப்பிடுவது கருவில் இருக்கும் குழந்தைக்கு நிச்சயம் பாதிப்பை உண்டாக்கும்.

* சிகரெட், போதைப் பொருட்களைத் தாய் உபயோகிப்பது கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கும்.

* தாய் உண்ணும் உணவில் போதிய சத்துக்கள் குறைவானால், மன அழுத்தம் ஏற்பட்டு  வயிற்றிலிருக்கும் குழந்தையைப் பாதிக்கும்.* குழந்தைகளின் பால் புட்டிகளையும், நிப்பிள்களையும் கொதிக்கும் நீரில் போட்டு கிருமி நீக்கம் செய்த பின் பால் நிரப்பிக் கொடுக்கவும். வாரம் ஒரு முறை நிப்பிளை மாற்றவும். குழந்தை குடித்து மீதம் வைத்த பாலை சிறிது நேரம் கழித்துக் கொடுக்கக் கூடாது. கொட்டி விடவும்.

* குழந்தைகளை தலைக்கு மேல் தூக்கிப் போட்டு விளையாட்டுக் காட்டக் கூடாது.

* சின்ன சின்னப் பொருட்கள் தரையில் கிடந்தால் உடனே அதை எடுத்து விடுங்கள். குழந்தைகள் அதை எடுத்து வாயிலோ மூக்கிலோ போட்டுக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

* சுவர் விளிம்புகள், கதவு மேஜை விளிம்புகள் கூராக இல்லாமல் பார்த்து அமைக்கவும்.

* குழந்தைகள் அறைக்குள் சென்று கதவைத் தாழ் போட்டுக் கொள்ளா வண்ணம் உயரமாக தாழ்ப்பாளை அமைக்கவும்.

* குழந்தைகளுக்கான மருந்துக் குப்பியில் வேறு எதையும் ஊற்றி வைக்காதீர்கள் அவசரத்தில் மருந்தென்று மறந்து கொடுத்து விடுவோம்.

* கத்திகள், ஊசிகள், கத்திரிகள், மருந்து மாத்திரைகள் ஆகியவற்றை குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.

* குழந்தைக்கு எட்டாத இடத்தில் தான் மண்ணெண்ணெய், பினாயில் போன்றவற்றை வைக்கவேண்டும். முக்கியமாக ஒன்றரையிலிருந்து இரண்டரை வயதுக் குழந்தை உள்ளவர்கள் வீட்டில் இந்த விசயத்தில் மிகவும் முன்னெச்சரிக்கை தேவை.
* கொசுவர்த்திச் சுருள்கள் மூடிய அறைக்குள் மூச்சுத் திணறலை உண்டாக்கும். கொசு வலை தான் நல்லது. கொசுவிரட்டி மருந்துகள் குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.

* இரும்பு பீரோக்களைப் பற்றிப் பிடித்து குழந்தைகள் ஏறும். அப்படியே பீரோ சரிந்து விழுந்து குழந்தையை நசுக்கி விடும். பீரோக்களை சுவருடன் அசையாமல் பிணைத்து வைக்கவும்.

* இழுப்பான் (ஜிப்) வைத்த உடைகளை முடிந்த அளவுக்கு தவிர்க்கலாம். அல்லது உள்ளாடை அணிவித்த பிறகு அது போன்ற உடைகளை அணிவிக்க வேண்டும். (ஆண் குழந்தைகள் பிறப்புறுப்பு – இழுப்பானை இழுக்கும்போது தோலோடு சிக்கிக் கொண்டுவிட்டால்?!)

* தொட்டிகள் அல்லது பெரிய பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி திறந்து வைக்காதீர்கள் .குழந்தை உள்ளே விழ வாய்ப்பு இருக்கிறது.

* சமையலறையில் முடிந்தவரை குழந்தை செல்லாமல் தவிர்க்கப் பாருங்கள். இடுப்பில் குழந்தையைத் தூக்கிக்கொண்டே கொதிக்கும் ரசத்தை ஒரு அம்மா இறக்கி வைத்திருக்கிறார். அப்போது குழந்தை சற்றே திமிர, ரசம் குழந்தையின் காலில்பட்டு, அங்கு தோல் வழன்றுவிட்டது.

* கதவைத் திறந்து குழந்தை சாலையில் சென்று விடாமல் இருக்க கதவின் தாழ்ப்பாள் கைக்கு எட்டாத உயரத்தில் வைக்கவும்.

* படுக்கை அறையில் படுத்துக் கொண்டே விளக்கைப் போடத் தாழ்வாக மின் வசதிகள் சில இடங்களில் இருக்கும். குழந்தைகள் பேனா அல்லது கம்பியை அதற்குள் செருகி மின்சாரத் தாக்குதலுக்கு ஆளாகலாம். அத்தகைய இடங்களில் பாதுகாப்பான ஏற்பாடுகளை உபயோகிக்கலாம் அல்லது அத்தகைய மின் இணைப்பைத் தவிர்க்கலாம்.

* வீட்டில் உபயோகப்படுத்தும் (எலெக்ட்ரானிக்) மின்சாதனப் பொருட்களின் மின் இணைப்புகள் குழந்தைகள் கை படாத வகையில் இருக்க வேண்டும்.

* அரவை எந்திரங்கள் (மிக்ஸி, கிரைண்டர்) உபயோகம் முடிந்தால் அவற்றை அணைப்பதோடு மின் இணைப்பையும் உருவிப் போடுவது நல்லது. காரணம் அவற்றோடு விளையாடுவது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

* அலைபேசி  போன்ற பொருட்களை குழந்தைகள் தண்ணீருக்குள் தூக்கிப் போட்டு விடலாம் அல்லது பிரித்து மேய்ந்து விடலாம் எனவே அதை விளையாடக் கொடுக்காதீர்கள்.

* துணியைத் தேய்த்து விட்டு இஸ்திரிப் பெட்டியை சூடாக குழந்தைகள் அருகே விட்டு செல்லக் கூடாது.

* சுமார் ஒரு வயது வரை தரைமட்டத்தில் உள்ள பொருள்களைக் கையாளும் குழந்தை அதற்குப் பிறகு எதையாவது பிடித்துக் கொண்டு நிற்கவேண்டும், நடக்க வேண்டும் என முயற்சிக்கிறது. சிறு நாற்காலியைப் பிடித்துக் கொண்டு நிற்பது, உணவு உண்ணும் மேசை மீது  உள்ள துணியை இழுப்பது போன்ற முயற்சிகளையெல்லாம் செய்யும் காலகட்டம் இது என்பதால் அதிக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

* சுமார் இரண்டு வயதில் நாற்காலி மீது ஏறுவது மட்டுமல்ல. பிற சாகசங்களையும் செய்து பார்க்க முயற்சிக்கிறது. மேசையை இழுக்க முயற்சிக்கிறது.

* ஏணிப்படிகளில் ஏற குழந்தைகள் முயற்சிக்கும். சிறு குழந்தைகள் அவ்வாறு ஏறாமல் இருக்க மரத்தில் சின்ன தடுப்புக் கதவு ஒன்று போட்டு பூட்டி வைக்கலாம்.

*  ரசாயன அழகு சாதனங்கள் (சென்ட், சேவிங் லோசன்) போன்றவற்றை தந்தை உபயோகம் செய்து கொள்வதைப் பார்க்கும் குழந்தைக்குதானே அவற்றை முயற்சித்துப் பார்க்கும் ஆர்வம் பொங்கும். முக்கியமாக, சவரக் கத்திகளை மறந்தும்கூட குழந்தைக்கு எட்டும் இடத்தில் வைத்து விடவேண்டாம்.

* வாயில் போட்டு விழுங்கும் அபாயமுள்ள விளையாட்டுப் பொருட்களை சிறு குழந்தைகளுக்குக் கொடுக்காதீர்கள்.

* கீழே விழுந்த அல்லது கீழே கிடக்கும் எதையும் வாயில் போடக்கூடாது என அறிவுறுத்துங்கள்.

* தரையில் குழந்தைகள் சிறு நீர் கழித்தால் உடனே அந்த ஈரத்தை துடைத்து விடவும். குழந்தை அதில் வழுக்கி விழ நேரும்.அதன் மூலம் கிருமிகள் தாக்கி நோய்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

* சூடான எந்தப் பொருளையும் உணவு உண்ணும் மேசையின் முனைக்கருகே வைக்க வேண்டாம். அந்த மேசை மீது விரிக்கப்படும் துணி, மேசையின் எல்லையைத் தாண்டிக் கீழே தொங்கவேண்டாம்.

* ஜன்னல்கள், மொட்டைமாடிகள் போன்றவற்றின் வழியாகக் குழந்தை கீழே விழுந்துவிடும் வாய்ப்பு உண்டு. போதிய தடுப்புக் கம்பிகளை உடனடியாகப் பொருத்துங்கள்.
* கதவை மூடும்போது குழந்தை கையை நசுக்கிக் கொள்வது வெகு இயல்பானது. கவனம் தேவை.

* எங்கேயாவது இருசக்கர வாகனத்தில் போய் விட்டு வீட்டிற்கு வரும்போது இருசக்கர வாகனம் சூடாக இருக்கும் . குழந்தைகள் அப்பா என்று ஓடி வரும்போது அவர்களின் கால்,கைகள் பட்டுவிடலாம்.கவனம் தேவை.

* வீட்டில்  இருசக்கர வாகனம் போன்ற வாகனங்களில் குழந்தைகள் ஏற முயற்சித்து விழுந்து ஆபத்து உண்டாக்கலாம். இரு சக்கர வாகனத்தை மூடி வைக்கலாம்.

* குழந்தைகளை ஒருபோதும் அதிகமான வெப்பத்துக்கு உட்படுத்த வேண்டாம். நீண்டதூரம் குழந்தையை அழைத்துச் செல்ல வேண்டுமென்றால் இருசக்கர வாகனங்களில் செல்வது சரியல்ல.

* குழந்தைகளை பெரிய கடைகளுக்கு பொருட்களை வாங்கப் போகும் போது கொண்டு செல்லாதீர்கள்.

* தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் குழந்தைகள் நெருப்புக் காயம் படாமல் கண்காணிப்பாக இருங்கள்.

* வீட்டில் அனாவசியமாக குப்பை போல் தேவையற்றப் பொருட்களை கொட்டி வைப்பது நல்லதல்ல. ஊர்வன மற்றும் விசப் பூச்சிகள் அதில் மறைந்திருக்கலாம்.

* குழந்தைகள் மண்ணில் விளையாடுவதை அனுமதிக்காதீர்கள்.

* துருப்பிடித்த மற்றும் கிருமித் தொற்று ஏற்படுத்தும் பொருட்களை அப்புறப்படுத்தவும். டெட்டானஸ் போன்ற கொடிய கிருமிகள் அவற்றில் காணப்படலாம். அப்படிப்பட்ட பொருட்களால் காயம் பட்டால் உடனே தடுப்பூசி போடவும்.

* தரையை அடிக்கடி டெட்டால் போன்ற கிருமி நாசினிகளைக் கொண்டு சுத்தமாக வைத்திருக்கவும்.

* குழந்தைகளது விளையாட்டுப் பொருட்களையும் அடிக்கடி கழுவிச் சுத்தமாக்கிக் கொடுக்கவும்.

* குழந்தகளுக்கு உடைகள்,காலணிகள், உறைகள் போடும்போது நன்றாக உதறிய பின் போடவும்.

* நாய் பூனை போன்ற செல்லப் பிராணிகளைக் குழந்தைகள் உள்ள வீட்டில் வளர்க்காதீர்கள்.அதன் உமிழ் நீர்,நகம்,முடி ஆகியவற்றில் நோயுண்டாக்கும் ஏராளம் கிருமிகள் உள்ளன.

* வீடுகளில் தரைப்பகுதி அதிக ஏற்றத் தாழ்வுகள் இல்லாது சமமாக அமைக்க வேண்டும்.

* குழந்தைகளுக்கு நல்ல ஆடையிட்டு அழகு பாருங்கள். தங்க நகைகள் வேண்டாம். திருடர்களை ஈர்க்கும்.

* விருந்தினர் வீடுகளுக்குக் செல்லும்போது கவனம் தேவை. அங்கு பழக்கமில்லாத இடங்களில் புதிய ஆபத்துகள் காத்திருக்கலாம்.

கைவிடப்பட்ட நிலையில்

கோவையில் இருந்து தடாகம் வழியில் சென்று ஆனைக்கட்டி சென்று அங்கிருந்து முக்காலி( கேரளா) செல்ல வேண்டும்.. முக்காலியில் இருந்து நம் சிறிய checked cvரக சடான் கார்கள் செல்ல முடியாது. ஜீப் வகைகள் வண்டியில் செல்வதே உத்தமம். மிக மோசமான வனதுறை சாலையில் போனால் இருக்கின்றது வள்ளியம்மாள் குருகுலம்.

பாதுகாக்கப்பட்ட வனபகுதியில் பிரம்மாண்ட கட்டிடங்களுடன் உள்ளது இந்த ஒற்றை மூலிகை வைத்தியசாலை. இது எப்படி சாத்தியம் அதுவும் கேரளத்தில் என்று சேட்டன்மார்களிடம் சம்சாரித்தால். 

பிரிட்டிஸ் அரசு வள்ளியம்மாள் என்கின்ற ஆதிகுடி இருளர் பெண்ணுக்கு  112ஏக்கரை பட்டயம் போட்டு தந்துள்ளார்கள். அரிய வகை மூலிகை வளர்க்க அன்று வந்த பிரிட்டிஸ் கவர்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சாகும் நிலையில் இருந்தவரை இருளர் பெண் வைத்திச்சிகள் சில கிழங்கு, மரபட்டை, வேர்களை பொடி செய்து கொடுக்க அவர் மீண்டு நீண்ட காலம் உயிர் வாழ்ந்திருக்கின்றார். அவர் பட்டயம்  செய்து கொடுத்த உரிமையில் இவர்கள் வாழ்ந்து பயன்படுத்தி வருகின்றனர். மூன்று பரம்பரை ஆட்கள் இடங்கள் இங்கு உள்ளது. அவ்வகையில் வள்ளியம்மாள், பொன்னியம்மாள், லட்சுமியம்மாள் என மூவர் உள்ளனர். முக்கியமானவர் வள்ளியம்மாள் ரவீந்திரன் வைத்தியர்.

பெயரை கொடுத்து விட்டு வைத்தியரை பார்க்க காத்திருந்தால் நிறைய பேர் அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் விசாரித்தால் மிகப்பெரிய ஆச்சர்யம்.

கும்பகோணத்தை சேர்ந்த ஒருவர் தஞ்சை மீனாட்சியில் கைவிடப்பட்டவர் மூன்று மாதம்தான் உங்கள் ஆயுள் என்று சொல்லப்பட்டவராம் எட்டு லட்சம் வரை செலவு செய்தவராம். சாகத்தானே போறோம் கடைசி முயற்சியாக இதை பார்ப்போம் என்று வந்தவர் பதினாறு மாதங்களாக வருகின்றேன் என்றார்.

இங்கு பெரும்பாலும் அலோபதி கைவிடப்பட்ட நிலையில் வருகின்றார்கள். பொள்ளாச்சியை சேர்ந்த முரளி என்பவர் சொல்கின்றார். ராமகிருஸ்ணாவுல பதினைந்து லட்சம் செலவு செஞ்சேனுங்க வீட்டை காட்டை வித்து பாத்தணுங்க கடைசில சாவு உனக்கு கன்பார்முடான்டானுக.. தென்னை மரத்து மாத்திரைய வாங்கி வச்சுட்டுத்தானுங்க இங்க வந்தேன்... இதை ஒரு மாசம் பாப்போம். சரியாகுலையா இருக்கற சொத்தை பொண்டாட்டி பேர்ல எழுதி வச்சுட்டு நாம செத்தரலாம்முன்னுதான் வந்தேன். இன்னிக்கு மூணு வருசம் ஆச்சுங்க..என்னோட நோய் குணமாயிருச்சு ஆனாலும் மருந்தை நிறுத்தலை   இன்னும் பத்து வருசம் வாழ்ந்தா போதுங்க எம் பையனை கரையேத்திருவேன் என்று தன் மகனை கட்டியணைத்து கண்ணீர் விடுகின்றார்.

இப்படி பல பேரின் கதை சொல்ல...ஆச்சரியமாக உள்ளது. வைத்தியரிடம் கேட்ட போது இந்த வைத்தியம் முதல் ஸ்டேஜ்ல இருந்தால் 100%குணப் படுத்தி விடலாம். ஆனால் நம்பிக்கையிருப்பதில்லை... சுற்றிவிட்டுதான் இங்கு வருகின்றார்கள். நான்காவது ஸ்டேஜ்ஜில் 80%பேரை பிழைக்க வைத்திருக்கின்றேன்... அதற்கு மேல் இறைவன் கருணை என்றார். 

இது சாத்தியமா? உண்மையா? என்று அவநம்பிக்கையோடுதான் சென்றேன். அங்கு இருந்த மருந்து வாங்க வந்த 100பேர்களின் கதைகளை கேட்ட போது நம்பிக்கையுள்ளது.

யாராவது உங்களுக்கு தெரிந்தவர்கள் கை விடப்பட்ட நிலையில் இருந்தால் இங்கு அனுப்புங்கள் இன்னும் கொஞ்சம் காலம் வாழட்டும்.

083448 88786‬: 
Address 

VALLIYAMMAL GURUKULAM, Tribal Traditional Ottamooli Cancer Treatment Center,Ph: 09946097562, address: CHINDAKKI,MUKKALI,ATTAPADY,PALAKKAD-678581

ஹோரை புதன்கிழமை

ஹோரை புதன்கிழமை 

காலை

6-7.புதன்.                 சுபம்  ✔
 7-8.சந்திரன்.            சுபம்   ✔
 8-9. சனி..                அசுபம்
 9-10.குரு.                சுபம் ✔
 10-11. செவ்வா.      அசுபம்
 11-12. சூரியன்.       அசுபம்

பிற்பகல்

 12-1. சுக்கிரன்.      சுபம் ✔
 1-2. புதன்.             சுபம்  ✔
 2-3. சந்திரன்.        சுபம்  ✔

மாலை
 3-4. சனி..       அசுபம்
 4-5. குரு.        சுபம்   ✔
 5-6. செவ்வா. அசுபம்
 6-7. சூரியன்.  அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

சந்திர கிரகணம்... என்ன செய்யலாம்?

சந்திர கிரகணம் !!

வரும் செவ்வாய்க்கிழமை (16.07.2019) தேதி நள்ளிரவில் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்தச் சந்திர கிரகணம், புதன்கிழமை (17.07.2019) அதிகாலை வரை நீடிக்கிறது.

இந்த கிரகணம் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் :

ஆரம்பம் - 01.32 யுஆ (AM)

மத்யமம் - 3.03 யுஆ (AM)

மோஷம் - 4.32 யுஆ (AM)

சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. இதில் சந்திரன் மறைக்கப்படும் போது சந்திர கிரகணமும், சூரியன் மறைக்கப் படும்போது சூரியகிரகணமும் நிகழ்கிறது.

பௌர்ணமி தினத்தன்று சந்திர கிரகணமும், அமாவாசை தினத்தன்று சூரிய கிரகணமும் நடக்கும்.

சந்திர கிரகணம் என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும்.

சந்திர கிரகணம் முழுமையாக ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும், அரைகுறையாக ஏற்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப் படுகிறது. சூரிய, சந்திரர்கள் கிரகணம் நிகழும் பொழுது ராகுவின் பிடியில் இருந்தால் ராகு கிரகஸ்தம் என்றும், கேதுவின் பிடியில் இருந்தால் கேது கிரகஸ்தம் என்றும் அழைக்கப் படுகிறது.

கிரகணம் எல்லா நாடுகளுக்கும் ஒரே நேரத்தில் தென்படாது. மாறாக வௌ;வேறு நேரங்களிலேயே தென்படும். கிரகணத்தின் போது புவி மேற்பரப்பில் வெளிச்சம் குறைவதை காணலாம்.

கிரகணம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே எந்தவித உணவும் உட்கொள்ளக் கூடாது.

கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது.

ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது.

செய்து வைத்திருக்கும் உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும்.

கிரகணத்தின் போது நவகிரக துதியை பாராயணம் செய்யலாம். அதுபோலவே சந்திர கிரகணத்துக்கான துதியையும் பாராயணம் செய்யலாம்.

கிரகண விமோசன காலத்தில் அதாவது கிரகணம் முழுதும் முடிந்ததும் ஸ்நானம் செய்துவிட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும்.

ஆலய தரிசனம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

கிரகணம் முடிந்ததும், பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே உணவு உட்கொள்ள வேண்டும்.

சந்திர கிரகண காலத்தில் வீட்டில் இருந்தபடியே இறைவனை துதித்து, இறை பாடல்களை பாராயணம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். கிரகணம் முடிந்ததும், ஆலய வழிபாடு செய்வது இன்னும் சிறப்புகளை கொடுக்கும்...!!!

சந்திர கிரகணத்தால் ஏற்படும் பலன்கள்

இன்று நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தால் 
12 ராசியினருக்கும் ஏற்படும் பலன்கள்

பௌர்ணமி இரவில் வானில் தோன்றும் சந்திரன், ஜோதிட சாஸ்திரத்தில் மனோகாரகன் என அழைக்கப்படுகிறார். சூரிய கிரகணம் போலவே சந்திர கிரகணமும் அடிக்கடி ஏற்படும் ஒரு இயற்கை நிகழ்வாக இருக்கிறது. இன்றிரவு நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தால் 12 ராசியினருக்கும் ஏற்படவிருக்கும் பலன்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 


மேஷம்: 

மேஷ ராசியினருக்கு இந்த வருடம் ஏற்படவிருக்கும் சந்திர கிரகணம் இந்த ராசியினரை மிகவும் உணர்ச்சிவசப்படும் நிலையை அடிக்கடி உண்டாக்கக்கூடும். இதை தடுக்க உங்களின் உடல் மற்றும் மனம் அமைதியாக செய்யும் காரியங்களில் ஈடுபட வேண்டும். மனதில் இருக்கும் தேவையற்ற எண்ணங்கள், நினைவுகள் போன்றவற்றை மறந்து விட வேண்டும். 


ரிஷபம்: 

ரிஷப ராசியினருக்கு இந்த வருடம் ஏற்படவிருக்கும் சந்திர கிரகணம் உங்களின் மன நிலையில் சிறந்த மாறுதல்களை உண்டாக்கும். உங்கள் குடும்பத்தை சார்ந்த பெண்களுக்கு பக்க பலமாக இருப்பீர்கள். இந்த ஆண்டு உங்கள் குடும்பத்தினருடனான உறவுகளை மேம்படுத்தி கொள்வதில் உங்களின் கவனத்தை செலுத்துவது மிகவும் நல்லது. 


மிதுனம்: 

மிதுன ராசியினருக்கு இந்த வருடம் ஏற்படவிருக்கும் சந்திர கிரகணம் உங்களுக்கு ஆண்டு முழுவதும் மிகுந்த மன ரீதியான அழுத்தங்களை தரலாம். மேலும் உங்களின் சொந்த வாழ்வில் சிலவற்றில் சரியான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். உங்களின் மன அழுத்தங்கள் நீங்க யோகா, தியானம் மற்றும் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடுவது நல்லது. 


கடகம்: 

கடக ராசியினருக்கு இந்த வருடம் ஏற்படவிருக்கும் சந்திர கிரகணம் உங்களின் நெருக்கமான உறவுகளுக்குள் பிணக்குகள் ஏற்படும் சூழல் ஏற்படும். ஆண்டு இறுதியில் பொருளாதார ரீதியில் சில சிக்கல்களை உருவாக்கும். பணம் சேமிப்பு, முதலீடு போன்றவற்றில் எச்சரிக்கையுடன் செயல்படுவதும், உங்கள் நெருக்கமான உறவுகளுக்கான நேரத்தை செலவிடுவதும் அவசியம். 


சிம்மம்: 

சிம்ம ராசியினருக்கு இந்த வருடம் ஏற்படவிருக்கும் சந்திர கிரகணம் இவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தும். பொருளாதார ரீதியிலான விடயங்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது மிகவும் அவசியம். உங்கள் மனதிற்கு பிடித்த புதிய ஒரு விடயத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடலாம். இந்த ஆண்டு வாழ்க்கையை மாற்றத்தக்க தீர்மானங்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.


 கன்னி: 

கன்னி ராசியினருக்கு இந்த வருடம் ஏற்படவிருக்கும் சந்திர கிரகணம் உங்களின் மறைமுக எதிரிகளை உங்களுக்கு காட்டி கொடுக்கும். ஆண்டின் பின்பகுதி உங்களுக்கு நன்மையான பலன்களை தரும். எப்போதும் நேர்மறையான எண்ணங்கள் மற்றும் அணுகுமுறைகளை வளர்த்து கொள்வதாலும் இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பான ஆண்டாக அமைய வாய்ப்புகளை அதிகமாக்குகிறது. 


துலாம்: 

துலாம் ராசியினருக்கு இந்த வருடம் ஏற்படவிருக்கும் சந்திர கிரகணம் உங்களுக்கு மன ரீதியாக பல நெருக்கடிகளை கொடுக்கும். பெற்றோர் ஸ்தானத்தில் இருப்பவர்களுடனான உறவுகளில் சிக்கல்கள் உருவாகும். எப்போதும் திறந்த மனநிலை கொண்டிருப்பதால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சுலபமாக தீர்வுகள் உங்களுக்கு கிடைக்கும். ஆண்டின் பிற்பகுதி உங்களுக்கு நன்மை தருவதாக அமையும். 


விருச்சகம்: 

விருச்சிக ராசியினருக்கு இந்த வருடம் ஏற்படவிருக்கும் சந்திர கிரகணம் உங்களை சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் திறனை பாதிக்கும். உணர்ச்சிவசப்படக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும். எந்த ஒரு விடயத்தையும் சற்று நிதானமாக கையாள்வதாலும், பிறரிடம் கனிவாக நடந்து கொள்வதாலும் உங்களுக்கு மிகுந்த நன்மைகள் ஏற்படும்.


 தனுசு: 

தனுசு ராசியினருக்கு இந்த வருடம் ஏற்படவிருக்கும் சந்திர கிரகணம் மிக சிறப்பான பலன்களை தரும். உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கான முயற்சிகளில் வெற்றிகளையும், காதல் விடயங்களில் மன ஒற்றுமையையும் உருவாக்கும். உங்களுக்கு ஏற்படவிருக்கும் பலன்களை திறந்த மனதோடு ஏற்று கொள்வது சால சிறந்தது.


 மகரம்: 

மகரம் ராசியினருக்கு இந்த வருடம் ஏற்படவிருக்கும் சந்திர கிரகணம் உங்களை பாதுகாப்பற்றவராக உணர செய்யும். நெருக்கமானவர்களை கட்டுப்படுத்தும் ஆதிக்க மனோநிலை அதிகரிக்க கூடும். தேவையற்ற பயங்களை நீங்கள் களைய வேண்டும். உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதால் அனைத்து பிரச்சனைகளும் தீருவதற்கான வழி உண்டாகும். 


கும்பம்: 

கும்பம் ராசியினருக்கு இந்த வருடம் ஏற்படவிருக்கும் சந்திர கிரகணம் உங்களுக்கு நேரடி மற்றும் மறைமுக எதிரிகளை உருவாக்கும். இருந்த போதிலும் அவர்களை வெற்றி கொள்ளத்தக்க மனோபலமும், சிந்தனை ஆற்றலும் உங்களுக்கு உருவாகும். உங்களை முழுமையாக நம்பி எத்தகைய காரியங்களிலும் ஈடுபடுவதால் உங்களுக்கு அனைத்திலும் வெற்றி உண்டாகும். 


மீனம்: 

மீனம் ராசியினருக்கு இந்த வருடம் ஏற்படவிருக்கும் சந்திர கிரகணம் உங்களுக்கு தனிப்பட்ட ரீதியாகவும், தொழில்,வியாபார ரீதியாகவும் வெற்றிகரமான ஆண்டாக இருக்கும். நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடிக்க தொடங்குவதாலும், உங்களின் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்வதாலும் அனைத்திலும் வெற்றிகளை சுவைக்க முடியும்.

பட்சி சில குறிப்புகள் - பஞ்ச பட்சி - 6

கவனத்தில் கொள்ள வேண்டிய சில குறிப்புகள்:-

பட்சி குறிப்பு - 1
ஒருபட்சி எந்த நிலையில் இருந்தாலும் ஒவ்வொரு நாளும்
ஒரு ஜாமத்தில் இயல்பாக வலு அடையும்

பட்சி குறிப்பு - 2
வாரம் ஏழு நாள்களிலும் என்ன தொழில் செய்தாலும்
வல்லூறு முதல் ஜாமத்தில் வலுவடையும்

பட்சி குறிப்பு திதியில்
ஆந்தை வலு

பட்சி குறிப்பு -
திசையில் கோழி வலு

பட்சி குறிப்பு - 4
நிறத்தில் மயில் வலு

பட்சி குறிப்பு - 5
வயல் வெளி வம் காடு மலைபகுதி  இவைகளில் மயில் வலுவடையும்
பட்சி குறிப்பு - 6
கோயில் தியான மண்டபம் வழிபாட்டு தலங்களில் காகம் வலு வடையும்

பட்சி குறிப்பு - 7
ஊர் நகரம் ஊரின் மைய பகுதி மக்கள் கூடும் இடம் இவைகளில்
கோழி வலுவடையும்.

பட்சி குறிப்பு - 8
இடுகாடு போதை பொருள் உபோகிக்கும் இடம் வைகளில் ஆந்தை வலுவடையும்

பட்சி குறிப்பு - 9
உடலில் ஆந்தை வலு
யிரில் காகம் வலு
ன்மாவில் மயில் வலு,

சமீபத்திய பதிவுகள்

கும்பகோணம் டிகிரி காபி

கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா? பித்தளை அல்லது தாமிரத்தாலான சற்றே மெகா சைஸ் ஃபில்டர்கள், ‘டம்ளர் - டவரா செட்’கள் இவைதான் கும்பகோணம்...