பரமாச்சார்யாரின் அருள்

" ‘திருமுருகாற்றுப்படை‘ படிக்கச் சொல்லு.  எல்லாம் சரியாகி விடும் "

(  உடல் நலம் — மன நலம் இரண்டுமே குன்றியிருந்த  ஒரு பெண்ணுக்கு)

( வானதி திருநாவுக்கரசின் தங்கை மீனாளுக்கு  அருள்) ;(தெய்வத்தின் குரல் 7 பாகமும் தன் வானதி பதிப்பகம் மூலம் வெளியிட்டவர்)

:சென்னை எண்ணூருக்கு சற்றுத் தொலைவில் உள்ளது காட்டுப்பள்ளி என்னும் சிறு கிராமம்.  கடலின் கழிமுகப் பகுதியில் உள்ளது அது.  அந்தக் கிராமத்தை அடைய வேண்டும் என்றால் தரை மார்க்கமாக வழியில்லை.   படகு வழியாக கடலில் ஒரு கிலோ மீட்டர் தூரம் போய்த்தான்,  அந்தத் தீவான கிராமத்தை அடைய வேண்டும். காஞ்சி மகான் இந்த இடம் தான் என்று இல்லை,  எங்கும் போகக் கூடியவராயிற்றே…

ஒரு சமயம் அங்குதான் பரமாச்சார்யார் தனது பரிவாரத்தோடு முகாமிட்டிருந்தார்.  படகில் போய் அவரைப் பார்த்துவிட்டு வர பக்தர்கள் தவறவே இல்லை.  தெய்வத்தின் தரிசனத்திற்கு எங்கு வேண்டுமானாலும் போகலாமே — மனதில் மட்டும் பக்தி என்று ஒன்று இருந்தால்.

அந்த சமயம் வானதி திருநாவுக்கரசின் தங்கை மீனாளுக்கு உடல் நலம் — மன நலம் இரண்டுமே குன்றியிருந்தன.  எதையும் சாப்பிடாமல் பிரமை பிடித்தவர் போல் எப்போதும் காட்சியளிப்பாள்.  எதற்கும் காஞ்சி மகானைப் பரிபூர்ணமாக நம்பும் திருநாவுக்கரசு,  தன் தங்கையை அழைத்துக் கொண்டு தாயார் மற்றும் குடும்பத்தாருடன் படகின் மூலமாக காட்டுப்பள்ளி கிராமத்துக்குச் சென்றார்.

சென்றவுடன் மகானின் தரிசனம் கிடைக்க, தனது தங்கையின் உடல் நிலையைப் பற்றி அவரிடம் மெதுவாகச் சொன்னார் திருநாவுக்கரசு.  எல்லாவற்றையும் கேட்ட பின், மகான், தங்கை மீனாளைப் பார்த்தார்.  பிறகு அவரது பார்வை அவரது குடும்பத்தார் பக்கமும் திரும்பியது .  மகானின்  கண்களின் ஒளி விசேஷமே எல்லா நோய்களையும் போக்க வல்லது அல்லவா ?

மகான் சிறிது நேரம் மெளனமாக இருந்து விட்டு பிறகு பேசினார் –

“அவளைத் தினமும் ‘திருமுருகாற்றுப்படை‘ படிக்கச் சொல்லு.  எல்லாம் சரியாகி விடும். ”  என்றார்.

“அவளுக்கு அதிகம் படிக்கத் தெரியாதே”  என்று மெதுவாக  மகானிடம் திருநாவுக்கரசு சொன்னார்.  அதனாலென்ன ?  தெரிஞ்சவரை படிக்கச் சொல்லு… இல்லன்னா யாராவது தெரிஞ்சவா படிச்சுக் காட்டட்டுமே !   திருமுருகாற்றுப்படை பாடல்கள் அவள் காதில் விழுந்தால் போதும்”  என்று சொல்லி தன் கையை உயர்த்தி மீனாளுக்கு அருளாசி வழங்கினார்.

அவர்கள் எல்லாரும் வணங்கி, மகானிடம் விடை பெற்றுக் கொண்டு, திரும்ப முயன்றார்கள்.  சற்று தூரம் வந்தவுடன்,  மடத்தின் ஆட்கள் அவர்களை அழைத்தார்கள்.

“உங்கள் அத்தனை பேருக்கும் சாப்பாடு போட்டு உபசரித்து அனுப்பணும்னு பெரியவா உத்தரவு’  என்று சொன்னபோது திருநாவுக்கரசு வியந்துதான் போனார்.

அந்த மாதிரி ஒரு தீவில் எதுவுமே சாப்பிடக் கிடைக்காது.  இவர்களும் ஊருக்குத் திரும்பி தான் சாப்பிட வேண்டும்.  இது அந்த மனித தெய்வத்துக்குத் தெரியாதா ?  தன் பக்தர்களை எப்போது அவர் பட்டினியோடு அனுப்பியிருக்கிறார்?  மகானின் கருணையை வியந்து வியந்து போற்றி விட்டு,  திருநாவுக்கரசு தன் குடும்பத்துடன், வடை பாயசத்துடன் விருந்து சாப்பிட்டு விட்டு ஊர் திரும்பினார்.

மகான் சொன்னவாறே மீனாளிடம், ‘திருமுருகாற்றுப்படை‘ புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார்கள்.  ஒரே மாதம்தான்…  மீனாள் பூரண குணமடைந்தாள்.  மனக் கோளாறு முழுமையாக விலகி,  இயல்பு நிலைக்கு அவள் வந்தது காஞ்சி மகானின் பேரருள்தான் என்கிறார்,  பதிப்பக ஜாம்பவான் திருநாவுக்கரசு. மகானிடம் பரிபூரண சரணாகதி அடைந்தவர்களை அவர் என்றுமே மறந்ததுமில்லை,  கைவிட்டதுமில்லை.

கருணைக்கிழங்கு

வாரம் ஒரு முறை கருணை கிழகை சாப்பிட்டால் போதும்... உடலில் உள்ள பாதி நோயை சரி செய்யுமாம்!

கருணைக்கிழங்கு நிலத்தினுள் விளையும் ஒரு வகைக்கிழங்குப்பயிர் ஆகும். இதனை காரும் கருணை என்றும் அழைப்பர்.

இதில் விட்டமின் சி, விட்டமின் பி, மாங்கனீஸ், மினரல்ஸ், ரிபோபிளேவின், பொட்டாசியம், இரும்பு, போன்ற சத்துக்கள் உள்ளன.

இது குடலை சுத்தப்படுத்துவதற்கும், உடல் எடையை குறைக்கவும் குறிப்பாக மூலநோயை குணப்படுவதில் சிறந்தது.

மேலும் இது உடலில் உள்ள பாதி நோய்களை அடியோடு அழிக்க உதவி புரிகின்றது. தற்போது அவற்றை பார்ப்போம்.

கருணைக்கிழங்கு ஜீரண மண்டலத்தை சிறப்பாக செயல்பட வைக்க உதவுகிறது.

அதுமட்டுமல்லாமல் உடல் சக்தியை அதிகரித்து, உடல் உறுப்புகளுக்கு பலம் தருவதாகவும் இருக்கிறது.
உடல் உஷ்ணத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மை காக்க கருணைக்கிழங்கு உதவுகிறது. இதனால் மூலச்சூடு, எரிச்சல் ஆகியவை நீங்கும். நாட்பட்ட காய்ச்சல் ஆகியவை குணமாகும்.

வெள்ளைப்படுதலை தடுக்க கருணைக்கிழங்கு உதவுகிறது. கருணைக்கிழங்கை சாப்பிட்டால் உடல் வலி காணாமல் போய்விடும்.
மூல நோய் உள்ளவர்கள் ஒரு மாதம் வரை வேறு உணவு எதையும் எடுத்துக்கொள்ளாமல், கருணைக்கிழங்கு ஒன்றை மட்டுமே சாப்பிட்டு, தாகம் அடங்க மோரை அருந்தி வந்தால் ஆசன வாயில் உள்ள பிரச்சனைகள் சரியாகிவிடும்.

கருணைக்கிழங்கு ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. கல்லீரல் சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது. உடலில் கொழுப்புகள் அதிகம் சேர்வதை தடுத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

பித்தம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டவர்கள் கருணை கிழங்கை அடிக்கடி சாப்பிட பித்தம் கட்டுப்படும். பித்த கற்கள் உருவாவதை தடுக்கும்.

வாரமொருமுறை கருணைக்கிழங்கை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் அமில சுரப்பை சீராக்குவதோடு, பசியின்மை பிரச்சனையை தீர்க்கிறது.

கருணை கிழங்கை வாரம் மூன்று அல்லது நான்கு முறை சமைத்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, மாரடைப்பு, இதய ரத்த குழாய்களில் அடைப்பு போன்றவை ஏற்படுவது தடுக்கப்பட்டு நீண்ட ஆயுட்காலம் உண்டாகிறது.
வயிறு, இரைப்பை புற்று ஏற்படாமல் தடுக்க உணவில் கருணைக்கிழங்கு அதிகம் சேர்த்து சாப்பிட வேண்டும்.

ஸ்ரீ குரு அஷ்டகம்

ஸ்ரீ குரு அஷ்டகம் 

1)
ச'ரீரம் ஸுரூபம் ததா வா களத்ரம் 
  யச' : சாரு சித்ரம் தனம் மேருதுல்யம் /
மன : சேந்ந லக்னம் குரோரங்க்ரிபத்மே 
  தத : கிம் தத : கிம் தத : கிம் தத : கிம் //

அழகான சரீரம் பெற்றிருப்பினும், அழகான மனைவியைப் பெற்றிருப்பினும், மிகச் சிறந்த, பல விஷயங்களில் புகழ் பெற்றிருப்பினும், மேருமலையின் அளவு செல்வம் பெற்றிருப்பினும் ஒருவன் மனம் குருவின் தாமரைப் பாதங்களை நாடாதாயின் அவற்றால் என்ன பயன்? 

2)
களத்ரம் தனம் புத்ரபௌத்ராதி ஸர்வம் 
  க்ருஹம் பாந்தவா : ஸர்வமேதத்தி ஜாதம் /
மன :சேந்ந லக்னம் குரோரங்க்ரிபத்மே 
  தத : கிம் தத :கிம் தத :கிம் தத: கிம் //

மனைவியும், செல்வமும், மக்களும் பேரப்பிள்ளைகளும், வீடும் உறவினர்களும் இவையெல்லாம் இருப்பினும் ஒருவன் மனம் குருவின் தாமரைப் பாதங்களை நாடாதாயின் பயன் என்ன? 

3)
ஷடங்காதி வேதோ முகே சா'ஸ்த்ரவித்யா 
  கவித்வாதி கத்யம் ஸுபத்யம் கரோதி /
மன : சேந்ந லக்னம் குரோரங்க்ரிபத்மே 
  தத : கிம் தத :கிம் தத : கிம் தத : கிம் //

வேதங்களும், அவை சார்ந்த ஆறு அங்கங்களும், அறிவியல் அறிவும், எதையும் தெளிவாக விளக்கிச் சொல்லக்கூடிய அறிவும், கவிபாடும் திறமையும், 
உரைநடையிலும் மற்றும் செய்யுள் இயற்றும் ஞானமும் இருப்பினும் ஒருவன் மனம் குருவின் தாமரைப் பாதங்களை நாடாதாயின் பயன் என்ன? 

4)
விதேசே'ஷு மான்ய : ஸ்வதேசே'ஷு தன்ய :
  ஸதாசார வ்ருத்தேஷு மத்தோந சான்ய : /
மன : சேந்ந லக்னம் குரோரங்க்ரிபத்மே 
  தத : கிம் தத : கிம் தத : கிம் தத : கிம் //

அயல்தேசத்தில் பெருமையுடனும், சொந்த நாட்டில் அதிர்ஷ்டத்துடனும், நல்லொழுக்கத்தில் தன்னைவிட சிறந்தவன் இல்லை என்று இறுமாந்திருப்பினும் ஒருவன் மனம் குருவின் தாமரைப் பாதங்களை நாடாதாயின் பயன் என்ன? 

5)
க்ஷமாமண்டலே பூப பூபாலவ்ருந்தை :
  ஸதா ஸேவிதம் யஸ்ய பாதாரவிந்தம் /
மன : சேந்ந லக்னம் குரோரங்க்ரிபத்மே 
  தத : கிம் தத : கிம் தத : கிம் தத : கிம் //

பாதங்களை ஆராதிக்க ஸாம்ராஜ்யத்தை ஆளும் பேரரசர்களும், மற்ற அரசர்களும் 
சூழ்ந்திருப்பினும், ஒருவன் மனம் குருவின் தாமரைப் பாதங்களை நாடாதாயின் பயன் என்ன? 

6)
யசோ' மே கதம் திக்ஷு தானப்ரதாபாஜ்
  ஜகத் வஸ்து ஸர்வம் கரே யத்ப்ரஸாதாத் /
மன : சேந்ந லக்னம் குரோரங்க்ரிபத்மே 
  தத : கிம் தத : கிம் தத : கிம் தத : கிம் //

தன் வீரத்தாலும், ஈகையாலும் நாற்றிசையிலும் புகழ் பெற்று, இவைகளால், இவ்வுலகமே தன் கையில் உள்ளது என்று இறுமாந்திருப்பினும் ஒருவன் மனம் குருவின் தாமரைப் பாதங்களை நாடாதாயின் பயன் என்ன? 

7)
நபோகே ந யோகே ந வா வாஜிராஜௌ
  ந காந்தா முகே நைவ வித்தேஷு சித்தம் /
மன : சேந்ந லக்னம் குரோரங்க்ரிபத்மே 
  தத : கிம் தத : கிம் தத : கிம் தத : கிம் //

சுகத்திலோ, விஷயங்களின் மீதுள்ள சிரத்தையையோ, பல குதிரைகளுக்கு அதிபதியாக இருப்பதிலோ, அன்புக்குரியவர்களைப் பார்ப்பதிலோ, செல்வத்தையோ மனம் உறைவிடமாகக் கொள்ள இயலாது. இவையெல்லாம் பெற்றும் ஒருவன் மனம் குருவின் தாமரைப் பாதங்களை நாடாதாயின் பயன் என்ன? 
(குருவின் பாதமே தக்க உறைவிடமாகும்) 

8 ) 
அரண்யே ந வா ஸ்வஸ்ய கேஹே ந கார்யே 
  ந தேஹே மனோ வர்ததே மே த்வநர்க்யே /
மன : சேந்ந லக்னம் குரோரங்க்ரிபத்மே 
  தத  : கிம் தத : கிம் தத : கிம் தத : கிம் //

கானகத்தில் இருக்கும் பொழுதும், சொந்த வீட்டில் இருக்கும் பொழுதும், கடமைகளை நிறைவேற்ற முயற்சிக்கும் விஷயங்களிலும், உடலினைப் பேணுவதிலும், விலைமதிப்பற்ற விஷயங்களிலும் மனம் ஒன்றுவதில்லை. ஒருவன் மனம் குருவின் தாமரைப் பாதங்களை நாடாதாயின் பயன் என்ன? ஆகையால் குருவின் பாதமே கதியாகக் கொள்ள வேண்டும். 

9)
அனர்த்யாணி ரத்நாநி முக்தானி ஸம்யக் 
  ஸமாலிங்கிதா காமிநீ யாமிநீஷு /
மன : சேந்ந லக்னம் குரோரங்க்ரிபத்மே 
  தத : கிம் தத : கிம் தத: கிம் தத : கிம் //

விலையுயர்ந்த ரத்தினங்களும் முத்துக்களும், நன்கு அலங்கரிக்கப்பட்ட அழகான அன்பான மணப்பெண்ணும் ஆளுமைக்குள் வரினும், ஒருவன் மனம் குருவின் தாமரைப் பாதங்களை நாடாதாயின் பயன் என்ன?  (பயனில்லை) 

10)
குரோரஷ்டகம் ய : படேத்புண்யதேஹீ 
  யதிர் பூபதிர் ப்ரஹமசாரீ ச கேஹீ /
லபேத்வாஞ்சிதார்யம் பதம் ப்ரஹ்ம ஸஞ்ஜம் 
  குரோருக்த வாக்யே மனோ யஸ்ய 
                                                     லக்னம் //

எவரொருவர் குருவின் மீதுள்ள துதியான இந்த அஷ்டகத்தை குருவின் வார்த்தைகளின் மீது சிரத்தை கொண்டு மனமொன்றிச் சொல்கிறாரோ, அவர் சந்யாஸியோ, கல்வி கற்கும் மாணவனோ,அரசன் அல்லது இல்லற தர்மத்தில் இருப்பவனோ, யாராயிருப்பினும் அவர் விரும்பும் பிரம்மஞானத்தை அடைவார்.

குரு பூர்ணிமா வில் - உங்கள் அனைத்து கர்மங்களையும் தங்கள் குரு பாத கமலங்களில் சேர்த்து விடுங்கள்

குலதெய்வம்

ஆண்டியை அரசனாக்குவதும், அரசனை ஆண்டி ஆக்குவதும் நம் குல தெய்வமே!"

குலதெய்வங்கள் என்றால் என்ன ..?
அவர்களின் பெருமை என்ன...? 
குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...?
- சற்று ஒரு பார்வை...

குலதெய்வம்... 
குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.

தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குல தெய்வம் ஆகும். 

குல தெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். 

மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.

குல தெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது.

அதன் சக்தியை அளவிடமுடியாது...

எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.

அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.

எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன்
அழைக்கப்படுகின்றன.

குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.ஒரு ஊரில் நடக்கும் தொடர் சம்பவங்களே நம் குல தெய்வம் மகிழ்வோடு இருக்கிறாளா?இல்லையா? என்பதைக் காண்பித்து விடும்.

இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது?

நம் முன்னோர்கள்... 
அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும். 

இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப் பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். 
அது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை...

இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

இதன்படி பார்த்தால், குல தெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.

இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம்...
இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே!

நாம் அங்கே போய் நின்று... 
அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.

இது எத்தனை தூரப்பார்வையோடு,
வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்!...

விஞ்ஞான முறையில் யோசித்தால்... 

ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே!...

ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 குரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். 

இது தாய் மூலம் 23, மற்றும் தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம்.

இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் குரோமசோமே முடிவு செய்கிறது. 

தாயிடம் xx குரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன.

தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட குரோமோசோம்கள் உள்ளன.

ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும்...

இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும்... பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறி உள்ளது.

ஆண் குழந்தையை உருவாக்கும் y குரோமோசோம் ஆணிடம் மட்டும் தான் உள்ளது. பெண்ணிற்கு, y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை.

ஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து y குரோமோசோம்கள் வருகின்றன. அதனால் அவன் மூலம் வம்சம் மீண்டும் வழி வழியாக வளர்கிறது...

வழி வழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும், முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத்தொடர்ந்து... 
இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு... 
தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது.

இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண்
குழந்தைகளை வாரிசுகளாக்கினார்கள்...

பெண் குழந்தைகளை குல விளக்காக காத்தனர்...

பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை...

ஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று.

மேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்கு சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம்.

எனவே, 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும்...

அதனால் ஏற்கெனவே பலவீனமான y குரோமோசோம்கள் மேலும்
பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது...

பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான்.

பிறந்த வீட்டில் ஒரு தெய்வம்...
புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்...

திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.

பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின் குல தெய்வத்தை வணங்குவது கிடையாது...
அப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குல தெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழி வகுக்கும்.

இது வரை யாரும் பிறந்த வீட்டின் குல தெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழா காலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

ஒருவரது குலம் ஆல் போல் தழைத்து, அருகு போல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்...

குல தெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.

குல தெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும்,
ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.

எனவே உங்கள் குல தெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி அல்லது குறைந்தது வருடம் ஒரு முறையாவது செல்லுங்கள். 

அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள்.

அக்கோவிலுக்கு மனதார உதவுங்கள்.

குல தெய்வத்திற்கு 
சரியான உணவு படைக்கப் படுகிறதா?
மகிழ்வூட்டும் மலர்கள் படைக்கப் படுகிறதா?
அபிஷேக பொருட்கள் தூய்மையாக உள்ளதா?
எத்தனை வகை அபிஷேகம் அளிக்கப் படுகிறது?
குல தெய்வத்தின் திருமேனி பழுதடையாமல் போற்றப் படுகிறதா?
தெய்வத்தை வழிபாடு செய்யும் மனமார்ந்த அர்ச்சகர் உள்ளாரா?
என்பதை கண்காணிப்பது ஒவ்வொரு பக்தனின் கடமை என்பது நினைவிருக்கட்டும்.
"நமக்கென்ன" என்று இருந்தீர்கள் என்றால் அதுவும் உங்களுக்கு தெய்வ குற்றமே!

நான் வெளியூரில் இருக்கிறேன் என்று தப்பவும் இயலாது.எங்க அம்மாவை பட்டினி போட்டு விட்டு நான் வெளி ஊரில் இருப்பதால் எனக்கு ஒன்றும் தெரியாது என்று சொன்னால் நீங்களும் தப்ப இயலாது.

பெற்றவளுக்கு நேரம் தந்து காப்பதும் உங்கள் கடமை.

ஒவ்வொருவரின் கண் கண்ட முதல் குலதெய்வம் பெற்ற தாயும், தந்தையும் தான்...

"தாயிற் சிறந்த கோவிலுமில்லை... 
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை..."

எனவே, நம் முதல் குல தெய்வமான பெற்றோர்களை முதலில் போற்றி நம்குல தெய்வத்தை காத்து போற்றுங்கள்....

யோகதண்டம்

ஆச்சாரியார்கள் நுனியில் ஒரு முடிச்சுடன் கூடிய மூங்கில் கம்பு வைத்திருப்பதன் நோக்கம் என்ன?

இதற்கு யோகதண்டம் என்று பெயர். 

நுனியில் உள்ள முடிச்சை "ஞானக்ரந்தி' என்பர். 

அதாவது எது உண்மையான இன்பம் என்று தெரியாமல், அறியாமையினால் மனித வாழ்க்கை போராட்டமாகவே உள்ளது. 

இக்கஷ்டத்திலிருந்து விடுபட வேண்டுமானால் நமக்கு நல்லறிவு வேண்டும். 

ஒரு மரத்திலிருந்து நேரடியாக பழம் கிடைப்பதில்லை. முதலில் மொட்டு, இரண்டாவது மலர், மூன்றாவது காய், நான்காவது பழம் கிடைக்கிறது. 
நல்லறிவு  என்பது  பழம் போன்றது. அது உடனே கிடைத்து விடாது.

முதலில் நல்லோர் சேர்க்கை. 
இரண்டாவது அவர்கள் காட்டிய வழியில் திருக்கோயில் வழிபாடு. 
மூன்றாவது நல்லறிவு புகட்டும் நூல்களைப் படித்தும், நல்லோர்களின் உபதேசங்களைப் பெற்றும் குறுகிய மனப்பான்மையிலிருந்து விடுபட்டு பரந்த மனப்பான்மையும், 
தர்ம சிந்தனையையும் அடைதலாகிய யோக நிலை. 

யோகம் என்றால் கண்மூடி தியானத்திலிருப்பது மட்டுமல்ல. 

தாழ்ந்த நிலையிலிருக்கும் நம்மை மகான்களுக்கு இணையாக உயர்த்திக் கொள்வதும் யோக நிலை தான். 

இம் மூன்றும் ஒழுங்காக  அமைந்தால் அதாவது மொட்டு, மலர், காய் மூன்றும் சரியாக இருந்தால்  பழமாகி விடுவது போல், 

நாமும் உண்மையான ஞான முதிர்ச்சி ஏற்பட்டு உண்மையான மகிழ்ச்சியுடன் வாழலாம்.

 ஆசார்யர்களை தரிசித்தால் நம் நிலையும் உயர்ந்து, நல்லறிவு பெற்று இன்பமாய் வாழலாம் என்பதை உணர்த்துவது தான், யோக தண்டமும், ஞானமுடிச்சுமாகும்.

சந்திர கிரஹணம்

சந்திர_கிரஹணம்  (16.07.2019)-

செவ்வாய்க்கிழமை  (இரவு 1.32 முதல் 4.32 வரை)

#  சந்திர  கிரஹணம் என்றால் என்ன ?*
பூமியின் நிழல் சந்திரனில் விழும்போது, சந்திரன் மறைக்கப்படுகிறான். அதுவே சந்திர கிரஹணம்.

கிரஹணம் காரணமாக... சந்திர ஒளிக்கதிரின் பரவல் தடைபடும்போது, ஜீவ ராசிகளுக்கு மன மாறுதல் ஏற்படுவது இயல்பு.

இது, நம் சிந்தனையையும் செயல்பாட்டையும் மாற்றும். சுகாதாரத்தையும் பாதிக்கும்.

எனவே சந்திர கிரஹணத்தின்போது, நம் உடல்- உள்ளம் ஆகியவற்றின் செயல்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும்.

கிரஹண காலத்தை புண்ணிய காலம் என்கிறது தர்ம சாஸ்திரம்.

#  ஜபம் - மனத் தூய்மையை ஏற்படுத்தும்;
#  தானம் - மனதைப் பக்குவப்படுத்தும்;
#  முன்னோர்வழிபாடு* - நமது சிந்தனையை சரியான வழியில் திருப்பிவிடும்.

ஆகவே, கிரஹண வேளையில் இந்த மூன்றுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதனால், பன்மடங்கு பலன் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம்.

#  சந்திர கிரகணம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?*

#  கிரகணம் நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது. எனவேதான் ஆலயங்கள் அனைத்தும் மூடப்பட்டு விடுகின்றன. ஆலயங்களில் எந்த வழிபாடும் நடக்காது. கிரகணம் முடிந்து சூரியன் உதயம் ஆன பிறகு, புண்ணியாகவாசனம் செய்து, வருணனைக் கலசத்தில் ஆவாஹனம் செய்து கோயிலில் தெளித்த பிறகே, கோவில்களில் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்படும்.

#  கிரகணம் தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னரே கிரிவலம் செல்பவர்கள் வழிபாட்டைமுடித்துவிட வேண்டும்.

#  கிரஹணம் துவங்கும்போது நீராட வேண்டும். கிரஹணம் முடிந்ததும், மீண்டும் நீராட வேண்டும்.

#  கிரஹண வேளையில், மறை ஓதுபவர்கள் வேதத்தைச் சொல்லலாம்.

மற்றவர்கள் நமசிவாய, நமோ நாராயணாய என்றோ அல்லது தெரிந்த அம்பாள் துதி, நவக்ரஹ துதிகளை சொல்லலாம்.

கிரகண காலங்களில் சொல்ல வேண்டிய மந்திரம் "ஓம் கிலி அங் உங் சிவ சிவ"

#  கிரஹண வேளையில், சாப்பிடக்கூடாது, தண்ணீர் குடிக்கக்கூடாது, வீட்டில் சமையல் செய்யக்கூடாது, நகம் வெட்டக்கூடாது என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

#  கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே சாப்பிட்டுவிட வேண்டும்.

சமைத்து வைத்த உணவுகளில்தர்ப்பை புல்லினைபோட்டு வைக்கவேண்டும்.

#  கிரகண_சமயத்தில் தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டும்

 ஒரு பெண் இந்தச் சமயத்தில் கர்ப்பம் தரித்தால் குறைபாடுள்ள குழந்தைபிறக்கநேரிடும்.

#  கிரகண காலத்தில் உடலில் எண்ணெய் தேய்ப்பது போன்ற செயல்களைச் செய்யக்கூடாது.

#  கிரகணம் முடிந்ததும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது.

#  கிரகணம் முழுவதும் முடிந்த பிறகு குளித்து விட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும்.

#  ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே சாப்பிடவேண்டும்.

#  சந்திரகிரகண காலத்தில் வீட்டில்இருந்தபடியே இறைவனை துதித்து, இறை பாடல்களை பாராயணம் செய்வது நல்லபலன்களை கொடுக்கும்.

சந்திர கிரகணத்தன்று உயர்வுக்காகவும் நன்மைக்காகவும், தர்ம சாஸ்திரத்தின் பரிந்துரையைப் பின்பற்றுவோம்


தச வாயுக்கள்

மனித உடலில் பத்துவித வாயுக்கள் உண்டு . இவை தச வாயுக்கள் எனப்படும்.

1. உயிர் காற்று. (பிராணன்)
2. மலக்காற்று. (அபானன்)
3. தொழில் காற்று. (வியானன்)
4. ஒலிக்காற்று. (உதானன்)
5. நிரவுக்காற்று.( சமானன்)
6. தும்மல் காற்று. (நாகன்)
7. விழிக்காற்று. (கூர்மன்)
8. கொட்டாவிக் காற்று. (கிருகரன்)
9. இமைக் காற்று. (தேவதத்தன்)
10. வீங்கற் காற்று. (தனஞ்சயன்)

உயிர் வெளியே புறப்படும் நாள் , நேரம் நெருங்கியுடன் உடலின் அனைத்து செல்களும் முடக்கப்பட்டு, எல்லாவித வாயுக்களின் வழிகளும் ஒவ்வொன்றாக அடைக்கப்பட்டுக் கொண்டே வரும்.

உதாரணமாக . . . .
ஒரு வீட்டை நாம் காலி செய்யும்போது எப்படி எல்லா பொருள்களையும் ஒழுங்காக அடுக்கி கட்டி கொண்டுவந்து நடு வீட்டில் வைத்து பின் அங்கிருந்து சரியாக எண்ணி ஒவ்வொன்றாக வெளியே கொண்டு செல்வது போல , நமது அனைத்து அவயங்களும் ஒவ்வொன்றாக முழுச் செயலையும் , ஒவ்வொன்றாக நிறுத்தி , நமது நடுநெஞ்சுக்கு கொண்டு வந்து வைத்து உயிர் வெளியேற வழி வகுத்து கொடுக்கும்.

சிலருக்கு கண்களின் வழியாகவும், சிலருக்கு வாயின் வழியாகவும், வேறு சிலருக்கு உச்சிமண்டையின் வழியாகவும் , இன்னும் சிலருக்கு ஆசன துவாரத்தின் வழியாகவும் , மூத்திர வாசல் வழியாகவும் , காதின் வழியாகவும் , மூக்கின் வழியாகவும், தொப்புள் குழி வழியாகவும் உயிர் வெளியேறும் .

ஒன்பது காற்றும் நிறுத்தப்பட்டு , அவயங்களும் முழு நிறுத்தம் கண்டு , எந்த வழியாக உடலை விட்டு உயிர் வெளியேற வேண்டுமோ அந்த வழியாக தனஞ்சயன் என்ற அந்த வாயு மற்றவற்றையும் வெளியே அழைத்து செல்லும்.உயிர் பிரியும் . 

மீண்டும் பிறப்பெடுக்கும் காலம் வரும்போது அதற்கென குறிப்பிட்ட தாயின் கர்ப்பத்தில் சேர்ப்பிக்கும் வேலையும் அந்த தனஞ்சயன் செய்வது தான் .

உயிரற்ற உடல்களை ஸ்ரீராகவேந்திரர் போன்ற மகான்கள் பிழைக்க வைப்பதுவும் இந்த தனஞ்சயனை தம் யோக சக்தியால் ஊக்கி விட்டு மற்ற ஒன்பது வாயுக்களை அழைத்து வரச்செய்து உடலினுள் புகுத்தி உயிர் அளிப்பதே ஆகும் .இவ்வாறாக புனரபி ஜனனம் , புனரபி மரணம் .
என்ற நிலை அமைகிறது .

பிறப்பின் துவக்கம் ஆசையின் தூண்டலால் அமைகிறது.
பாபங்களும் , புண்ணியங்களும் அற்ற சம நிலையை அடைவதே பிறப்பற்ற நிலையைத் தரும் , அதுவே ஒவ்வொரு மனிதரும் காண வேண்டிய உன்னதமான முக்தி நிலையாகும்.

தச வாயுக்களின் சுற்று:

1. பிராணன் - மூலாதரத்தில் ஆரம்பித்து மூக்கு வழியாக மூச்சு விடல், பூச உதவமு குரல்வளையில் உள்ளது. கை,கால்களை வேலை செய்ய பெரு விரல் உள்ளது.
2. அபானன் - சுவாதிட்டானத்தில் இருந்து வெளிப்பட்டு மலத்தை கீழ் நோக்கி தள்ளும், ஆசனவாயை சுருக்கும். அன்னத்தை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கும்.குறியில் காம வேகத்தை உண்டு பண்ணும்.

3. வியானன் - தோளிலிருந்து எல்லா நரம்பிலும் அசையும் அசையாபொருளில் உருப்புக்களைநீட்ட மடக்க உணர்ச்சிகளை அறியவும் உணவின் சாரத்தை கொடுத்து உடலைக்காக்கும்.

4. உதானன் - உணவின் சாரத்தை கொண்டு செல்லும் உடலை எழுந்து நிற்க உதவும். மேல் நோக்கி இயங்கும் வாயு.

5. சமானன் - நாபியிலிருந்து கால் வரை பரவும் வாயுக்களை அதிகப்படாமல் சரி செய்யும், உண்ட உணவு செரித்தவுடன் எல்லா இடங்களுக்கும் அனுப்புகிறது.

6. நாகன் - அறிவை வளர்க்கும், கண்களை திறப்பதற்கும், மயிர் சிலிர்க்க, இமை மூட வேலை செய்யும். வாந்தி எடுத்தால் துப்புதல் ஆகிய வேலை செய்யும்.

7. கூர்மன் - மனதில் கிளம்பி, கண் இமை, கொட்டாவி, வாய் மூட, கண்திறந்து மூட, கண்ணீர் வர வேலை செய்யும்.

8. கிருகரன் - நாக்கில் கசிவு, நாசி கசிவு உண்டுபண்ணும், பசி வர வைக்கும், செயல் புரிய, தும்மல் இருமலை உண்டு பண்ண.

9. தேவதத்தன் - சோம்பல், தூங்கி எழுகையில் அயர்ச்சி, தாக்குதல், கண்களை அசைத்தல், சண்டையிடுதல், தர்க்கம் பேசல்.

10. தனஞ்செயன் - மூக்கிலிருந்து உடல் முழுதும் வீக்கம் பண்ணும், காதில் கடல் அலை இரைச்சல் போல் இரைத்தல், இறந்த மூன்றாம் நாள் தலை வழியாகவெழியே செல்லுதல்.

குழந்தை கருவில் உற்பத்தியாகும் போது தச வாயுக்கள்தான் அவற்றின் வளர்ச்சியை நிர்மானிக்கின்றன.

தானம்

தானத்தில் சிறந்தது அன்னதானம்...!!

மனிதனிடம் கட்டாயம் இருக்க வேண்டிய தானம், நிதானம். '#பதறாத காரியம் சிதறாது" என்பார்கள். அதேபோல் நிதானத்தோடு இருந்தால் மட்டுமே நிம்மதி கிடைக்கும்.

தானத்தில், #நிதானம் முக்கியம்தான். ஆனால், அதைவிட முக்கியமானது பிறரின் பசியை போக்கும் அன்னதானம். மனிதன், 'போதும்" என்று சொல்லக்கூடிய ஒரே தானம், அன்னதானம் தான்.

அன்னதானத்தின் #சிறப்பு :

ஒருவரிடத்தில் பொன், பொருள், ஆடை, ஆபரணங்கள், பணம் கொடுத்தால் இன்னும் கொஞ்சம் தரலாமே என மனம் எதிர்பார்க்குமே தவிர, #போதும் என்று சொல்வதில்லை.

ஆனால், சாப்பிடும்போது வயிறு நிறைந்தவுடன் போதும் என்று கட்டாயம் சொல்லித்தான் ஆக வேண்டும்.

ஒருவருக்கு வயிறார உணவை அளித்தால், #மனம் நிம்மதி பெறும்.

இதை பெரும்பாலானோர் அனுபவத்தில் உணர்ந்து இருப்பார்கள்.

'#போதும்" என்ற சொல்லே, அன்னதானம் செய்பவர்களுக்கு போதுமான #செல்வத்தை கொடுக்குமாம். எனவேதான், எல்லா தானங்களிலும் அன்னதானமே சிறந்தது என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

அன்னதானம் செய்யும்போது, பிறர் 'போதும்" என்று சொல்லும் அளவிற்கு செய்ய வேண்டும்.

மற்றவர்களுக்கு தங்களது குடும்பத்தினருடன் பரிமாற வேண்டும்.

தங்கள் கரங்களால் #பரிமாறுவதே சிறப்பு.

பெரிய அளவிற்கு அன்னதானம் செய்ய முடியாதவர்கள் கூட சிறிய அளவில் தங்களால் முடிந்ததை செய்யலாம்.

அன்னதானத்தை தங்கள் மேற்பார்வையில் முறையாக செய்ய வேண்டும்.

இறைவனுக்கு உகந்த நாட்களிலும் அன்னதானம் செய்யலாம்.

அன்னதானம் செய்ய இயலாதவர்கள், '#பசி" என்று சொல்லி வருபவர்களுக்கு முகமலர்ச்சியோடு உணவளித்தாலே போதும்.

அதுவே அன்னதானத்திற்கு சமமானதுதான். இதனால் இறைவன் உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும் அமர்ந்து, எந்நாளும் உதவி செய்வான் என்பது உண்மை.

அதன்மூலம் அவர்களது ₹ஆத்மாக்கள் திருப்தியுடன் நம்மை வாழ்த்துகிறது.

அன்னதானத்தால் கிடைக்கும் #பலன்கள் :

#அன்புடனும், கருணையுடனும் செய்யும் அன்னதானங்கள், நம்முடைய அடுத்த #பிறவி வரை பலன் கொடுக்கும்.

அன்னதானம் செய்பவர்களின் #வாழ்க்கையில் பசிப்பிணி வராது.

இறைவனின் #பரிபூரண அருளும் கிடைக்கப்பெறும்.

#தானத்தில் #அன்னதானம் #நிதானம்  #தானம் #போதும்

மனம் ஓர் நிலைப்பட

மனம் ஒரு குதிரை.
அதில் எப்பொழுதும் எதாவது எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருக்கும்.
அப்படி எண்ண ஓட்டத்தோடு ஓடும் மனதை ஒரு நிலையில் நிறுத்தினால், எண்ணற்றா காரியங்களை சாதிக்க முடியும்.

இதற்கு வழி உண்டா ?

இதற்கு வழி காட்ட, ஒரு மந்திரத்தினை உபதேசித்துள்ளனர்  நம் முன்னோர்கள்! 

*ஓம் மருமலர் வாசினி
சர்வஜன ரட்சிணி கௌரிபகவதி
மனோவசியம் குரு குரு சுவாகா.

இம்மந்திரத்தை 108 உரு செபித்துவர மனம் அடங்கி வசியமாகும். 
மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஓடாமல் மனம் ஓர் நிலைப்படும்.
எந்த மந்திரம் செபிக்கும் முன்பும் இம்மந்திரத்தை 16 உரு செபிக்க மனம் ஓர்நிலை ஏற்பட்டு மந்திரம் விரைவில் சித்தியாகும்.
மனம் ஓர் நிலைப்படாமல் எக்காரியம் செய்தாலும் அது பலிக்காமல் போய்விடும் என்பதை கவனத்தில் கொள்ளவும். 

எந்த மந்திரம் செபித்தாலும் எக்காரியம் செய்தாலும் மன ஓர் நிலையோடு மன ஒன்றி செய்தால்தான் சித்தி உண்டாகும்.
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்ற 
அகத்தியரின் வாக்குபடி மனதில் பல எண்ணங்கள் ஓடாமல் அதை ஓர்நிலைப்படுத்தவும்.

மனதை நமது கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் இம்மந்திரம் உதவும்.
சகலவசியங்களுக்கும் மூலமாய் இருப்பது மனோவசியம் ஆகும்.
முதலில் மனதை எவன் வசியமாக்குகிறானோ அவனுக்கு சகல மந்திரங்களும் சித்தியாகும் சகல தேவதைகளும் வசமாகும்.
தன்னை ஆளக் கற்றுக்கொண்டவன் தரணியை ஆள்வான்.

தன் மனதை வசியம் செய்பவன் சகலத்தையும் வசியம் செய்வான். 

குரு

குரு என்பதற்கு "இருளை நீக்குபவர்" என்று பொருள். 

அறியாமை என்ற அஞ்ஞான இருளை நீக்கி உள்ளத்துள் ஒளி ஏற்படுத்தும் குருவினை வழிபடும் நாளாக குரு பூர்ணிமா அமைந்திருக்கிறது.

நமக்கு யார் குருவாக இருக்கிறாரோ (அல்லது எவையெல்லாம் குருவாக இருக்கிறதோ) அவரை வழிபட்டு அவர் திருவருள் பெறும் நாளாக குரு பூர்ணிமா அமைகிறது.

ஒருமுறை, ஒரு ஜென் துறவி யாத்திரை சென்று கொண்டிருந்தார். அமாவாசை இரவு, தண்ணீர் தாகமெடுக்க, தண்ணீரைத் தேடி இரவு முழுவதும் இருட்டில் அலைய, இறுதியில் காலில் ஏதோ பாத்திரம் போன்று ஒன்று தட்டுப்பட, அதில் தண்ணீர் இருந்தது. 

அதை மடமடவென்று குடித்து தாகத்தை தீர்த்துக் கொண்டார். 

பிறகு அசதியில் அங்கேயே படுத்து உறங்கினார். 

காலையில் சூரியன் உதித்தபின் எழுந்து பார்த்த போது, அவர் படுத்திருந்த இடம் ஒரு இடுகாடு. 

முந்தைய இரவு அவர் நீர் குடித்த பாத்திரம் சரியாக காய்ந்திராத ஒரு மண்டை ஓடு, மழையின் போது அதில் தேங்கியிருந்த நீரைத் தான் முந்தைய அமாவாசை இரவில் குடித்திருந்தார். 

இப்போது அதை உணர்ந்தவுடன், அவருக்கு என்னவோ செய்தது. பைத்தியம் பிடித்தது போலானார். 

தன்னிலையை இழந்து தவித்தார். 

அப்போது சட்டென சிந்தித்தார், நேற்று இரவு இந்த நீரைக்குடித்த பின் பல மணிநேரம் உறங்கினேன். 

ஒன்றும் நடக்கவில்லை. 

இப்போது மண்டை ஓடு என்று தெரிந்தபின் ஏன் உள்ளம் தவிக்கிறது என்று சிந்திக்க ஆரம்பித்தார். 

பிரச்சனை எங்கு துவங்குகிறது என்று சிந்தித்தார், உடன் அவருக்கு ஞானம் பிறந்தது. 

அவருக்கு குருவாக இருந்தது மண்டை ஓடு! 


பகவான் ரமண மகரிஷி சொல்வது "அவரவர்களின் ஆத்மாவே அவர்களுக்கு குருவாக அமைகிறது".


இரும்பினை ரசவேதியில் தங்கமாக மாற்றிய பின், அது
 மீண்டும் இரும்பாகாது.

நந்தி

‘நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம்’ என்பது பழமொழி. கோயில்களில் நடக்கும் நந்தி கல்யாண வைபவத்தில் கலந்து கொள்பவர்களுக்கு  அந்தப் பேறு உடனே கிட்டுகிறது. 

பொதுவாக கோயிலில் சிவலிங்கமும் நந்தியும் ஒரே நேர்க்கோட்டில் காட்சி தருவார்கள். 

ஒரு ஆலயத்தில் ஏழு நந்திகள் இருக்குமானால் அந்த ஆலயம் மிகச் சிறப்புடையது. 

ஐந்து பிராகாரங்கள் உள்ள கோயில்களில் இந்திர நந்தி, பிரம்ம நந்தி, வேத நந்தி, விஷ்ணு நந்தி, தர்ம நந்தி என ஐந்து  நந்திகளை தரிசிக்கலாம். 

ஒரு சமயம் இந்திரன், நந்தி ரூபத்தில் சிவபெருமானுக்கு வாகனமாக இருந்தார். அவரே இந்திர நந்தி. இந்திரன் போகங்களுக்கு அதிபதியாகத் திகழ்வ தால் இவர் ‘போக நந்தி’ என்றும் அழைக்கப்படுகிறார்.

பிரம்மன் ஒரு சமயம் நந்தியாகி சிவனைத் தாங்கினார். அதனால் அவர் பிரம்ம நந்தி எனப்பட்டார். பிரம்மன் வேத சொரூபி ஆனதால் இவரே ‘வேத நந்தி’யும் ஆனார். 

முப்புரத்தினை எரிப்பதற்காக சிவபெருமான் தேரில் ஏறியதும் ‘தன்னால்தான் திரிபுரம் அழியப் போகிறது’ என்று கர்வம் கொண்டது தேர். இதனை  அறிந்த சிவபெருமான் தன் கட்டை விரலை தேரில் ஊன்றினார். தேர் உடைந்தது. 

அப்போது மகாவிஷ்ணு நந்தியாக உருவம் எடுத்து சிவபெருமானை  தாங்கினார். அவர்தான் ‘மால் விடை’ என்று சொல்லக்கூடிய விஷ்ணு நந்தி. 

மகா பிரளய காலத்தில், தர்ம தேவதை நந்தியாக மாறி சிவபெருமானைத் தாங்கியது. அதுதான் ‘தர்ம விடை’ எனப்படும் தர்ம நந்தி.

கோயில் பிரதான வாயிலில் வலது பக்கம் பார்த்தபடி அதிகார நந்தி இருப்பார். 

பின்புறம் ரிஷப நந்தி இருக்கும். 

மூன்று நந்திகள் உள்ள ஆலயத்தில் இறைவனிடமிருந்து மூன்றாவது கொடி மரத்திற்கு அருகில் உள்ள நந்தி ‘ஆன்ம நந்தி’ எனப்படும். 

இந்த நந் தியை ‘சிலாதி நந்தி’ என்றும் சொல்வர்.

கயிலையைக் காப்பவர், அதிகார நந்தி. 

சிவன் தாண்டவம் ஆடும்பொழுது மத்தளம் இசைப்பார். சிவபெருமானின் கட்டளையை நிறைவேற்ற சேனைத்  தலைவராகவும் இருப்பவர்.

 பிரதோஷ காலத்தில் நந்தி மிகவும் போற்றப்படுகிறார். 

நந்தியை தினமும் வணங்குபவர்களுக்கு ஞானம் கைகூடும். 

குலம் செழிக்கும், சிறப்பான வாழ்வு அமையும் என்பர்

பிரதோஷ நாமாவளி

பிரதோஷ காலத்தில் சிவாலயங்களில் நந்திதேவர் முன் அமர்ந்து இந்த நாமாவளியைப் படியுங்கள். உங்கள் வேண்டுதல்கள், குறைகள் அனைத்தும் நிறைவேறும்.

1. ஓம் அம்மையப்பன் வாகனனே போற்றி
2. ஓம் அன்பர்க்குதவுபவனே போற்றி
3. ஓம் அனுகூலனே போற்றி
4. ஓம் அருந்துணையே போற்றி
5. ஓம் அண்ணலே போற்றி
6. ஓம் அருள்வடிவே போற்றி
7. ஓம் அனுமன் ஆனவனே போற்றி
8. ஓம் அரக்கரை அழித்தவனே போற்றி
9. ஓம் அடியார்க்கு அடியவனே போற்றி
10. ஓம் அபிஷேகப்பிரியனே போற்றி

11. ஓம் ஆலயம் முன் இருப்பவனே போற்றி
12. ஓம் ஆணவமழிப்பவனே போற்றி
13. ஓம் ஆதரிப்பவனே போற்றி
14. ஓம் ஆரூரில் நிற்பவனே போற்றி
15. ஓம் இனியவனே போற்றி
16. ஓம் இணையிலானே போற்றி
17. ஓம் இடப உருவனே போற்றி
18. ஓம் இமயத்திருப்பவனேபோற்றி
19. ஓம் இன்னல் தீர்ப்பவனே போற்றி
20. ஓம் இசையில் மகிழ்பவனே போற்றி

21. ஓம் ஈர்ப்பவனே போற்றி
22. ஓம் ஈடில்லாதவனே போற்றி
23. ஓம் உத்தமனே போற்றி
24. ஓம் உபகாரனே போற்றி
25. ஓம் உள்ளம் கவர்வோனே போற்றி
26. ஓம் உட்கார்ந்திருப்போனே போற்றி
27. ஓம் எளியவனே போற்றி
28. ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி
29. ஓம் ஐயனே போற்றி
30. ஓம் ஐயம்
 தீர்ப்பவனே போற்றி

31. ஓம் கனிவுருவே போற்றி
32. ஓம் களிப்புருவே போற்றி
33. ஓம் களங்கமிலானே போற்றி
34. ஓம் கர்வம் குலைப்போனே போற்றி
35. ஓம் கலைக்களஞ்சியமே போற்றி
36. ஓம் கயிலைக் காவலனே போற்றி
37. ஓம் கம்பீர உருவனே போற்றி
38. ஓம் குணநிதியே போற்றி
39. ஓம் குருபரனே போற்றி
40. ஓம் குறை களைவோனே போற்றி

41. ஓம் கூத்தனோடு உறைபவனே போற்றி
42. ஓம் கோயில் நாயகனே போற்றி
43. ஓம் சிவபுரத்தனே போற்றி
44. ஓம் சிவதூதனே போற்றி
45. ஓம் சிவனடியானே போற்றி
46. ஓம் சிவகணத்தலைவனே போற்றி
47. ஓம் சிவஸ்வரூபனே போற்றி
48. ஓம் சிவஞான போதகனே போற்றி
49. ஓம் சிலாதர் மைந்தனே போற்றி
50. ஓம் சிரஞ்சீவியே போற்றி

51. ஓம் சுருதிகளைக் காத்தவனே போற்றி
52. ஓம் சைவம் வளர்ப்பவனே போற்றி
53. ஓம் சொக்கன் சேவகனே போற்றி
54. ஒம் சோகம் தீர்ப்பவனே போற்றி
55. ஓம் ஞானியே போற்றி
56. ஓம் ஞானோபதேசிகனே போற்றி
57. ஓம் தருமவிடையே போற்றி
58. ஓம் தயாபரனே போற்றி
59. ஓம் தளையறுப்பவனே போற்றி
60. ஓம் தட்சனை தண்டித்தவனே போற்றி

61. ஓம் தவசீலனே போற்றி
62. ஓம் தஞ்சம் அளிப்பவனே போற்றி
63. ஓம் தீதையழிப்பவனே போற்றி
64. ஓம் துயர் துடைப்பவனே போற்றி
65. ஓம் தூயோர் மனத்தமர்ந்தாய் போற்றி
66. ஓம் நந்தியே போற்றி
67. ஓம் நலமளிப்பவனே போற்றி
68. ஓம் நமனை வென்றவனே போற்றி
69. ஓம் நந்தனுக்கு அருளியவனே போற்றி
70. ஓம் நாடப்படுபவனே போற்றி

71. ஓம் நாட்டியப்பிரியனே போற்றி
72. ஓம் நாதனே போற்றி
73. ஓம் நிமலனே போற்றி
74. ஓம் நீறணிந்தவனே போற்றி
75. ஓம் நீதி காப்பவனே போற்றி
76. ஓம் பராக்கிரமனே போற்றி
77. ஓம் பக்தியில் ஆழ்ந்தவனே போற்றி
78. ஓம் பசவேசன் ஆனவனே போற்றி
79. ஓம் பகை அழிப்பவனே போற்றி
80. ஓம் பதமளிப்பவனே போற்றி

81. ஓம் பர்வதமானவனே போற்றி
82. ஓம் பிரம்பேந்தியவனே போற்றி
83. ஓம் புண்ணியனே போற்றி
84. ஓம் புரு÷ஷாத்தமனே போற்றி
85. ஓம் பெரியவனே போற்றி
86. ஓம் பெருமையனே போற்றி
87. ஓம் மஞ்சனே போற்றி
88. ஓம் மலநாசகனே போற்றி
89. ஓம் மகிழ்வளிப்பவனே போற்றி
90. ஓம் மறையே கால்களானவனே போற்றி

91. ஓம் மால்விடையே போற்றி
92. ஓம் மகாதேவனே போற்றி
93. ஓம் முனியவனே போற்றி
94. ஓம் முற்றும் உணர்ந்தவனே போற்றி
95. ஓம் யோகியே போற்றி
96. ஓம் ருத்திரப்பிரியனே போற்றி
97. ஓம் வள்ளலே போற்றி
98. ஓம் வல்லாளா போற்றி
99. ஓம் வித்தகனே போற்றி
100. ஓம் விண்ணோர் திலகமே போற்றி

101. ஓம் வீர உருவமே போற்றி
102. ஓம் வீரபத்திரனே போற்றி
103. ஓம் வெண்ணிற மேனியனே போற்றி
104. ஓம் வெற்றியளிப்பவனே போற்றி
105. ஓம் வீரசைவ நாயகனே போற்றி
106. ஓம் ஸ்ரீ சைல நாதனே போற்றி
107. ஓம் நம்பினோர் வாழ்வே போற்றி
108. ஓம் நந்திகேசுவரனே போற்றி போற்றி

 ௐ நமசிவாயா 

பிரதோஷங்கள்

20 வகை பிரதோஷங்களும். அதன்  பலன்களும்

மொத்தம் 20 வகை பிரதோஷங்கள்

1. தினசரி பிரதோஷம்
2. பட்சப் பிரதோஷம்
3. மாசப் பிரதோஷம்
4. நட்சத்திரப் பிரதோஷம்
5. பூரண பிரதோஷம்
6. திவ்யப் பிரதோஷம்
7. தீபப் பிரதோஷம்
8. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்
9. மகா பிரதோஷம்
10. உத்தம மகா பிரதோஷம்
11. ஏகாட்சர பிரதோஷம்
12. அர்த்தநாரி பிரதோஷம்
13. திரிகரண பிரதோஷம்
14. பிரம்மப் பிரதோஷம்
15. அட்சரப் பிரதோஷம்
16. கந்தப் பிரதோஷம்
17. சட்ஜ பிரபா பிரதோஷம்
18. அஷ்ட திக் பிரதோஷம்
19. நவக்கிரகப் பிரதோஷம்
20. துத்தப் பிரதோஷம்

1.தினசரி பிரதோஷம்

தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம். 

2. பட்சப் பிரதோஷம்

அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு [பறவையோடு உள்ள அது சம்பந்தப்பட்ட லிங்கம் மைலாப்பூர், மயிலாடு துறை போல்] செய்வது உத்தமம் ஆகும். 

3. மாசப் பிரதோஷம்

பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் “பாணலிங்க” வழிபாடு [பல்வேறு லிங்க வகைகளில் பான லிங்கம் ஒரு வகை] செய்வது உத்தம பலனைத் தரும். 

4. நட்சத்திரப் பிரதோஷம்
பிரதோஷ திதியாகிய “திரயோதசி திதி”யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும். 

5. பூரண பிரதோஷம்

திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது “சுயம்பு லிங்கத்தை”த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள். 

6. திவ்யப் பிரதோஷம்

பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது “திவ்யப் பிரதோஷம்” ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும். 

7. தீபப் பிரதோஷம்
பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும். 

8. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்

வானத்தில் “வ” வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே, “சப்தரிஷி மண்டலம்” ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். 

இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.

9. மகா பிரதோஷம்

ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் “மகா பிரதோஷம்” ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.

குறிப்பாக திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள, “தண்டீசுவர ஆலயம்”. திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள “திருப்பைஞ்ஞீலி” சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள “ஸ்ரீவாஞ்சியம்” சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள “திருக்கோடி காவல்” சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், “மகா பிரதோஷம்” எனப்படும். 

10. உத்தம மகா பிரதோஷம்

சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும். 

11. ஏகாட்சர பிரதோஷம்

வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும். 

12. அர்த்தநாரி பிரதோஷம்

வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள். 

13. திரிகரண பிரதோஷம்

வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது. 

14. பிரம்மப் பிரதோஷம்

ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம். 

15. அட்சரப் பிரதோஷம்

வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்’ என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர். 

16. கந்தப் பிரதோஷம்

சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும். 

17. சட்ஜ பிரபா பிரதோஷம்

ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’. தேவகியும் வசு தேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம். 

18. அஷ்ட திக் பிரதோஷம்

ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள். 

19.  நவக்கிரகப் பிரதோஷம்

ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும். 

20. துத்தப் பிரதோஷம்

அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.

சமீபத்திய பதிவுகள்

கும்பகோணம் டிகிரி காபி

கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா? பித்தளை அல்லது தாமிரத்தாலான சற்றே மெகா சைஸ் ஃபில்டர்கள், ‘டம்ளர் - டவரா செட்’கள் இவைதான் கும்பகோணம்...