நோய்கள் விலக

நாராயணீயம் என்று ஒரு மிகப்பெரிய ஸ்லோகத் தொகுப்பு உண்டு. குருவாயூரில் உறையும் கிருஷ்ணரை ஆராதனை செய்து இயற்றப்பட்டது. இது 100 தசகங்களை (அத்தியாயங்களை) கொண்டது. இதில், 8வது தசகத்தில், 13வது சுலோகம் மிக மிக சக்தி வாய்ந்தது. அதை கீழே தருகிறேன்.

அஸ்மின் பராத்மன் நனு பாத்மகல்பே
த்வமிதமுத்தபித பத்மயோனிஹி

அனந்த பூம மம ரோக ராஷிம்
நிருந்தி வாதலய வாச விஷ்ணோ

மேற்கண்ட இந்த ஸ்லோகத்தை ஒரு நாள் 48 முறை, என்று 48 நாட்கள் ஆத்மார்த்தமாக ஜெபித்தபின் எந்த வியாதியாயினும், "உள்ளது" என்று எழுதித்தந்த மருத்துவர் கையாலேயே, இனி "இல்லை" என்று எழுத வைக்க முடியும். அப்படி மிக சக்தி வாய்ந்த மந்திரம். இதை இறை நம்பிக்கையுடன், எந்த வியாதியால் பீடிக்கப்பட்டவரும், ஜெபித்து வர,  நிச்சயம், சீக்கிரமாக குணமடைய முடியும்.

அன்னதானம்

அன்னதானம் செய்பவர்களை கடவுளின் அம்சம் என்று சொல்ல வேண்டும் | வள்ளலார்

இறையருளைப் பெறுவதற்கு ஆதாரம் அன்புதான். மனதில் அன்பு ஊற்றெடுக்க வேண்டுமானால், எல்லா உயிர்களையும் நேசிப்பது ஒன்று தான் வழியாகும்.

அன்னதானம் செய்பவர்களை கடவுளின் அம்சம் என்று சொல்ல வேண்டும். பசி புத்தியை தடுமாறச் செய்யும். பசி என்னும் தீயை அன்னத்தால் அணைக்க வேண்டும். அன்னமிடுபவர்கள் பெருங் கருணையாளர்கள் என்றால் மிகையில்லை.

பெரியவர்களைக் கண்டால் பணிவுடன் நடந்து கொள்ளுங்கள். தவறு செய்தால் அதனைத் திருத்திக் கொள்ள முயலுங்கள். நற்குணங்களை பின்பற்றி நல்லவர்களாக வாழுங்கள்.

ஆன்மீக உணர்வுடன் ஆண்டவனின் சரண டைந்தால் நம் மனம் தூய்மை பெறும். தூய மனம் பேரின்பத்தில் வாசலைத் திறந்துவிடும் சக்தி படைத்தது.

மரணம் எப்போது வேண்டுமானாலும் நம்மைத் தேடி வரலாம். மனிதர்கள் நம் நிலையாமை தன்மையை உணர்ந்து கொள்ளத் தவறி விட்டனர். அதனால் பொன்னாசை, மண்ணாசை, பெண்ணாசை கொண்டு அலைகிறார்கள்.

மனம் என்னும் கடிவாளத்தை உறுதியாகப் பிடித்தால்தான் நம் புலன்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

ஜெபம் செய்யும் முறை

1. ருத்ராட்ஷம் அல்லது துளசி மாலையை பயன்படுத்தி ஜெபம் செய்ய வேண்டும்.

2. வலது கை நடுவிரல் மற்றும் கட்டை விரலால் மட்டுமே மாலையை அழுத்த வேண்டும். ஆட்காட்டி விரலில் ஜபம் செய்தால் பலன் இல்லை.

3. 108 மணிகள் கொண்ட மாலையை பயன்படுத்த வேண்டும். உடலில் 108 புள்ளிகளில் 72000 நாடிகள் இணைவதால், அந்த பகுதியை தூண்ட இந்த 108 மணிகள் பயன்படும். மேலும் ராசி மண்டலத்தில் நட்சத்திரங்கள் அனைத்தையும் பிரிக்கும் பொழுது 108 பாகங்கள் உண்டாகிறது. ஜெப மாலையின் எண்ணிக்கை அதன் அடிப்படையில் அமையும். எண்ணிக்கை பெற்ற ஜெபம் பயனற்ற செயலாகும்.

4. க்ருஷ்ண மணி என அழைக்கப்படும் 109 வது மணியை தாண்டக்கூடாது. மீண்டும் ஜெபித்த வழியே மாலையை திருப்பி ஜெபிக்க வேண்டும்.
5. தர்ப்பை ஆசனம் அல்லது கம்பளித்துணியில் அமர்ந்து ஜெபம் செய்யவேண்டும். ஜெபம் செய்யும் பொழுது உடலில் மின்னூட்டம் ஏற்படும். அவை நமது உடலிலேயே தங்க வேண்டும். பூமியில் உடல் தொடாமல் இருக்க மின்கடத்தாப் பொருட்களான தர்ப்பை, கம்பளி துணியும் பயன்படும்.
வெறும் தரையில் அமர்ந்து ஜெபம் செய்யக்கூடாது. மேலும் தர்ப்பை ஆசனம் அல்லது கம்பளி துண்டின் மேல் ஓர் மெல்லிய வெள்ளைத் துணியை விரித்து அதன் மீது அமர்ந்து ஜெபம் செய்யவும்.

6. ஜெபிக்கும் பொழுது ஜெபமாலை வெளியே தெரியாத படி ஓர் துணியிலோ அல்லது அங்கவஸ்திரம் அணிந்து அதன் உள்பகுதியிலோ வைத்து ஜெபம் செய்யவேண்டும்.

7. பத்மாசனம், சுகாசனம் மற்றும் சித்தாசனத்தில் அமர்ந்து ஜெபிக்கவேண்டும்.

8. தீட்சை பெற்ற மந்திரத்தை சத்தமாக சொல்லக்கூடாது. உதடுகள் அசையக் கூடாது. மனதுக்குள் உச்சரிக்கவேண்டும். மானஸ ஜெபம் என்பார்கள். நாமாவளி மந்திரங்கள் பாராயணம் செய்யும் பொழுது உரக்க சொல்லலாம். குருவிடம் பெற்ற தீட்சை மந்திரத்தை சப்தமாக ஜெபிப்பது, வெளி நபர்களுக்கு கூறுவது, எழுதிவைப்பது அனைத்தும் மந்திர யோகத்திற்கு எதிரான செயல்கள். இது போன்று செயல்பட்டால் மந்திரம் சித்தி ஏற்படுவதில் சிக்கல் உண்டாகும

உருவத் தோற்றத்திற்கான காரணம்

*மயிலுக்கு தோகையில் கண் போன்ற அமைப்பு வந்தது எப்படி ??*

மயில் தோகை விரித்தாடும் அழகைப் பார்க்கவே பரவசமாக இருக்கும்.

நம் வீட்டிற்கு முன் நின்று கரையும் காகங்களுக்கு உணவளித்தால் நம் முன்னோர்களுக்கு அன்னமளிப்பதற்குச் சமம்.

புராணங்களில் அன்னப்பறவையின் அறிவு மிகவும் போற்றப்படுகின்றது.

ஓணான், சாதாரணமாகத் தங்க நிறத்தில் தோன்றும்.

ஸ்ரீவால்மீகி ராமாயணம் உத்தரகாண்டத்தில் மேற்கூறிய இப்பிராணிகளுக்கு எவ்வாறு தனித்தன்மை வாய்த்தது என்பதற்கான விளக்கம் உள்ளது.

மருத்தன் என்ற அரசர் உசிரபீஜம் என்ற இடத்தில் ஒரு யாகம் நடத்தினார்.

தேவகுரு பிருகஸ்பதியின் சகோதரர் சம்வர்த்தர் யாகத்தை நடத்த உதவினார். அப்போது ராவணன் அங்கே வந்தான்.

அவனது அபரிமிதமான பலத்தாலும், பிரம்மாவினால் வழங்கப்பட்ட வரங்களாலும் அவனைக் கண்டு பயந்த தேவர்கள் தங்கள் சொந்த உருவங்களை மறைத்துக் கொண்டு வேறு உருவங்களை எடுத்தனர்.

இந்திரன் மயில் ஆனான்; யமன் காகம் ஆனான்; குபேரன் ஓணான் ஆனான்; வருணன் அன்னம் ஆனான்.

அப்போது ராவணன் ஓர் அசுத்தமான நாய் போல யாகம் நடந்த பஞ்சவடிக்குள் நுழைந்தான்.

ராவண: ப்ராவிசத் யக்ஞம் ஸாரமேய இவா சுசி: என்றார் வால்மீகி.

மருத்தனிடம் ராவணன் சென்று அவரைத் தன்னுடன் போரிட அழைத்தான்.

மருத்தன் அவனை யார் என்று கேட்டார்.

ராவணன் திமிராக, உன் அறியாமையைக் கண்டு வியப்பாக உள்ளது.

அரசே, நான் குபேரனின் சகோதரன். அவனை வென்று நான் இந்தப் புஷ்பக விமானத்தைக் கைப்பற்றினேன் என்றான்.

அரசனோ, ஓ! மூத்த சகோதரனையே போரில் வென்றவனா நீ?

இதுவரை நான் உன்னைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை.

ஏ கொடுமதியானே! எனது அம்புகளால் உன்னை யமனிடம் அனுப்புகிறேன், பார் என்றார்.

மிகுந்த கோபத்துடன் வில்லேந்தி ராவணனை எதிர்க்கக் கிளம்பினார் மருத்தன்.

உடனே சம்வர்த்தர் சொன்னார்: அரசே! நான் கூறுவதைக் கேள்.

மகேஸ்வரனைக் குறித்துச் செய்யப்படும் இந்த யாகத்தை அரைகுறையாக விட்டால் உனது வம்சமே அழிந்துவிடும்.

யாக தீட்சை எடுத்துக் கொண்டவர் போர் புரிவது தகாது. கோபம் கொள்வதும் தகாது. போரில் வெற்றியடைவதும் நிச்சயமல்ல. மேலும் ராவணனைப் போரில் வெல்வது மிகவும் சிரமமானது.

மருத்தன் அந்த அறிவுரையை ஏற்று, யாகம் செய்வதில் முனைந்தார். உடனே ராவணனின் மந்திரி சுகன், ராவணன் வென்றான் என்று கொக்கரிக்க, ராவணனும் அங்கிருந்து அகன்றான்.

அவன் சென்ற பிறகு இந்திராதி தேவர்கள் தங்கள் சுய உருவங்களை அடைந்தார்கள்.

அப்போது இந்திரன் மயிலிடம், உனக்குப் பாம்புகளால் பயம் ஏற்படாது.

உன் நீல நிறத்தோகையில் என் ஆயிரம் கண்கள் போன்றதொரு தோற்றம் ஏற்படும்.

மேகமூட்டத்தின்போது நீ தோகையை விரித்து அழகாக ஆடுவாய் என வரம் தந்தார்.

வரத்தைப் பெற்ற மயில் கூட்டங்கள் மகிழ்ந்தன.

அங்கிருந்த காகத்திடம் யமன், காகமே! நீ எனக்கு மிகவும் திருப்தி தந்துள்ளாய்.

பிற உயிர்களைப் பாதிக்கும் நோய்கள் உன்னை வருத்தாது.

உன்னை மக்களும் கொல்லமாட்டார்கள்.

நீ மாந்தர்களால் அளிக்கப்படும் உணவைச் சாப்பிட்டால், அதன் விளைவாக பித்ரு லோகத்திலுள்ள பித்ருக்கள் பசிப்பிணி நீங்குவார்கள் என்றார்.

அடுத்து, வருண பகவான் அன்னத்திடம், அன்னமே!

இனி பூரண சந்திரனை ஒத்ததாக உனது மேனி விளங்கும். உன்னைக் காணும் மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்கும்.

நல்ல வெண்மையான நுரையைப் போல தனித்தன்மையுடன் நீ விளங்குவாய்.

எனது சரீரமான நீருடன் நீ இணையும் போது உன் மகிழ்ச்சி ஈடு இணையற்றதாகும் என வரமளித்தார். (இந்த வரம் கிடைப்பதற்கு முன்பு அன்னப்பட்சிகள் வெள்ளை நிறமாக இல்லை.

அவற்றின் இறக்கைகளின் நுனி கருமையாகவும், அவற்றின் மார்புப் புறம் கருமை கலந்த பழுப்பு நிறமாகவும் இருந்ததாம்.)

ஒரு பாறையின் மேலிருந்த ஓணானிடம் குபேரன், ஓணானே, இனி உன் உனது கருமை நிறம் மாறிப் பொன் நிறமாகவும் மாறும் என்றார்.

இவ்வாறு தேவர்கள் வரம் அருளியதால் இப்பிராணிகளுக்கு தனித்தன்மை வாய்த்ததாக புராணங்கள் கூறுகின்றன.

குரு

குருமார்கள் எட்டு வகை.

சீடனின் உண்மைகளைக்
கவர்ந்து, ஏமாற்றுபவன் நிஷித குரு. நீக்கப்பட வேண்டியவன்.
எட்டு வகையான கர்மங்களால் இவ்வுலக வாழ்விலும், மேலுலக வாழ்விலும் சுகமான வாழ்க்கை வாழ வழிகாட்டுபவன் காமியகுரு.
இவரும் நீக்கப்பட வேண்டியவரே.
வேதங்களைப் போதிப்பவர் போதக குரு.
வேத தத்துவங்களை வேறுபடுத்தி
விளக்குபவர் வேதக குரு.
தேகங்களை சூசகமாகச் சுட்டி ஆத்மாவை விளக்குபவர் சூசக குரு.
நாம் பிறந்ததற்காண காரணத்தை விளக்கி கடைத் தேற்றுபவர் காரண குரு.
மகாவாக்கியப் பொருளால் இறைவனைக் காட்டுபவர் வாசக குரு.
சீடனுக்கு ஏற்படும் சந்தேகங்களை,
தக்கக் காரணம் காட்டி விளக்குபவர்
விகித குரு.
இந்த ஆறு திறமைகளை ஒருங்கே பெற்ற குருவாக அமையலாம்.
அல்லது யார் யாரிடம் எந்தத் திறமைகள் உளவோ அவர்களை குருமார்களாக ஏற்கலாம்.

பற்றின்றி கடமையாற்ற
மனம் தூய்மை அடையும். தூய்மையான மனதிலே உண்மையான பக்தி உண்டாகும்.
பக்தி வளர்ச்சியடைய அருள் உள்ளமாக மாற்றம் அடையும்.
அருள் உள்ளம் உண்டாக, ஆண்டவன் உங்கள் உள்ளத்தில்
இருந்து வெளிப்பட்டு உங்களை
ஆட்கொள்வான்.
இவற்றையே நம் அறநூல்கள் கருமம்,பக்தி,ஞானம் என்று கூறுகிறது.

காலங் காலமாக உங்கள் வீட்டில் உள்ளோர் அனைவரும்
ஆலயத்திற்குச் சென்று
ஆண்டவனை வழிப்பட்டு வருகிறார்கள். உங்கள் மரபில்
அவ்வாறு வழிபட்டோரில் எவரேனும் ஒருவர் சமாதி நிலையை அடைந்துள்ளார்களா?
ஆரம்ப நிலையில் ஆலய வழிபாடு
வேண்டும்.பிறகு ஆழ்நிலைத் தியானம் வேண்டும். தியானத்தில்
மனம் அடங்கி ஞானம் வரப்பெற்றாலே முக்தி கிடைக்கும்.
மனம் படிப்படியாக பக்குவப்பட்டு
உண்மையான பக்தி உண்டாகி, அருள் உள்ளமாகி, தியானத்திற்கு வழிகாட்டி, தியான முதிர்ச்சியில் ஞானம் பெற வேண்டும் என்பதற்காக அமைக்கப் பட்டவைகளே ஆலயங்கள்.
                                                               பக்தி வழியில் செல்வோர் தம் மனதில்
பதிந்துள்ள, மனதில் எண்ணினாலே பரவச நிலைக்கு இழுக்கும் ஒரே கடவுளைச் சிந்திக்க
வேண்டும்.வழிபட வேண்டும்.
அருவுருவ வழியில் செல்வோர் பக்தி வழியில் தான் வழிபட்டு வந்த
கடவுளின் தோற்றத்தைக் கண்கள் மூடி ஒருமைப்பட்ட மனத்தோடு தியானம் செய்துவர வேண்டும்.
தோற்றும் பொருளெல்லாம் இறைவன் படைப்பே என்று உள்ளத்தில் சிந்திப்போர், இறைவன் உருவம் அற்றவன்.
அன்பு,அருள்,அறிவு வடிவினன்
என்று எண்ணிப் சிந்திக்க அவரது
உண்மை வடிவான பேரொளிக் காட்சியைப் பெற்று முக்தி அடையலாம்.
இறைவழிபாட்டில் இதுவே உயர்ந்த நிலை.

உடல் இல்லாத உயிர்
ஆவி அல்லது பேய், பிசாசு.
உயிர் இல்லாத உடம்பு
பிணம்.
இரண்டும் ஒன்றுபட்டாலே இயக்கம்.
இதிலிருந்து நாம் அறிய வேண்டியது:-
உடலும், உயிரும் சேர்ந்தது உணர்வு.
உணர்வே அறிவு.அறிவே கடவுள்.
கடவுளே நீ. நீயே கடவுள்.
இதனைத்தான் வேதங்கள் கூறுகின்றன.

அறிவு அறிவின்மை
கலந்துள்ளவன் அஞ்ஞானி.
அறிவை ஒரே சிந்தனையில் குவிப்போன் விஞ்ஞானி.
தத்துவங்களை ஆய்ந்து தன்னையும், தனக்காதாரமான
இறைவனையும் அறிபவன் மெய்ஞ்ஞானி.
ஆக மூவர்க்கும் ஞானி எனும் பட்டம்
உடன் வருவதைக் கவனியுங்கள்.
இன்று அஞ்ஞானியாய் இருப்பவன்
நாளை விஞ்ஞானி. நாளைய மறுநாள் மெய்ஞ்ஞானி.
கால இடைவெளி மட்டுமே குறுக்கீடு. முயற்சி செய்தால் ஞானம் பெற்று இறைவனை அடையலாம்.

பிறந்த குழந்தைக்கு அவனது சுயகருமம்
இல்லை. நான்கு வயது வரை குழந்தைக்கு ஏற்படுகின்ற இன்ப துன்பங்களுக்குக் காரணம் தாயாரின் முன்வினைப் பயன்.
நான்கு வயது வரை தாயார் குழந்தையைச் சுமந்து செல்வாள்.
நான்கு வயது முதல் பதினோரு வயது வரை தந்தையின் முன்வினைக் கருமத்தால் குழந்தைக்கு நன்மை, தீமை உண்டாகும். இந்த வயது வரை குழந்தை பாதிக்கப் பட்டால் சுமந்து
செல்வோன் தந்தை.
பதினோறு வயது முதல் பதிமூன்று வரை தாய், தந்தை, பிள்ளை ஆகிய
மூவரின் முன் விளைவுகளால் இருவினைகள் அமையும்.
பதிமூன்று வயதுக்குமேல், சுயமாக
சிந்திக்கும் குழந்தைக்கு சுய கருமம் வேலை செய்யும். இதுவே
வேதங்கள் கூறும் விளக்கமாகும்.
                                                                      மதி என்பது மனம். மனதைப் பயன்படுத்தி ஒரு வேலையைச் செய்கிறீர். முடிவு தோல்வியாகிறது. நன்றாகச் சிந்திக்கிறீர். சரியாகவே செய்துள்ளீர்.
மீண்டும் முயற்சி செய்கிறீர். தோல்வியே. ஓர் அனுபவ சாலியிடம் கேட்கிறீர்.அவரும் சரியாகத்தான் செய்துள்ளீர்
என்கிறார். மன உறுதியோடு மூன்றாம் முறையும் முயற்சிக்கிறீர்.
முடிவு தோல்வியே.
வள்ளுவர் நினைவுக்கு வருகிறார்.
விதியைக் காட்டிலும் மிகப் பெரிய
சக்தி வேறென்ன உள்ளது. அறிவைப் பயன் படுத்தி ஒரு செயலைச் செய்தால் விதி எதிர்ப்பக்கம் வந்து தடுக்கிறது.
விதிக்கப்பட்டது விதி. அதனை அனுபவித்தே ஆக வேண்டும். முயற்சி என்பது மதி. இருவிதப் பயன்களைத் தருவது மதி.
"ஊழிற் பெருவலி யாவும் மற்றொன்று
சூழினும் தான் முந்துறும்." (குறள்).

அபிமானம் என்றால்
பற்று என்று பொருள்.
இறைவனை உணர தேகாபிமானத்தை விடவேண்டும்.
தேகங்கள், உலகியல் விவகாரத்திற்கு மூன்று உள்ளன.
1.தூலதேகம்:- இதற்கு ஆறுவகை
நிலைகள் உள்ளன.
அ) தாயின் கருவில் இருத்தல்.
ஆ)பிறத்தல்.
இ)வளர்தல்.
ஈ)தோற்றம் மாறுதல்.
உ)தேய்தல். (நரை,பார்வைக் குறைதல், வயோதிக நிலை அடைதல்).
ஊ)மரணம் அடைதல்.
இவற்றை எல்லாம் பார்க்கும் ஆத்மா அல்லது உயிர் நீ! உனக்கு பிறப்பு இறப்பு இல்லை.

இரண்டாவதாக சூக்கும
தேகம்.இதன் மீதும் பற்று கொள்ளுதல் கூடாது.
இதில் இருபதுதத்துவங்கள் அடங்கும்.
மனம்,அறிவு,மெய்,வாய்,கண், மூக்கு,செவி எனும் ஏழினைப் பற்றித் தெரிந்து கொண்டால் போதும்.
மனம்:- இதற்கு ஆறு வேலைகள் உள்ளன.
1.நினைப்பு.
2.மறப்பு.
3.சுகப்படுதல்.
4.துக்கப் படுதல்.
5.எண்ணங்களால் விரிதல்.
6.எண்ணங்களால் சுருங்குதல்‌.
இந்த ஆறையும் பார்க்கும் ஆத்மா நீ.
மனதின் இந்தச் செயல்களைப் பார்ப்பவனே நீ.மனம் நீ அல்ல.
மனமும் அறிவும் நாணயத்தின்
இரண்டு பக்கங்களைப் போன்றது.
தடுமாறும் போது அதற்கு மனம்
என்று பெயர். தெளிவாக இருக்கும் போது அறிவு என்று பெயர்.

மூன்றாவதாக இருப்பது
காரண தேகம்.ஆத்மாவை முக்தி அடையாமல் தடுப்பது இறைஞானம்இல்லாமை.
இதையே அஞ்ஞானம் என்பர்.

குருவின் துணையோடு தேக தத்துவங்களான முப்பத்தி ஆறையும் கடந்தாலே கடவுளோடு
இணைய முடியும்.

ஆத்ம சிரிப்பு

ஆத்ம சிரிப்பு
...
மனம்
....
மனம் எது..
..
குணம் எது..
..
குலத்தின் மூலம் வரும் மனம்
கு..ணம்...
..
மனதின் தந்தை உயிர்
..
இதன் குணம் வேறு
...
மனதின் தாய் உடல்
..
இதன் குணம் வேறு
...
உடல்
மூதாதையர்கள் மூலம் வந்தது
அதன்
மரபணு பதிவுகள்
உடலில் இருந்தே தீரும்
...
உயிர்
அது பிரம்மத்தின் மூலம்
அதன் குணங்கள்
திவ்ய சக்தி வாய்ந்தது
...
உயிர்
...
பிறப்பதற்கு முன் எங்கு இருந்தது
எதில் இருந்தது
அதன்
யாத்திரை அனுபவங்கள் பதிவு
அழிவது இல்லை
....
இந்த பிறவியில்
ஒருவன் கற்ற ஞானம்
அழிந்து போவது இல்லை
அடுத்த பிறவியில்
அதன் தாக்கம்
இருந்தே தீரும்
...
இரண்டு கருமையங்கள்
சுட்சம உடலில் இருக்கும்
ஒன்று
உயிரின் கருமையம்
இரண்டு
உடலின் மூதாதையர்கள் வழி
உடல் சேர்ந்த கரு மையம்
....
இந்த
இரண்டு
கரு மையத்திற்கும்
மனதின் ஆட்டத்திற்கும்
நெருங்கிய தொடர்பு உண்டு
...
ஒவ்வொறு மனிதருக்கும்
இது மாறுபடும்
...
ஒவ்வொறு உயிரினங்களுக்கும்
இது மாறுபடும்
.....
கருமையம் அறியாது
மனதின்
திருமையம்
அறியலாகாது
...
சிறு குழந்தைகள் ஏன்
ஆனந்தமாக இருக்கிறது...?
..❤❤❤❤❤❤❤❤❤
காரணம்
உயிராக மட்டும் அவர்கள்
இருப்பதால்
உடல் அறியாமல்
ஆண் பெண் அறியாமல்
கொடிய மிருகங்கள்
அருகிலும்
அதன் ஆபத்தை கண்டுகொள்ளாமல்
ஆனந்தமாக இருப்பதற்கு காரணம்
உயிர் குணம்
பிரம்ம குணம்
...
வளர வளரவே
கருமையம் விழிப்பு பெறும்
உயிர் தன்மை குறைந்து
உடல் தன்மை வளர வளர
மனம்
அதன்
விகார ஆட்டத்தை ஆரம்பிக்கும்
...
கவனிக்க வேண்டிய விஷயம்
..
குழந்தைகளின்
ஆத்ம சிரிப்பு..
அப்பொழுது இருந்த
மனதின் பூரிப்பு..
ஏன் என்பதே
எப்படி என்பதே
ஒரு மனம்
சிரிக்கும் போது
அழகு கூடுவது இல்லை

ஒரு
ஆத்மம் சிரிக்கும் போது
அழகு
குறைவது இல்லை..

நமசிவாய
சர்வமும் சிவமயம்

மெய்ப்பொருள்

குரு சிஷ்யன்
பஞ்ச பூதம்
விளக்கம்,,,

குரு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

பஞ்ச பூதங்களிலும் பகவான் உள்ளார். உயிர் உள்ளவை அற்றவை அனைத்திலும் நம் நன்மை கருதும் இறைவன் இருக்கிறார். ”

அன்றைய பாடத்தை அசைபோட்டவாறே அந்த பிரம்மச்சாரி பிச்சைக்கு சென்று கொண்டிருந்தான்.
திடீரென்று கனத்த குரல் ஒன்று, “ மதயானை வருகிறது. ஓடிப்போங்க…..”

அவன் கலங்கவில்லை. “அந்த மதயானையிலும் இறைவன்தானே இருக்கிறான். அவன் என்னை என்ன செய்யப் போகிறான்?” என்று எண்ணியபடியே மெதுவாக சென்றான்.

மீண்டும் யானைப்பாகனே ஓடிவந்து, “ ஓடிப்போயிடுங்க…. மதயானை வருகிறது” என்றவாறே ஓடினான்.

அப்போதும் சிஷ்யன் கலங்கவில்லை.
யானையும் வந்தது. கையில் அகப்பட்ட இவனை பிடித்து தூக்கி எறிந்தது. பலத்த காயத்துடன் உயிர் பிழைத்தான்.

குரு கேட்டார், “யானை வந்தபோது நீ ஏன் ஓடி தப்பிக்கவில்லை?”

நம்மாளு சொன்னான், “நீங்கதானே குருவே சொன்னீர்கள். அனைத்திலும் இறைவன் இருக்கிறான். அவன் நமக்கு நன்மையே செய்வான் என்று” முனகியபடியே சொன்னான்.

குரு சிரித்தபடியே சொன்னார், “ அட… அரைகுறை வேதாந்தியே…. எல்லாவற்றிலும் கடவுள் இருக்கிறார் என்பது உண்மைதான். யானையிடம் கடவுளை நம்பிய நீ அந்த யானைப்பாகன் உருவில் வந்த கடவுளின் பேச்சை ஏன் கேட்கவில்லை?”

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு,,

சாளகிராம பூஜை

சாளக்கிராம
                  பூஜை .

1. சாளக்கிராம பூஜை    செய்பவன்
    சித்தம் சுத்தமாகும்.

2. சாளக்கிராம பூஜை செய்பவன்
    விஷ்ணுவாகவே ஆகிவிடுகிறான்.

3. சாளக்கிராம சிலாவின் பிம்ப தரிசனம்
   கொலை செய்தவனின்
   பாபத்தையும் போக்கும்.

4. சாளக்கிராமத்தை நினைத்தாலும்,
    தரிசித்தாலும், பூஜை செய்தாலும்,
    சிங்கத்தை கண்டு மற்ற மிருகங்கள்
    தெறித்து ஓடுவதுபோல.
    பாபங்கள்_கழன்று_ஓடும்.

5. இதனை பக்தியுடனோ அல்லது
    பக்தியேஇல்லாது அல்லது
    எதிர்பாராமல் திடீரென பூஜை செய்ய
    நேர்ந்தாலும்_முக்தி_உண்டு.

6.சாளக்கிராம பூஜை செய்பவனுக்கு
   எமபயமில்லை.

7. சந்தனம், புஷ்பம், தீபம், தூபம்,
    நைவேத்தியம்
    இப்பூஜையினை_செய்பவர்கள்
    விஷ்ணுலோகத்தில் அனந்தகாலம்
    வாழ்வார்கள்.

8. சாளக்கிராமத்தை
    பக்தியுடன்_நமஸ்கரித்தவன்
    தேவனாகிறான்...!
    அவன் சாதாரண மனிதன்
    அல்லன்...!

9. சாளக்கிராமம்- பகவான் இருக்குமிடம்.
     சர்வ பாபங்களையும  நாசம்_
     செய்யவல்லது.

10. பாபங்கள் செய்தவர்கள் கூட
      சாளக்கிராம பூஜையினால் பரகதி
     அடைகிறார்கள். பக்தியோடு
     செய்பவர்கள்   முக்தியடைகிறார்கள்.

11. அரணி கட்டையில் அக்னி
      உண்டாவதுபோல, சாளக்கிராமத்தில்
      ஹரி இருக்கின்றார். லஷ்மி மற்றும்
      வைகுண்டத்தில் இருப்பதைவிட
      ஹரி சாளக்கிராமத்தில் மிகவும்
      பிரசன்னமாகவே உள்ளார்.

12. சாளக்கிராமத்தை பூஜை செய்தால் 
     அக்னிஹோத்தரமும் பூதானமும்
     செய்த பலன்.

13. இராஜசூய யாகம் ஆயிரம் செய்தாலும்,
     ஒரு நாள் சாளக்கிராமத்தை பூஜை
      செய்த பலனுக்கு ஈடாகாது.

14. பன்னிரெண்டு சாளக்கிராமம்
      கொண்டு பூஜை செய்தால்
      பன்னிரெண்டு  கோடி சிவலிங்கங்களை
      பன்னிரெண்டு கல்பகாலம்
      பூஜை செய்தபலன்
      ஒரே நாளில் கிடைக்கும்.

15. காமக்குரோதம் உள்ள மனிதன்கூட
      சாளக்கிராம பூஜையினால்
     முக்திபெறுவான்.

16.தீர்த்த யாத்திரையோ, யாகமோ
     செய்யாமலே சாளக்கிராம
      பூஜையினால் முக்தியடைவான்.

17. சாளக்கிராம தீர்த்தத்தாலே சர்வ
      புண்ய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்த
      பலனும்,
      சர்வ யக்ஞம் செய்த பலனும்
       கிடைத்துவிடும்.

18. பல புண்ணிய தீர்த்த தேவதைகள்
       சாளக்கிராமத்தில் சூட்சுமாமயிருந்து
       அருள்பாலிக்கின்றனர்.

19. விஷ்ணுசகஸ்ரநாமம் பாராயணம்
       செய்துகொண்டே சாளக்கிராம பூஜை
       செய்பவன் விஷ்ணுபதம் அடைகிறான்.

20. சாளக்கிராமம் இருக்குமிடத்தில்
       சமஸ்த லோகங்களும்,
       சமஸ்த தேவதைகளும் இருப்பதாக
       ஐதீகம்.

21. பஞ்சகவ்யம் ஏன் சாப்பிட வேண்டும்..
      சாளக்கிராம தீர்த்தமே போதுமே நம்
      உள்ளும் புறமும் சுத்தமாகுமே.

22. ஒரு திவலை சாளக்கிராமம் தீர்த்தம்
       சாப்பிட்டாலே போதுமே, மீண்டும்
       பிறவாநிலை கிடைத்துவிடும்.

சமீபத்திய பதிவுகள்

கும்பகோணம் டிகிரி காபி

கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா? பித்தளை அல்லது தாமிரத்தாலான சற்றே மெகா சைஸ் ஃபில்டர்கள், ‘டம்ளர் - டவரா செட்’கள் இவைதான் கும்பகோணம்...