21 பாடங்கள்

மனிதன்  கற்றுக்கொள்ள வேண்டிய 21 பாடங்கள் ..!
சிங்கத்திடம் இருந்து ஒன்றையும்,
கொக்கிடம் இருந்து இரண்டையும்,
கழுதையிடம் இருந்து மூன்றையும்,
கோழியிடம் இருந்து நான்கையும்,
காக்கையிடம் இருந்து ஐந்தையும்,
நாயிடம் இருந்து ஆறையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.
1 - சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது,
நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.
2 - கொக்கு ஓடு மீன் ஓட, உறு மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.
3 - கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையை தொடர்ந்து செய்யும்,
வெயில், மழை என்று பாராமல் உழைக்கும்,
தன் முதலாளிக்கு கட்டுப்பட்டிருக்கும் குணம் ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
4 - விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவரவர்க்கு தேவையானவற்றை பிரித்துக் கொடுத்தல்,
தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
5 - இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல்,
தேவையான பொருள்களை சேமித்து வைத்தல்,
யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல்,
தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
6 - கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல்,
உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல்,
நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல்,
தன்னைவிடவும் உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.
யார் ஒருவர் மேலே சொன்ன இந்த இருபத்தியொரு விஷயங்களை கடைபிடிக்கிறாறோ அவர் எதிலும் வெற்றி அடைவார். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.
இது நான் சொல்லலைங்க ..!

வீர சிவாஜி

படித்ததில் பிடித்தது பிடித்ததை உங்களோடு.

20 வருட கடும் போராட்டத்துக்கு பின் வியட்நாம் அமெரிக்காவை வென்றது..(1955-1975)

போர் முடிந்ததும் ஒரு செய்தியாளர் வியட்நாம் அதிபரை பார்த்து கேட்டார்...

இது எப்படி சாத்தியம்..???
ஒரு சிறிய தெற்காசிய நாடு..வல்லரசு அமெரிக்காவை தோற்கடித்தது எப்படி???

அதற்கு அந்த அதிபர் அமெரிக்க போன்ற வல்லரசை தோற்கடிப்பது மிகவும் கடினம்..

ஆனால் ஒரு சரித்திர புகழ்பெற்ற மாவீரனின் வீரமும் தீரமும் செறிந்த கதையை படித்தேன்.....அது எனக்குள் எழுப்பிய கனலால்தான் இந்த வெற்றி சாத்தியமாகியது...அவரின் போர் தந்திரங்கள்.. யுக்திகளை எங்கள் போரில் கடைபிடித்தோம்.. வெற்றி கிடைத்தது என்றார்...

யாரந்த மாவீரன்... பேரரசன்..என பத்திரிகையாளர் வினவ...

வேறு யாருமில்லை..

இஸ்லாமிய மன்னர்களை கதிகலங்க வைத்த...மாவீரர் சத்ரபதி சிவாஜி மஹராஜ் தான்...

வியட்நாமில் மட்டும் இப்படி ஒரு மாவீரன் அவதரித்திருந்தால் இந்நேரம் உலகம் எங்கள் கைகளில் இருந்திருக்கும்..என்றார்.

சில வருடங்கள் கழித்து அந்த அதிபர் இறந்து போனார்...

அவரது கல்லறையில் அவரது விருப்பப்படி பொறிக்கப்பட்ட வாசகம்...

""சிவாஜி மஹராஜின் பணிவான பணியாள் இங்கே ஓய்வெடுத்து கொண்டிருக்கிறார்...""

இப்பொழுதும் அங்கே சென்றால் அதை நீங்கள் காணலாம்...

சில வருடங்கள் கழித்து வியட்நாம் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வர நேரிட்டது..

நம்மாட்களும் வழக்கம் போல இந்த காந்தி சமாதி..சக்தி ஸ்தல்..செங்கோட்டை... அது இதுனு சுத்தி காட்ட....

அலுத்து போன அமைச்சர்.. சத்ரபதி சிவாஜி மஹராஜின் சமாதி எங்கே உள்ளது என அதிகாரிகளை கேட்க
அவர்கள் ஆச்சரியத்துடன் அது மஹாராஷ்டிரா.. ராய்காட்..ல இருக்கு என்றனர்...

உடனே ராய்காட் போக வேண்டும் என  வியட்நாம் அமைச்சர் கூற ...படை மஹாராஷ்டிராவுக்கு பறந்தது..

அங்கு சென்று வீர சிவாஜி அவர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு...கையளவு மண்ணை அள்ளி மரியாதையுடனும்...வாஞ்சையுடனும்...தன் பையில் சேமித்து கொண்டார்...

 இதைக்கண்ட பத்திரிகைகள் வழக்கம் போல வினா எழுப்பின...

இந்த மண்..வீரமும்.. வெற்றியும்..நிறைந்த சிவாஜி மஹராஜ் பிறந்து வளர்ந்த மண்..
வியட்நாம் சென்றடைந்ததும் என் தேச மண்ணில் இந்த மண்ணை கலந்து விடுவேன்...

இனி வியட்நாம் மண்ணில் பல்லாயிரம் சிவாஜி மஹராஜ்கள் பிறக்கட்டும் என்றார் உணர்ச்சி வசப்பட்டவராக..

 இது போன்ற நிகழ்வுகள் நீங்கள் எங்கும் படிக்க நேர்ந்திருக்காது .இப்படி பாடபுத்தகத்தில் படித்து வீரம் மிக்க தலைமுறை ஏற்பட்டுவிட்டால்...

என்னாவது...???

நம் வீரமிக்க வீரர்கள்..பற்றி அறிந்து.. தேசப்பற்று மிகுந்து விட்டால் அன்னிய கைக்கூலிகள் பிழைப்பதேது...

ஆனாலும் மறைக்கப்பட்ட வரலாற்றை நாம் கூறுவோம்.. நம் சந்ததிக்கு..

வெட்ட வெட்ட துளிர்க்கும்.....

சில உண்மைகள் கசப்பது போல் இருந்தாலும் உண்மை ஒரு போதும் கசக்காது.

இந்து மதத்தைப் பற்றி ஒரு ஜெர்மன் பெண்ணிடம் பேசியதில் தெரிந்து கொண்டேன்

சனிக்கிழமை கோவிலுக்கு சென்றபோது அந்த காட்சி கிடைத்தது.

அசல் குஷ்புவுக்கு சித்தப்பா பெண் ஜாடையில் ஜெர்மன் பெண் ஒருவர் சேலைகட்டி  நின்றுகொண்டிருந்தார்,

அம்மணி ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கமாம், ஜெர்மனியிலிருந்து வந்திருக்கிறார்கள், அவரின் உடன் இருக்கும் அந்த பக்தைகள் பிரேசில், பெல்ஜியம், லண்டன், இன்ன பிற நாடுகள்.

அந்த ஜெர்மனி பெண்ணிடம் கத்தோலிக்க மதத்தில் இருந்து எப்படி இந்து தர்மத்துக்கு வந்தீர்கள் என முதலில் விளையாட்டாக கேட்டாலும் அந்த வெள்ளை அம்மணி சொல்ல சொல்ல இந்த பாட்சா படத்தில் ரஜினி சொல்ல சொல்ல அப்படியொரு வியப்பாக இருந்தது.

மத விளக்கத்தை அப்படி துல்லியமாக சொன்னாள் அந்த தேவதை.

ஆம் கிறிஸ்தவம் ஒரு கட்டளையிடும் மதம், இதோ கிறிஸ்து அவரை விசுவாசி இல்லை என்றால் நமக்கு நரகம் என்பதை தவிர ஒன்றுமில்லை.

அந்த பைபிள் என்பதை தாண்டி வேறு ஏதுமில்லாதது சுருக்கமாக கிறிஸ்தவம் என்பது பழைய பள்ளத்தை மூடிவிட்டு அதன் மேல் அமைத்த சிறு குளம்.

ஆனால் இந்துமதம் என்பது கடல், இந்துமகா சமுத்திரம் என்பது இந்து மதத்திற்கே பொருந்தும்.

அது மிக சுதந்திரமான மதம், பாவம் செய்யாதே என சொல்லும் ஆனால் பாவம் செய்தால் மறுபடி மறுபடி பிறந்து பாவத்தை தொலைக்க அது வாய்ப்பளிக்கும்.

அன்பே அதன் பிரதானம், அதன் தத்துவமும் ஆழமும் அகலமும் மிக மிக அதிகம், உலகிலே ஆன்மீக தத்துவத்தை அது எளிதாக சொல்வது போல் இன்னொரு மதம் சொல்லமுடியாது.

இந்துமதம் என்பது அறிவியலும் உளவியலும் ஆன்மீகமும் கலந்த புள்ளி, அதில் நின்றால் உடல் கெடாது , மனம் கெடாது, உள்ளம் கெடவே கெடாது

நாங்கள் ஐரோப்பியர்கள் எல்லாம் சுதந்திரமான மனப்பான்மை கொண்ட நாட்டின் மக்கள், எங்களுக்கு இதுதான் மிக பொருத்தமாக இருக்கின்றது, இம்மதம் யாரையும் காயப்படுத்தாது என்பது அதன் மகா சிறப்பு அது.

அம்மணிக்கு எல்லா தத்துவமும் தெரிந்திருக்கின்றது, அத்வைதம், த்வைதம், சைவம் வைணவம் என அது சொல்லி கொண்டே இருக்க அவ்வளவு ஆச்சரியமாக இருந்தது

யார் அவர்கள்? எங்கோ பிறந்து எப்படியோ வளர்ந்தவர்கள் ஆனால் உண்மை இந்த மதத்தில் இருக்கின்றது என ஓடிவந்து நிற்கின்றார்கள் ?

இந்துமதத்தில் சாதி உண்டே உங்கள் நாட்டில் அந்த வர்ணாசிரம தத்துவத்தை எப்படி பின்பற்றுகின்றீர்கள் என கேட்டால் அம்மணி சிரித்துவிட்டார்.

அது ஒரு காலத்தில் யூதமத கட்டுப்பாடு போல இங்கும் இருந்திருக்கலாம், காலம் மாற மாற அதுவும் மாறிவிட்டது.

இதோ நாங்கள் இந்துக்கள், ஆனால் ஜாதி என்றால் என்னவென்றே எங்களுக்கு தெரியாது அவசியமுமில்லை, எனக்கு தெரிந்து இந்த வார்த்தை உங்கள் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே பயன்படுமே அன்றி உண்மையான, பாமர இந்துக்களுக்கு அல்ல‌.

விடாமல் விவாதம் சென்றது, இந்த அசைவத்தை எப்படி விட்டீர்கள் என கேட்டால் அந்த தேவதை மாபெரும் தத்துவத்தை சொன்னது.

"கொஞ்சநாள் அதிலிருந்து விலகி இருங்கள், மறுபடி அதன் பக்கம் செல்ல மனம் வராது, வரவே வராது. அதை நினைத்தாலே அது நமக்கான உணவு அல்ல என்ற எண்ணம் தானாய் வரும்"

இன்னும் எவ்வளவோ கேள்விகளுக்கு பொறுமையாய் பதில் சொன்னது, எல்லா கேள்விக்கும் அவர்களிடம் பதில் இருக்கின்றது

இந்தியா ஒரு ஞான பூமி என்பதும், அதன் கலாச்சாரமும் ஆலயங்களும் காலம் காலமான தெய்வீக தத்துவங்கள் எனும் பெரும் நம்பிக்கையும் அவர்களிடம் தெரிகின்றது

கண்ணனும் ராமனும் வாழ்ந்த பூமியின் கலாச்சாரத்தில் வாழ்வது பெரும் வரம் என அவர்கள் பூரிக்கின்றார்கள்.

விஞ்ஞானம், பணம் என ஐரோப்பாவும் அமெரிக்காவும் பறந்தாலும் அவர்களின் உண்மை மனம் மெய்ஞானம் தேடி இங்குதான் வருகின்றது

விஞ்ஞானத்தை எந்த நாடும் கொடுக்கலாம், ஆனால் மெய்ஞானத்தை இந்நாடு மட்டுமே கொடுக்கமுடியும் என மனபூர்வமாக நம்பி ஓடிவருகின்றார்கள்

திருமணம் செய்யமாட்டார்களாம், கடவுளுக்காக கிறிஸ்தவ கன்னியர் இருப்பது போல கண்ணனுக்காக அவர்கள் வாழ்வார்களாம்.

இவ்வளவுக்கும் அவர்களுக்கு கல்வி வேலை இன்னபிற கொடுத்து மதமாற்றம் நடக்கவில்லை, சூரியன் முன் பனி உருகுவது போல தானாய் நடந்திருக்கின்றது.

எங்கள் நாட்டில் பலர் இந்துக்களில் இருந்து கிறிஸ்தவராய் மாறும் பொழுது பலர் மாற்ற படாதபாடு படும்பொழுது உங்கள் நாட்டில் நிலை என்ன என கேட்டேன் அம்மணி இப்படி சொல்லிற்று,

உங்கள் நாட்டில் இந்துக்கள் கிறிஸ்தவர்களாய் மாறும் வேகத்தில் எங்கள் நாட்டில் கிறிஸ்தவர் இந்துக்களாய் மாறிவருகின்றனர்

நாளையே இந்தியா கிறிஸ்தவ நாடானாலும் நாளை மறுநாளே அது மறுபடி இந்து நாடாகும் அதில் சந்தேகமில்லை வெட்ட வெட்ட துளிர்க்கும் மரம் அது.

ஆக ஐரோப்பா கிறிஸ்துவத்தை இங்கே தள்ளிவிட்டு இந்து மதத்தை அது எடுத்து கொண்டிருக்கின்றது

புல் அதிகமானால் மானும் மான் அதிகமானால் புலியும் அதிகமாகும் என்பது இயற்கையின் கணக்கு.

மதங்களுக்கும் அதே தத்துவம் இருப்பது ஆச்சரியம்.

அவர்களிடம் பேச பேச அங்கேயே உத்திராட்சம் கொடுத்து அமர வைத்துவிடுவார்களோ என்ற அச்சம் மேலோங்கியது,

அடச்சீ .. இருந்தால் அந்த காஞ்சிமடத்தின் பழைய மகான் சந்திரசேகர சாமி போல அல்லவா ஒரு துறவி இருக்க வேண்டும். என்ற நினைவும் அந்த முகமும் வந்தது.

சென்று வருகின்றேன் என கிளம்பும்பொழுது இந்திய பாணியில் வணங்கி ஹரே கிருஷ்ணா என அவர்கள் சொல்லும் பொழுது  இனம்புரியா மகிழ்வொன்று வந்து சென்றது.

பகவான் கண்ணன் அப்படியான இடத்தை உலகில் பெற்றிருக்கின்றான், அவனை உணர்ந்து கொண்ட பக்தைகள் அவனை உலகில் எல்லா மூலையில் இருந்தும் வணங்கி கொண்டே இருக்கின்றார்கள்.

நாஸ்டர்டாமஸ் சொன்னபடி ஐரோப்பா உலகின் மிக பழமையான மதத்தை ஒரு காலத்தில் ஏற்றே தீரும் என்பது தெரிகின்றது

கண்ணனும் ராமனும் அவர்களை அப்படி ஆட்கொள்கின்றார்கள்.

தாயெனும் ஆசான் !

படித்ததில் எனது மனதை தொட்டது :
ஓர் வார இறுதிக்குபின் திங்கட்கிழமை காலை வகுப்பினுள் நுழைகிறார் ஆசிரியை சுமதி அவருக்கு ஒரு வழக்கம் இருந்தது.
அதுதான் வகுப்பறைக்குள் நுழைந்ததுமே மாணவர்களைப்பார்த்து 'Love you all!' என்று சொல்வது. அவர் பொய் சொல்கிறார் என்று அவருக்கே தெரியும்.
ஏனெனில் அந்த வகுப்பிலுள்ள ஒரேயொரு மாணவனை மட்டும் அவரால் நேசிக்கமுடியவில்லை. ஒழுங்காய் உடுத்தாத, எதிலுமே ஒழுங்காய் இல்லாமல் சுட்டிக்காட்டுவதற்கு எந்தவொரு பொசிடிவ் அட்டிடியூடும் இல்லாத 'டெடி'என்கிற தியோடர்! அவனுடன் மட்டும் ஆசிரியை சுமதி நடந்துகொள்ளும் விதம் வித்தியாசமானது! எந்தவொரு தவறான விஷயத்திற்கும் அவனையே உதாரணம் காட்டினார்.எந்த நல்ல விஷயத்திற்கும் அவனை நிராகரித்தார்.
அவ்வாண்டிற்கான காலாண்டு பரீட்சை வந்தது. முன்னேற்ற அறிக்கைகள் வகுப்பாசிரியர்களிடமிருந்து தலைமை ஆசிரியரின் கையெழுத்து க்கு அனுப்பப்பட்டது.
ரிப்போர்ட்களை ,மேற்பார்வை செய்து கையொப்பமிடுத்துக்கொண்டிருந்த தலைமை ஆசிரியர் ,ஆசிரியை சுமதியை அழைப்பு விடுத்தார்.
அவர் வந்ததும், 'முன்னேற்ற அறிக்கை என்பது ஒரு பிள்ளையின் முன்னேற்றத்தை அறிவிக்கவேண்டும். தன் பிள்ளைக்கும் ஓர் எதிர்காலம் உண்டென்ற நம்பிக்கையை பெற்றோருக்கு தரவேண்டும்! நீங்கள் எழுதியிருப்பதை பார்க்கும்போது பெற்றோர் அவன்மீது நம்பிக்கை இழந்துவிடுவார்கள்!’ என்று கேள்விக்குறியுடன் டெடியின் முன்னேற்ற அறிக்கையை காட்டிக்கேட்டார்.
உடனே சுமதி 'என்னால் ஒன்றுமே செய்யமுடியாது. அவனைப்பற்றி எழுதுவதற்கு என்னிடம் ஒரு நல்ல விஷயம்கூட இல்லை!' என்றார்.
உடனே தலைமை ஆசிரியர் அங்குள்ள நிர்வாக ஊழியர் ஒருவரிடம் கடந்த ஆண்டுகளுக்கான டெடியின் முன்னேற்ற அறிக்கைகளை சுமதிக்கு கொடுக்குமாறுபணித்தார். அறிக்கைகள் வருகிறது. ஒவ்வொரு ஆண்டாய் விரித்துப்படிக்கிறார் சுமதி
மூன்றாம் வகுப்பறிக்கை சொன்னது ' வகுப்பின் மிகத்திறமையான மாணவன் டெடி'. தான் வாசித்ததை நம்பமுடியாமல் அதிர்ச்சியில் உறைந்துபோனார் சுமதி
நான்காம் ஆண்டறிக்கை சொன்னது. ' டெடியின் தாய் இறுதிநிலை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் டெடி மீது முன்னர்போல அவரால் கவனம் செலுத்தமுடியவில்லை. அதன் விளைவு அவனிடம் தெரிய ஆரம்பித்திருக்கிறது. '
ஐந்தாம் ஆண்டின் அறிக்கை இவ்வாறு சொன்னது, "டெடியின் தாயார் இறந்துவிட்டார்.அவனுக்கு அவசரமாய் வழிகாட்டல் தேவைப்படுகிறது. இல்லையேல் நாம் அந்தக்குழந்தையை இழந்துவிடுவோம்.!'
கண்களில் கண்ணீருடன் சுமதி தலைமை ஆசிரியரைப்பார்த்து சொன்னார். 'என்ன செய்யவேண்டுமென்று எனக்கு தெரியும்.'
அடுத்த திங்கள் காலை ஆசிரியை வகுப்புக்கு சென்று பிள்ளைகளை பார்த்து வழக்கம்போல் 'Love you all 'என்றார். இம்முறையும் அவர் பொய் சொல்கிறார் என்று அவருக்குத்தெரியும். ஏனென்றால், தற்போது மற்றக்குழந்தைகளைவிட டெடி மீதிருக்கும் அவரது அன்பு அளவுகடந்திருந்தது... டெடியுடனான தன் அணுகுமுறையை உடனே மாற்றுவதென்று அவர் தீர்மானித்திருந்தார். அதன் பின்னர் ஒவ்வொரு நல்ல விஷயத்திற்கும் டெடியின் பெயர் உச்சரிக்கப்பட்டது. ஒவ்வொரு தவறான உதாரணங்களின்போதும் அவன் பெயர் கவனமாய் தவிர்க்கப்பட்டது…
அவ்வாண்டின் பள்ளி இறுதிநாள்
வந்தது. எல்லா மாணவர்களும் தம் ஆசிரியருக்கென பரிசுகள் கொண்டுவந்திருந்தார்கள். அதற்குள் ஒரு பொட்டி மட்டும் ஓர் பழைய செய்தித்தாளால் சுற்றப்பட்டிருந்தது. ஆசிரியை சுமதி க்கு அதை பார்த்ததுமே அது டெடியிடமிருந்துதான் வந்திருக்கவேண்டுமென உள்ளுணர்வு சொல்லியது. முதலில் அதையே பிரித்தார். பிரித்ததும், அதனுள் பாதி உபயோகித்த சென்ட் பாட்டில் ஒன்றும், சில கற்கள் கழன்று விழுந்த பிரேஸ்லெட் ஒன்றும் இருந்தது. அது டெடியினது என்று புரிந்துகொண்ட முழு வகுப்பறையுமே சிரித்தது. ஒன்றுமே சொல்லாமல் ஆசிரியை சுமதி அந்த வாசனைத்திரவியத்தை தன்மீது பூசிக்கொண்டார். அந்த பிரேஸ்லெட்டை எடுத்து கையில் அணிந்துகொண்டார்.
மெல்லியதாய் ஒரு கால்வாசி புன்னகையுடன் டெடி சொன்னான்.'' இப்போது உங்களிடம் என் தாயின் வாசம் வருகிறது. இறக்குமுன் அவர் இறுதியாய் பாவித்த சென்ட் இதுதான். இந்த பிரேஸ்லெட்தான் பெட்டியுள் வைக்குமுன் அவர் உடலில் இருந்து அகற்றப்பட்டது!”
ஓராண்டு கழிந்தது. ஆசிரியை சுமதி மேசையில் ஓர் கடிதம் கிடந்தது. ''
‘I have seen few more teachers. But you are the best teacher I have ever seen’. With love Teddy.
ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் ஒரு கடிதம் கிடைத்தது. அதே வரிகளுடன்…
‘I have seen few more teachers. But you are the best teacher I have ever seen’. With love Teddy.
ஆண்டுகள் பல வேகமாய் உருண்டன. அவர்களுக்கிடையேயான தொடர்பு எப்படியோ அறுந்துபோனது. ஆசிரியை சுமதி ஓய்வுபெற்றிருந்தார். பல ஆண்டுகளின் பின்னர் அவருக்கு ஒரு கடிதம் வந்து சேர்ந்தது. கடிதம் டாக்டர் தியோடரிடமிருந்து...
Mrs. Sumathi
‘I have seen many more people in my life. are the best teacher I have ever seen’, I am getting married. I cannot dream of getting married without your presence. This is your Teddy.
Dr. Theodore
அத்துடன் போய்வர விமான டிக்கட்டுக்களும் இணைக்கப்பட்டிருந்தன.ஆசிரியை சுமதிக்கு இருப்பு கொள்ளவில்லை. அவரிடம் அந்த சென்ட் பாட்டில் தற்போது இல்லை. பிரேஸ்லெட் பாதுகாப்பாய் இருந்தது. அதை அணிந்துகொண்டு churchற்குப்புறப்பட்டார்.
அங்கு சென்று பின் இருக்கையொன்றில் அமர முற்பட்டபோது அங்கிருந்த ஊழியர்கள் அவரை எப்படியோ அடையாளம் கண்டுகொண்டு முன் வரிசையில் இருந்த ஆசனம் ஒன்றை நோக்கி அழைத்து சென்றனர். அவருக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் எழுதப்பட்டிருந்தது ''MOTHER ".
திருமணம் முடிந்தது. தியோடர் தன் புது மனைவியிடம் ஆசிரியை சுமதியை அறிமுகம் செய்துவைத்தார். ''இவர் மட்டும் இல்லையென்றால் நான் இன்று இந்த இடத்தில் நின்றிருக்கவே முடியாது' தியோடரின் கண்களில் கண்ணீர்.
ஆசிரியை சுமதி பெண்ணைப்பார்த்து சொன்னார் ' டெடி இல்லையென்றால், ஒரு ஆசியர் தன் மாணவர்களுக்கு முதலில் ஒரு தாயாய் இருக்கவேண்டுமென்பதை நான் அறிந்திருக்கவேமுடியாது!''
.
.
.
.
உங்கள் வகுப்பிலும் ஒரு டெடி இருக்கிறான். உங்கள் உதவிக்காக காத்துக்கொண்டிருக்கிறான். உங்களாலும் அந்த ஆசிரியை சுமதியாக இருக்கமுடியும்!
இனி அடுத்த திங்கட்கிழமை காலை வகுப்பறைக்குள் நுழையும்போது ஒரு ஆசிரியராய் இல்லாமல் தாயாய் நுழைந்துபாருங்கள்! உங்களால் ஒரு பிள்ளையின் வாழ்க்கையில் நல்லதோர் திருப்புமுனையாய் இருக்கமுடியும்.

சமீபத்திய பதிவுகள்

கும்பகோணம் டிகிரி காபி

கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா? பித்தளை அல்லது தாமிரத்தாலான சற்றே மெகா சைஸ் ஃபில்டர்கள், ‘டம்ளர் - டவரா செட்’கள் இவைதான் கும்பகோணம்...