*நெகட்டிவிட்டியை மனதிற்கு எடுத்துச் செல்வதை தடுக்கும் வழிமுறைகள்!*
நம்மைப் பற்றி எதுவுமே தெரியாமல் சிலர் பேசுவதை கேட்கும்போது மனதிற்கும், உடலுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்துகிறது. மற்றவர்களின் பேச்சு, செயல் நம்மை பாதிப்பதற்கு நாம் அனுமதித்தால், ஸ்ட்ரெஸ், நம்முடைய மதிப்பை நாமே குறைத்து எடைப்போடுவது, வேலையில் தோய்வு போன்றவை ஏற்படும். இதை மாற்றுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
* மற்றவர்கள் நம்மை இகழ்ந்தோ அல்லது அலட்சியப் படுத்தி பேசுவதோ நம்முடைய குணத்தை காட்டவில்லை. அது அவ்வாறு பேசுபவர்களின் குணத்தையே பிரதிபலிக்கிறது என்பதை உணர வேண்டும்.
* ஒருவரின் பேச்சு அல்லது செயல் எது உங்களை வருத்தப்பட செய்தது. உதாரணத்திற்கு சிலர் நாம் புன்னகைத்தால் கூட திரும்பி புன்னகைக்காமல் செல்வதுண்டு. அதற்கு காரணம் அவர் இன்ட்ராவெர்ட்டாகக் கூட இருக்கலாம். எனவே சின்ன விஷயங்கள் கூட நம்மை பாதிக்கும் அளவிற்கு நம் மனதை பலவீனமாக வைத்துக்கொள்வதை நிறுத்துங்கள்.
* நம்மைப் பற்றி மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு வருத்தப்படுவதை விட்டுவிட்டு அதில் ஏதேனும் உண்மை இருக்கிறதா? என்று ஆராய்ந்து பார்த்து திருத்தி கொள்வது நம்முடைய வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
* எல்லோரையும் நம்மால் சந்தோஷப்படுத்த முடியாது. நம்முடைய செயல் சிலருக்கு பிடிக்கலாம், சிலருக்கு பிடிக்காமல் போகலாம். அதற்காக நாம் ஒன்றும் செய்ய முடியாது. அது அவர்களுடைய பிரச்சனை.
* நாம் செய்யும் தவறுகளை வைத்து நம்மை முழுமையாக வறையறுக்க முடியாது என்பது புரிந்து கொள்ள வேண்டும்.
* நம்முடைய மதிப்பு என்பது நாம் யார் என்பதிலும், நாம் செய்யும் செயலிலுமே உள்ளது. மற்றவர்கள் நம்மை பற்றி பேசுவது நம் மதிப்பை முடிவு செய்வதில்லை.😊
* அடுத்தவர்களின் செயலையோ, பேச்சையோ நம் மனதிற்கு கொண்டு செல்லாமல் இருப்பதன் மூலம் மற்றவர்களிடம் எந்த தயக்கமுமின்றி சுலபமாக பழகலாம்.
* அடுத்தவர்களின் செயல் அவர்களின் மனநிலையையே பிரதிலிக்கிறது என்பதை உணரும்போது நமக்கு தன்னம்பிக்கையும், மகிழ்ச்சியும் பிறக்கும்.
* தேவையில்லாத பிரச்சனைகள், அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்தை மனதிற்கு கொண்டு செல்லாமல் விடுவது ஸ்ட்ரெஸ், பதற்றம் போன்றவற்றை வர விடாது. எது நமக்கு தேவையோ அதில் மட்டும் கவனம் செலுத்த முடியும்.
* இவ்வாறு இருக்கும்போது எதையுமே துணிச்சலோடும், பாசிட்டிவ்வாகவும், நம்பிக்கையுடனும் எதிர்க்கொள்ளும் பலம் கிடைக்கும். தேவையில்லாத சுமைகளை இறக்கி வைத்துவிட்டு மனநிம்மதியை பெற்று மகிழ்ச்சியாக வாழலாம்.✍🏼🌹
0 Comments