அட்சய லக்ன பத்ததி

  நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களுடன்.....

அட்சய லக்ன பத்ததி - இது எங்கேயோ கேட்டது போல இருக்கிறது என எண்ணுகின்றீர்களா தோழர்களே !

ஜோதிடத்தில் புதுமை படைத்து வரும் அட்சய லக்ன பத்ததி பாரம்பரிய முறை ஜோதிடத்தில் ஒரு புதிய மைல்கல்.

இதனை வடிவமைக்க நிறைய ஆண்டுகள் ஆராய்ச்சி மேற்கொண்டு, பல நூறு ஜாதகங்களை ஆய்வு செய்து, எளிமையாக அனைவரிடமும் கொண்டு சேர்க்க முனைந்திருக்கின்றார் திரு பொதுவுடை மூர்த்தி அவர்கள். 

ALP - அட்சய லக்ன பத்ததி முறையினை அனைவரிடமும் கொண்டு சேர்க்க இதற்கென மொபைல் மென்பொருள் உருவாக்கி, ஒரு விஷயம் குறித்து கேட்போமேயானால்... இந்த விஷயம் நடக்குமா நடக்காது என்று அறுதியிட்டு கூறும் வகையில்... நடக்குமென்றால் இந்த குறிப்பிட்ட காலத்தில் நடக்கும் என்றும் நடக்காது என்றால், எவ்வளவு காலம் என்று அறுதியிட்டு கூறும் வகையில், இந்த அட்சய லக்ன பத்ததி முறை தெளிவுபடுத்து கின்றது.

ALP - முறையினை கற்கவும், இந்த மொபைல் மென்பொருளிலே ட்ரெயினிங் வீடியோக்கள் 103 கொடுத்துள்ளார். இது அடிப்படை பகுதி கொண்ட வெர்ஷன் என்றும், உயர் நிலை மென்பொருள் விரைவில் வருமென கூறுகின்றார் திரு பொதுவுடைமூர்த்தி அய்யா அவர்கள்.

நானும் பல ஜாதகங்கள், பல திருமணம் குறித்து ஆய்வு இந்த முறையினை பயன்படுத்தி பலன் உரைத்தது அனைத்தும் சிறப்பாக இருந்ததாக வந்தவர்கள் சொல்ல கேட்கும் போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. 

இந்த முறையில் சில ஜாதங்களை ஆய்வு செய்த விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணியுள்ளேன் நண்பர்களே....

சமீபத்திய பதிவுகள்

கும்பகோணம் டிகிரி காபி

கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா? பித்தளை அல்லது தாமிரத்தாலான சற்றே மெகா சைஸ் ஃபில்டர்கள், ‘டம்ளர் - டவரா செட்’கள் இவைதான் கும்பகோணம்...