விடியல்

போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியதாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றன்.

தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறு அவனை வென்ற அரசன் கட்டளை பிறப்பித்தான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்றுஅங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.

தோல்வி கண்ட அரசன் மிகவும் மனவருத்தம் கொண்டான். மனச்சோர்வினால் துணிவு இழந்தான். ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது.

அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தைக் கவர்ந்தது. குகையின் ஒரு பகுதியினுள்  ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.

இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கடைவிடாமல் மறுபடியும் மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்?

நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்” என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.

தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.

பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!

தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…! 

   சிலந்தி வலை...

சிலந்திகளின் வயிற்றுப்பகுதியில் இருக்கும் நாளங்கள்தான் வலை பின்னத்தேவையான பசை போன்ற இழைகளைத் தருகின்றன என்பது நமக்குத் தெரிந்திருக்கும். ப்ரோட்டீன் நிறைந்திருக்கும் அந்த இழைகள் சிலந்திகளின் வயிற்றிலிருந்து வெளிப்பட்ட உடனே கெட்டியாகி நூல் போல் மாறி விடுகிறது. Golden Spider (“தங்கச் சிலந்தி” என்று அழைக்கலாமா? ) என்ற ஒருவகை சிலந்தியின் இழைகள், அதே தடிமனுள்ள இரும்பு இழையை விட பலமானது. அதே போல் மடகாஸ்கரில் இருக்கும் Darwin Bark Spiders வகை சிலந்திகள் 82 அடி நீள இழைகளை உருவாக்கும் திறன் பெற்றவை. இவை உருவாக்கும் வலைகள் 30 சதுர அடிகள் வரை இருக்கும்.

ஒன்று தெரியுமா??? சிலந்திகள் தங்கள் வலைகளை ஓரங்களில்தான் முதலில் பின்னத்தொடங்குகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக நடுப்பகுதியை நோக்கி பின்னிக்கொண்டே வந்து முடிக்கின்றன.

நடுரே.....

ஒரு மாணவன் ஆங்கில வாத்தியாரிடம் ஒரு சந்தேகம் கேட்டானாம்....
"சார் 'நடுரே' னா என்னது?"

சார் அப்றம் சொல்றேன்னு சமாளித்து, டிக்சனரியில் தேடி தேடி ஓய்ந்து போனார்...
அவனைக் கண்டால் காணாதது போல இருந்தார்...
இருந்தாலும் அந்த மாணவன் அவரை விடாமல் தொலைத்து எடுத்தான்....
"சொல்லுங்க சார்???.."
வாத்தியார் அவனிடம் சரி ஸ்பெல்லிங் சொல்லு என்றார்

அவன் "N A T U R E" சொல்ல

கடுப்பாகி போன சார் ஏன்டா 'நேச்சர்' னு சொல்லாமல் என்ன சாவடிச்சியா நீ... உன்ன ஸ்கூல் விட்டே அனுப்புறேன் இருனு கத்தினார்....
உடனே சார் காலில் விழூந்து
அழுதான்....

சார்... அப்படி எல்லாம் பண்ணிடாதீங்க...
என் புடுரே (FUTURE) வீணாயிடும்...

சமீபத்திய பதிவுகள்

கும்பகோணம் டிகிரி காபி

கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா? பித்தளை அல்லது தாமிரத்தாலான சற்றே மெகா சைஸ் ஃபில்டர்கள், ‘டம்ளர் - டவரா செட்’கள் இவைதான் கும்பகோணம்...